Showing posts with label தாய். Show all posts

Thursday, March 13, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 6

மனிதர்களை விட வீடுகள் அதிகமாக வலிகளை உள்வாங்குகின்றன.
-------------------------------------------------------------------------------விடுமுறை தினத்தில் எழுப்பப்படும் குழந்தைகளின் '5 மினிட்ஸ் ப்ளிஸ்என்ற வார்த்தைகள் நூறு   ஆயிரம் சிறகசைப்புகளை தோற்றுவிக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு பனித்திருக்கும்  கண்களும் உணர்த்துகின்றன தனது ப்ராத்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டதை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இருக்கை முன் அமர்த்து செல்லும் 3 வயது பெண் குழந்தை 'வெவ்வே' என்று பழிப்பு காட்டுவதில் பயணம் முடிந்து விடுகிறது. நினைவுகள் மட்டும் தொடர்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உதிரும் சொற்களை விட உலரா கண்ணீரும், அதன் சார்ந்த மௌனமும் பெரும் காயம் ஏற்படுத்துகின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காலை நேரத்தில் வெற்று காகிதத்தை விரட்டி சிறு நாயின் சந்தோஷம் மனித சந்தோஷங்களை விட மிக அதிகமாக தெரிகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேருந்தில் பயணம் செல்பவர்களை விட அவர்களின் கனவுகள் அதிகமாக இருக்கின்றன. அக்கனவுகள் முதல் இழப்பை விட அதிக வலியுடன் இருக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வித்தை தெரிந்த வீரன் மரணத்தின் போது மட்டும் போராடுவதில்லைமரணம் வரும் வரை   போராடுவான்நான் வீரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனி மனித வாழ்வு எப்போதும் பிறரால் தீர்மானிக்கப் படுகிறது. உ.ம் பேருந்தில் ஜன்னல் அருகில் இருப்பவன் நமக்கும் சேர்த்து முடிவு செய்கிறான் நமக்கு காற்று வேண்டுமா இல்லையா என்று.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறுதலித்தலும் நிராகரிக்கப்படுவதும் வீட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஏன் எனில் அவைகள் உலகங்களால் கற்றுக் கற்றுத்தரும் போது வலிகள் அதிகமாக இருக்கும்.

Saturday, March 8, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 5

எதிர்பாராமல் குழந்தைகளால் பெறப்படும் முத்தங்களால் சில கனவுகள் கலைகின்றன. பல கனவுகள் உருவாகின்றன.
------------------------------------------------------------------------------------------
கொடுக்கும் கைகளை விட அதிக வலிமை வாய்ந்தவை இரக்கும் கைகள் அதைவிட வலிமை வாய்ந்தது வயிறு.
------------------------------------------------------------------------------------------
தன் கோபங்கள் உடைந்து மகிழ்வு பிறக்கும் நேரம் அலாதியானது.வாழ்வினில் என்ன இருக்கிறது தன் கோபம் உடைத்தல் தவிர.
------------------------------------------------------------------------------------------
பேருந்தில் பயணம் செய்பவர்களை விட புகைவண்டியில் பயணம் செய்பவர்களின் கண்களில் வெறுமை மிக அதிகமாக தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அட பிக்காளிப் பயலுகளா, மாட்டுப் பொங்கல்னா மாட்டுக்கு படைக்கிற பொங்கல்டா, மாட்டை வெட்டி பொங்கல் படைக்கறது இல்லடா
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கர்வம் கொள்வதில் பெண்கள் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதும் கர்வத்தை மறைக்க முடியவில்லை. தனது மகனிடம் முத்தம் பெறுவதில் தனி கர்வம் தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
த்யானம் - தனது மகளும் பேசிச் செல்லும் ஒவ்வொரு தகப்பனும் உணர்கிறான் இறைவனின் அருகாமையை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லா நாளும்  SMS அனுப்புறவன் ஃப்ரெண்ட் இல்ல, வருஷ பொறப்புக்கும் ஃப்ரெண்ட்ஷிப்டேக்கும்  அனுப்புறவன் தான் ஃப்ரெண்ட்.

அப்பன் காசில்  SMS அனுப்புவோர் சங்கம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னைக்கு புது வருஷம் பொறந்திருக்கு. இன்னைக்கு எங்கயும் வெளியில போக வேண்டாம். இந்த வருஷத்தில் இருந்தாவது சொல்லாமலே எல்லா வேலையும் நீங்களே செய்ங்க.

Mr.X : எனக்கு மட்டும் தான் லீவே கிடையாது போல. அது சரி அடிமைகளுக்கு ஏது சுய சிந்தைகளும்/சிந்தனைகளும்.

நிகழ்ச்சி இத்துடன் நிறைவு பெறுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏங்க இன்னைக்கு லீவு தானே,கொஞ்சம் கடைக்கு போய் காய்கறி வாங்கிகிட்டு வாங்க,பசங்கள டிராயிங் கிளாஸ்ல விட்டுட்டு வாங்க,பாட்டு கிளாஸ்லயும் விட்டு அழைச்சிகிட்டு வாங்க, T.Vம் மிக்ஸியும் ரிப்பேரா இருக்கு அத சரி பண்ணனும், காஸ் அடுப்பு ஒரே அழுக்கா இருக்கு, அத கொஞ்சம் தொடச்சி தாங்க.
ஏங்க இந்த வெண்டைக்காய வாங்கிட்டு வந்தீங்க, நல்லாவே இல்ல, அப்புறம் இன்னைக்கு இன்னும் வேல இருக்கு, ப்ரெண்ட்ஸ் வராங்கன்னு ஊர் சுத்த போயீடாதீங்க, இப்ப என்னா செஞ்சி கிழிச்சிட்டீங்க, பாட்டு வேண்டி கிடக்கு

மனைவி : என்னான்னே தெரிலங்க, ஒரே தலவலியா இருக்கு.

Wednesday, March 5, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 4

ஏங்க, இன்னைக்கு லீவு தான, கொஞ்சம் கடைக்கி போய் மளிகை சாமான் வாங்கி வந்திடுங்க,உங்க டிரஸ் எல்லாம் அயர்ன் கொடுத்து வாங்கி வச்சிருங்க, காலைல சாப்டமாட்டீங்க தானே(நான் எங்க சொன்னேன்), ஒரே தடவையா மதியம் சாப்டுக்கலாம், ரேஷன் போய்ட்டு வந்துடுங்க, பசங்க சட்டை எல்லாம் வாஷிங் மிஷின்ல போட்டு தொவச்சி அயன் பண்ணிடுங்க, என் வண்டிக்கு பெட்ரோல் போட்டு காத்து அடிச்சிட்டு வந்துடுங்க., நேந்து நீங்க காய வச்ச துணி எல்லாம் மாடில காயுது அதெல்லாம் எடுத்து வந்துடுங்க, இன்னைக்கு(ம்) டீவி உங்களுக்கு கிடையாது. இப்பவே கண்ண கட்டுதே.....
மாலை : என்னன்னே தெரில, இன்னைக்கு ஒரே டயர்டா இருக்கு.
அடிப்பாவி நான் பேச வேண்டிய வசனத்தை எல்லாம் இவ பேசறாளே...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாரும் அற்ற பொழுதுகளில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே தோழமைகளுடன் மனம் விட்டு சிரித்துப் பேசும் வாய்ப்பு எப்பொழுதாவது தான் வாய்க்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதன் கர்வம் அழித்தலில் மருத்துவ மனைகளில் பங்கு மகத்தானது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது மகளை பிறந்த உடன் தீண்டும் தந்தையின் கண்கள் எவரும் அறியாமல் எப்போதும் பனித்திருக்கின்றன. அது ஆயுட் காலம் முழுவதும் தொடர்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமணம் ஆன உடன் மனைவியுடன் வெளியில் செல்கையில் 'இந்தாம்மா மல்லிகை பூ 5 முழம் கொடு' என்று கடையில் கேட்பவனிடம் ஒரு புன்னகை கலந்த வெட்கம் தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாருமற்ற இரவில் கணவனை ஒரு கண்ணால் கண்டுவிட்டு, மகனுக்கு போர்வை போர்த்தி, அவனின் தலை கோதி கன்னத்தில் முத்தமிட்டு ஒரு நிண்ட பெருமூச்சுடன் உறங்க ஒரு தாயால் மட்டுமே முடிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன் மனைவியுடன் கை கோர்த்து நடக்கும் வாய்ப்பு ஒரு சில 'புண்ணியவான்'களுக்கே கிடைக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்து 'அவளுக்கு என்ன' எனும் பொழுதுகளில் அவளது கண்களில் தெரிகிறது உயிரின் வலிகள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித மனதின் பெரும் பாரம் குறைத்தலில் இறைமைக்கு அடுத்த நிலையில் குளியல் அறைகள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிக அதிக சந்தோஷத்தையும், மிக அதிக வலியையும் கொடுத்து இதயத்தை ஈரமாக்கும் நிகழ்வு தந்தைக்கு - தன் மகள் ருதுவாகும் போது.