Showing posts with label இசைஞானி. Show all posts
Showing posts with label இசைஞானி. Show all posts

Wednesday, April 2, 2014

நகர மறுக்கும் நினைவுகள் – 9 - கொடியிலே மல்லிகைப்பூ

படம் :  கடலோரக் கவிதைகள்

விடியற்காலையில் எழும் சிதம்பரம் கோயில் மணி ஓசையாய் வரிகள் ஆரம்பமாகின்றன். (ஒரு வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரர்- ஜெயச்சந்திரன்)

அன்பினைப் பகிர்தல் மட்டுமே அடிப்படையாக அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள்.

மிகச் சிறிய குழந்தையின் தீண்டல் நம் வலிகளை எல்லாம் தீர்ப்பது போல் இப் பாடல் நம் வலிகளை தீர்க்கிறது.

தலைவன் தலைவி இருவரும் கடல் சூழ் பாறை அருகினில். தவைவனுக்கு முள் குத்திவிட்டது. தலைவி எடுத்து விடுகிறாள். பாடல் ஆரம்பமாகிறது. பின் புறத்தில் காலைச் சூரியன்.

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

ஒரு ஆடு காண்பிக்கப்படுகிறது. தலைவி அதைத் துரத்துகிறாள். கைகளில் எடுக்கிறாள். தட்டாமாலை சுற்றுகிறாள். கடல் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

தலைவி வீட்டுக்குள் நடை பழகுகிறாள். அவள் பார்ப்பது ஏசு பிரான் படம்.

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

தலைவி நினைத்துப் பார்க்கிறாள். தலைவன் புத்தகங்களுடன். அவளுக்குள் புன்னகை.
வித விதமான புகைப்படங்களுக்கு தலைவி முகம் காட்டுகிறாள்.
பின்புறத்தில் கடல் அலைந்து கொண்டிருக்கிறது.

கடற்கரை மணலில் ' ABCD' எழுதப்பட்டிருக்கிறது. எதிர் எதிர் திசைகளில் இருவரும். இசைக்கு ஏற்றவாறு கடல் அலை வேகமாக பாய்கிறது.
மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறாள். மனம் நிச்சயமில்லாமல் இருக்கிறது. கனவுக்குள் இருக்கிறாள்.

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்.

தலைவன் பல் விளக்குகிறான்கையில் நீர்ப்பாத்திரம். கொப்பளிபதற்கு பதிலாக அருந்துகிறான்.

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

இது மீண்டும் நிகழ்கிறது. அன்னை வேடிக்கைப் பார்க்கிறாள். ஆச்சரியப்படுகிறாள்.

மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்.

தலைவி மிகப் பெரிய இடத்தில் நடந்து வருகிறாள்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல

மேற்கே சூரியன வந்து விடுகிறது.

சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால

தலைவி பாறை மேல் அமர்ந்திருக்கிறாள். மீன் பிடித்து வரவா என்கிறான் தலைவன். வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள் தலைவிஅதைக் கேட்காமல் கடலுக்குள் ஓடிச் செல்கிறான்.
மிகப் பெரிய அலையில் தலைவன் விழுகிறான்.
தலைவி திகைக்கிறாள். மீண்டும் அலைகள் மட்டும் வருகின்றன. தலைவனைக் காணோம்.

பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது

விழிகள் நாலா புறமும் அலைகின்றன. தலைவனைக் காண்வில்லை.

தலைவன் பிடித்துவந்த மீனைவைத்து பின்னால் இருந்து பயமுறுத்துகிறான்.

பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு

தலைவன் கேள்வி கேட்கிறான்.'பயந்துட்டியா'
காட்டி அசைகிறது.

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு

இருவரும் சிரித்து மகிழ்கிறார்கள்.
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே

மீண்டும் நிஜங்களுக்கு காட்சி வருகிறது. வீட்டில் அனைவரும் சாப்பாட்டிற்கு தயாராக இருக்கிறார்கள்.

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே.

கணத்தில் காட்சி மாறுகிறது. சில வினாடிகளுக்கு காட்சி தொடர்கிறது.

மனித மனங்களின் விசித்திரங்களில் ஒன்று அலைப்பார்த்தல். அதை உருவமாக ஆக்கி செய்திருக்கும் காட்சி அமைப்பு மிக ஆச்சரியம்.

அதனால் தான் மல்லைகையின் வாசம் மனதையும் விட்டு அகலாமல்

Friday, March 14, 2014

நகர மறுக்கும் நினைவுகள் - 7 - கனவு காணும் வாழ்க்கையாவும்..

படம் : நீங்கள் கேட்டவை

கண்கள் அற்றவனின் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயத்தின் ஒலிகளாய், மரணமும் மயானம் நோக்கி நகர்தலில் துவங்குகிறது பாடல்.

எதிர் எதிர் நிகழ்வுகளை ஒன்று படுத்தி காட்சி ஏற்படுத்தி இருக்கிறார் பாலு சார்.

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள் 
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

மனிதனின் அழுகை பதிவு செய்யப்படுகிறது. மீண்டும் பிணம் எரிகிறது. நாய்கள் தனது தாயிடம் பால் அருந்துகின்றன.

மயானத்திலிந்து மனிதன் நடந்து வருகிறான்.சிறிய குழந்தை தனது கண்களை உருட்டிப் பார்க்கிறது. அடுத்த காட்சியில் கல்லறைகள்.

பிறக்கின்ற  போதே, பிறக்கின்ற  போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே

பாடுபவன் பாடிக் கொண்டே நடந்து வருகிறான். லாட்டரி சீட்டு வியாபாரம் நடக்கிறது. காமம் அரங்கேற்றம் கொள்கிறது.

ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே

அசைவுகள் அற்று வயதானவன் படுத்திருக்கிறான்.

உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே...

மிகப் பெரிய மனித கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சினிமா விளம்பரப் பலகைகள். படத்தின் பெயர் ஊமை ஜனங்கள். மீண்டும் மெல்லிய சூரிய கதிர்கள் வானில் இருந்து பிரகாசிக்கின்றன. காற்று வேகமாக அடிக்கிறது. நீர் நிலைகளில் நீர் கடந்து கொண்டிருக்கிறது. மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீர் நிலைகளும் பிறகு நீர் அற்றதால் வெடிப்புற்ற நிலங்களும் காட்சிகளில்.

காலங்கள் மாறும், காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்.
சிறிய குழந்தை அழும் காட்சியும், வயதான மூதாட்டியின் நிலை பெற்ற பார்வையும். கடற்கரையினில் காதலர்களும் அதைத் தொடந்து வயதானவனின் நிலை பெற்ற பார்வையும்.

தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்.

வாகனத்திற்கு வெளியே காலகளை நீட்டி ஒருவன் உறங்குகிறான். குழுக்களாய் மனிதர்கள் ஏதோ ஒன்றைத் தேடுபவர்களாய்.

நட்சத்திர ஒட்டலும் பின்பு உழைப்பாளர் சிலையும். பாடல் தொடர்கிறது.

பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்  தானே ஆனந்தம்

இசைத்துக் கொண்டே பாடுபவன் அமர்ந்திருக்கிறான்.

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

உறுத்தாத கணவன் மனைவி உறவாய் பாடலும் இசையும் மிக சரியான விகிதத்தில்.

முள்ளை முள்ளாய் எடுப்பது போல், மிக அதிக மனப் பாரங்கள் இருக்கும் காலங்களில் தனித்து இப்பாடலை கேட்கும் போது இப்பாடல் வலிகளை மருந்தாய் இட்டுச் செல்கிறது.

அருவி நம் உடலை தூய்மை செய்வது போல் பாடல் வரிகளும் இசையும் காட்சி அமைப்பும் நம் மனப் பாரங்களை நீக்குகின்றன.


நிலையாமைத் தத்துவங்களின் மிக முக்கிய பணி தன்னை உணர்தல், தன் வலி உணர்தல். அதை இப்பாடல் மிக சிறப்பாகவே செய்கிறது. அதனால் தான் இன்னும் கனவு காணும் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது.