ஏங்க,
இன்னைக்கு லீவு
தான,
கொஞ்சம் கடைக்கி போய்
மளிகை
சாமான்
வாங்கி
வந்திடுங்க,உங்க
டிரஸ்
எல்லாம் அயர்ன்
கொடுத்து வாங்கி
வச்சிருங்க, காலைல
சாப்டமாட்டீங்க தானே(நான் எங்க சொன்னேன்), ஒரே
தடவையா
மதியம்
சாப்டுக்கலாம், ரேஷன்
போய்ட்டு வந்துடுங்க, பசங்க
சட்டை
எல்லாம் வாஷிங்
மிஷின்ல போட்டு
தொவச்சி அயன்
பண்ணிடுங்க, என்
வண்டிக்கு பெட்ரோல் போட்டு
காத்து
அடிச்சிட்டு வந்துடுங்க., நேந்து
நீங்க
காய
வச்ச
துணி
எல்லாம் மாடில
காயுது
அதெல்லாம் எடுத்து வந்துடுங்க, இன்னைக்கு(ம்)
டீவி
உங்களுக்கு கிடையாது. இப்பவே
கண்ண
கட்டுதே.....
மாலை
: என்னன்னே தெரில,
இன்னைக்கு ஒரே
டயர்டா
இருக்கு.
அடிப்பாவி நான்
பேச
வேண்டிய வசனத்தை எல்லாம் இவ
பேசறாளே...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாரும்
அற்ற
பொழுதுகளில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே
தோழமைகளுடன் மனம்
விட்டு
சிரித்துப் பேசும்
வாய்ப்பு எப்பொழுதாவது தான்
வாய்க்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதன்
கர்வம்
அழித்தலில் மருத்துவ மனைகளில் பங்கு
மகத்தானது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது
மகளை
பிறந்த
உடன்
தீண்டும் தந்தையின் கண்கள்
எவரும்
அறியாமல் எப்போதும் பனித்திருக்கின்றன. அது
ஆயுட்
காலம்
முழுவதும் தொடர்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமணம் ஆன
உடன்
மனைவியுடன் வெளியில் செல்கையில் 'இந்தாம்மா மல்லிகை பூ
5 முழம்
கொடு'
என்று
கடையில் கேட்பவனிடம் ஒரு
புன்னகை கலந்த
வெட்கம் தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாருமற்ற இரவில்
கணவனை
ஒரு
கண்ணால் கண்டுவிட்டு, மகனுக்கு போர்வை
போர்த்தி, அவனின்
தலை
கோதி
கன்னத்தில் முத்தமிட்டு ஒரு
நிண்ட
பெருமூச்சுடன் உறங்க
ஒரு
தாயால்
மட்டுமே முடிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன்
மனைவியுடன் கை
கோர்த்து நடக்கும் வாய்ப்பு ஒரு
சில
'புண்ணியவான்'களுக்கே கிடைக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்து 'அவளுக்கு என்ன'
எனும்
பொழுதுகளில் அவளது
கண்களில் தெரிகிறது உயிரின் வலிகள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித
மனதின்
பெரும்
பாரம்
குறைத்தலில் இறைமைக்கு அடுத்த
நிலையில் குளியல் அறைகள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிக
அதிக
சந்தோஷத்தையும், மிக
அதிக
வலியையும் கொடுத்து இதயத்தை ஈரமாக்கும் நிகழ்வு தந்தைக்கு - தன்
மகள்
ருதுவாகும் போது.
No comments:
Post a Comment