Showing posts with label தந்தையும் மகளும். Show all posts

Saturday, August 16, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 10

தனது மகளை கல்லூரி அனுப்ப காத்திருக்கும் வேளையில் மகளை வாகனத்தில் இருத்தி தான் தரையில்நின்று   பேசும் தந்தையில் கண்களில்  மாறுதல் இல்லா ஒரு சந்தோஷம் தெரிகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேகத்தின் பணி தேகம் நீக்குதல் என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அம்மா என்று அழைத்தால் எவ்வாறு தாய் மகிழ்வாளோ, அவ்வாறே நாம் குருவினை அழைக்க அவர்கள்         பிரியப்பட்டு நம்மிடம் வந்து உறைகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(மகா)சந்தோஷம்
மனைவி :  ஏங்க, நான் மௌன விரதம் இருக்கலாம்ன்னு இருக்கேன்.
கணவன் : நான் இப்ப பூமியிலே இல்லையே. வானத்துல இருக்கேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனத்திருப்பவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வினைகளை அறுப்பவனையே பெரு வலிகள் வந்து சேர்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்கள் தங்கத்தை நேசிப்பதை விட தந்தைகள் மகள்களை நேசிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கர்வம் அழித்தலில் மருத்துவ மனைகளின் பங்கு மகத்தானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கற்றல் தாண்டி அறிதலை கொள்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மூச்சுக்காற்றில் சிக்கனம் காட்டுபவன் மயானம் அடையான்.

Saturday, April 12, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 9

போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
---------------------------------------------------------------------------------------------- 
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------- 
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும், கவலையும் தெரிகிறது.
---------------------------------------------------------------------------------------------- 
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின் கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காரினில் முன்னிருக்கையில் தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும் என்று நிஜமாகும்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது 
தான்  தெரிகிறது. (டேய், போடா, போடா)

Wednesday, March 5, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 4

ஏங்க, இன்னைக்கு லீவு தான, கொஞ்சம் கடைக்கி போய் மளிகை சாமான் வாங்கி வந்திடுங்க,உங்க டிரஸ் எல்லாம் அயர்ன் கொடுத்து வாங்கி வச்சிருங்க, காலைல சாப்டமாட்டீங்க தானே(நான் எங்க சொன்னேன்), ஒரே தடவையா மதியம் சாப்டுக்கலாம், ரேஷன் போய்ட்டு வந்துடுங்க, பசங்க சட்டை எல்லாம் வாஷிங் மிஷின்ல போட்டு தொவச்சி அயன் பண்ணிடுங்க, என் வண்டிக்கு பெட்ரோல் போட்டு காத்து அடிச்சிட்டு வந்துடுங்க., நேந்து நீங்க காய வச்ச துணி எல்லாம் மாடில காயுது அதெல்லாம் எடுத்து வந்துடுங்க, இன்னைக்கு(ம்) டீவி உங்களுக்கு கிடையாது. இப்பவே கண்ண கட்டுதே.....
மாலை : என்னன்னே தெரில, இன்னைக்கு ஒரே டயர்டா இருக்கு.
அடிப்பாவி நான் பேச வேண்டிய வசனத்தை எல்லாம் இவ பேசறாளே...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாரும் அற்ற பொழுதுகளில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே தோழமைகளுடன் மனம் விட்டு சிரித்துப் பேசும் வாய்ப்பு எப்பொழுதாவது தான் வாய்க்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதன் கர்வம் அழித்தலில் மருத்துவ மனைகளில் பங்கு மகத்தானது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது மகளை பிறந்த உடன் தீண்டும் தந்தையின் கண்கள் எவரும் அறியாமல் எப்போதும் பனித்திருக்கின்றன. அது ஆயுட் காலம் முழுவதும் தொடர்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமணம் ஆன உடன் மனைவியுடன் வெளியில் செல்கையில் 'இந்தாம்மா மல்லிகை பூ 5 முழம் கொடு' என்று கடையில் கேட்பவனிடம் ஒரு புன்னகை கலந்த வெட்கம் தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாருமற்ற இரவில் கணவனை ஒரு கண்ணால் கண்டுவிட்டு, மகனுக்கு போர்வை போர்த்தி, அவனின் தலை கோதி கன்னத்தில் முத்தமிட்டு ஒரு நிண்ட பெருமூச்சுடன் உறங்க ஒரு தாயால் மட்டுமே முடிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன் மனைவியுடன் கை கோர்த்து நடக்கும் வாய்ப்பு ஒரு சில 'புண்ணியவான்'களுக்கே கிடைக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்து 'அவளுக்கு என்ன' எனும் பொழுதுகளில் அவளது கண்களில் தெரிகிறது உயிரின் வலிகள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித மனதின் பெரும் பாரம் குறைத்தலில் இறைமைக்கு அடுத்த நிலையில் குளியல் அறைகள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிக அதிக சந்தோஷத்தையும், மிக அதிக வலியையும் கொடுத்து இதயத்தை ஈரமாக்கும் நிகழ்வு தந்தைக்கு - தன் மகள் ருதுவாகும் போது.