Showing posts with label கவிதை வடிவம். Show all posts
Showing posts with label கவிதை வடிவம். Show all posts

Friday, February 5, 2016

படைப்புகள் - அகம் புறம் - ஒரு சிறு பார்வை


(எவரையும் முன்வைத்து எழுதப்படவில்லை)

அகம்

·   நாம எல்லாம் எழுதினா போட மாட்டாங்க சார். அவங்களுக்குன்னு ஒரு குருப் வச்சிருக்கிறாங்க, அவன்க எழுதினாத்தான் போடுவாங்க.
·   நானும் 15 வருஷமா எழுதிகிட்டுத்தான் இருக்கேன் சார். ஒரு பயலும் மதிக்கிறதே இல்லை சார்.
·   சார், இவன்க எல்லாம் உள்ளுர் எழுத்தாளர்களை கொண்டா மாட்டாங்க, ரஷ்யா எழுத்துக்களை மட்டும் கொண்டாடுவாங்க.
·   முழு நேர படைப்பாளிகள்ன்னு யாரும் இல்ல சார். பொழுது போக்குக்காக படைக்கிறாங்க சார். அப்புறம் என்ன படைக்க முடியும்?
·   ஒரு வார பத்திரிக்கைக்கு ஒரு கவிதை எழுதி அனுப்சேன். நல்லா இருக்கு, நல்லா இல்ல அப்படீன்னு கூட பதில் அனுப்ப மாட்டேங்கறாங்க சார்.
·   எல்லாரும் ஈகோ புடிச்சவங்களா இருக்காங்க சார். அவன் தான், அவன் குருப்புதான் ஒஸ்தின்னு நினைக்கிறாங்க.

புறம்

·   படைப்பாளிகள் யாருமே படிக்கிறதே இல்ல சார். நினைச்சத எல்லாம் எழுதினா எப்படி சார் பத்திரிக்கையில போட முடியும்.
·   தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனோ இல்லையோ, பேனா புடிச்சவன் எல்லாம் கவித, கட்டுரைன்னு எழுத ஆரம்பிச்சா என்ன செய்ய முடியும்எல்லாருக்கும் சுஜாதான்னு நெனப்பு சார்.
·   இலக்கிய பத்திரிக்கைன்னு போட்டேன் சார். 1000 கவிதை வந்திருக்கிறது. என்னா செய்யறது சொல்லுங்க.
·   கதை, கவிதை கட்டுரைன்னு எழுதறாங்க சார், வல்லினிம் ஒற்று, மெய் எழுத்து மிகும் இடம், மிகா இடம் எதுவுமே தெரியல, அப்புறம் எப்டி நாங்க படிச்சி பப்ளிஷ் பண்ண முடியும்.
·   இருக்கும் ரோஜா தோப்பில் அழகான் ஒரு செடி நீ மட்டுமே - இப்படி கவிதை எழுதினா என்ன சார் செய்யறது? (காதுகளில் மெதுவாக - அழகான் - அழகானன்னு கூட தெரியல. அதுல கூட தப்பு பார்த்தீங்களா )
·   ஒரு புஸ்தகம் போடறது எவ்வளவு கஷ்டம்ன்னு இவன்களுக்கு தெரிய மாட்டேங்குது. அதான் சார் ப்ராபளமே
·   லாசரா வோட ஜனனி படிச்சிருக்கிறியா, குபாரா வோட விடியுமா படிச்சிருக்கிறியா, 4 படைப்பாளிகள் பேரை சொல்லி கேட்டா இவங்கள் எல்லாம் யாரு அப்படீங்கறாங்க. என்ன செய்ய சொல்றீக.
·   புஸ்தகம் போட்டா Review பண்றேன்னு ஒரு குருப் எல்லாதையும் வாங்கிட்டு போயிடுது. இதுல என்னா மிஞ்சும்ன்னு நினைக்கிறீங்க?


TRB Rating கம்மியாக இருப்பதால் இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைகிறது.

புகைப்படம் : R.s.s.K Clicks

Sunday, August 16, 2015

நகர மறுக்கும் நினைவுகள் - செம்பருத்தி




ஒரு நாள் பூ மார்கெட்டில் இருந்தேன்.

இதென்ன, செம்பருத்தி பூப்போல் இருக்கிறதே..
‘என்னா சார், அப்படி பாக்கிற. இது செம்பருத்தி பூ. எடுத்துக்க. 3 பத்து ரூபா. உனக்காக 4 தரேன்’.

டேய் மணி 4.30 ஆச்சு எழுந்திரி. போய் பூ எடுத்து கிட்டுவா.
தூக்கம் தூக்கமா வருது.

‘பூ எடுத்துகிட்டு வந்து சாமிக்கு போட்டா புண்ணியம்’. அன்று கட்டிய பூக்கள் இல்லாத காலம். (காலம் என்ன காலம் 1000 வருஷத்துக்கு முன்னாடியா, இப்பத்தான் 30 வருஷத்துக்கு முன்னாடி)

உறவுகளுடனும், நண்பர்களுடனும் பூவினை  பகிர்தல் என்பது இல்லாத காலம்.
இன்னைக்கு எப்படியும் ராமு வீட்டு அரளியையும், செல்லமா அவர்கள் வீட்டில் செம்பருத்தியையும் அந்த செந்தில் பயல் எடுக்குறத்துக்கு முன்னாடி எடுத்துடனும். உடல் வேகம் கொண்டது.

1.
அப்பாடா இன்னும் யாரும் வரல.அதால எல்லா பூவும் நமக்குத்தான்.

2.
ஓஹோ, இன்னைக்கு நீ அரளிப்பூ எடுக்கறயா. இரு நான் போயி செம்பருத்திப் பூ எடுத்து முடிச்சிடுறேன்.

n
கொஞ்சம் தூங்கிட்டேன். அதனால எல்லாப் பூவையும் அவன் எடுத்துட்டான்.

இரண்டு விதமான செம்பருத்தி. ஒன்று சாதாரண செம்பருத்தி, மற்றொன்று அடுக்கு செம்பருத்தி, ஒவ்வொன்றும் இப்போதைய உள்ளங்கைகளை விட பெரியது. கொஞ்சம் பவழமல்லி(பாரிஜாதம் என்பதை விட பவழமல்லி என்றால் வாசனை கூடத்தான்). பவழமல்லியை ஊசி நூலில் கோர்த்து பட அளவுக்கு போட்டா தனி அழகுதான்.

பெரியவர்களின் பேச்சுக்கள்
1.பாத்துப் போ, பூச்சி பொட்டு (பாம்புதானே) ஏதாவது செடில கிடக்கப் போவுது.
2.ஏண்டா இப்படி இத்தனை விடியக் காலையில வந்து பூ எடுக்குறீங்க. இன்னைக்கு .உங்க வீட்ட சொல்றேன். விடிஞ்ச பிறகு வாங்கடா?
3ஏண்டி கண்ணுகளா, எல்லா பூவையும் எடுத்துகிட்டு போறீங்களே. எனக்கு கொஞ்சம் குடுக்கக் கூடாதா. செல்லம்மா மச்சி (யார் இப்படி ஒரு உறவை சொல்லி முதலில் அழைத்தார்கள்). இது தான் அதிக பட்ச கோவம். ஆனால் எந்த பெரியவர்களும் மனமார திட்டியதில்லை

டேய், மாப்ள ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம கட செந்தில் அதாண்ட ஒன்னோட பூ எடுபான அவன் செத்துப் போயிட்டான் என்ற நண்பன் போனில் சொன்ன நிகழ்வும், போதும்பா எவ்வளவு நேரம் தான் பூவை பாத்துகிட்டே நிப்ப. சீக்ரம் வாங்கு. வீட்டுக்கு போகணும் என்ற மகனின் குரலும் ஒரு சேர ஒலிக்கின்றன.

மலர்கள் மரணிப்பதில்லை. ஏனெனில் அவைகளின் வாசம் எப்போதும் நீங்காமல் இருப்பதால்.

புகைப்படம் :  SL Kumar


Saturday, July 25, 2015

நகர மறுக்கும் நினைவுகள் – மழைக்கால பக்கோடா



மயிலாடுதுறை பெரிய கடைத் தெருவின் வழியே நடக்கிறேன். நகரின் பிரதான் வீதிகளில ஒன்று அது.

லேசான மழைத் தூறல் தொடங்குகிறது.

கண் முன்னே டிபன் காளியாகுடியும், வானொலி பிரஸும் (மாத வானொலி நிகழ்ச்சிகள் புத்தக வடிவில்) நினைவில் ஆடுகின்றன.

அதிலிருந்து 10 அடி வலது புறத்தில் தள்ளூ வண்டியில் பக்கோடா கடை. பெரும்பாலும் உதிரி பக்கோடா மட்டுமே. அந்த நாளில் சமோசா போன்ற சமாச்சாரங்கள் கிடையாது. (இது என்ன ஊர் பற்றி எழுத ஆரம்பித்த உடன் அந்த நாள் என்றுதானே’ வருகிறது).அத் தெருவில் செல்பவர்கள் அந்த வாசனையை நுகர முடியாமல் செல்ல முடியாது மெல்லியதாய் மொறு மொறு என்று எண்ணை அதிகம் குடிக்காமல் இருக்கும்

டேய் தம்பி(மகனிடத்தில்) சாருக்கு என்ன வேணும்னு கேளு(நான் அப்போது 7வது)

‘எவ்வளவுங்க’.
‘என்ன புதுசா கேட்கிறீங்க. 50 பைசாதான்’. (அப்பா மாதம் தரும் 10ரூபாயில் இது நிச்சயம்.)

என்ன தம்பி பாத்துகிட்டே போர?
40 காசு தான் இருக்கு.
சரி சரி இங்க வா. இப்ப சாப்பிடு. நாளைக்கு மீதி 10 பைசா கொடு. (நாளைக்கு கடைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா, 10 பைசா கமிஷன் வாங்கிட வேண்டியது தான்)

மழைக்கும் அந்த சூடான பக்கோடாவும் ரொம்ம மேட்ச். பஹூ ருசி.(கடன் வாங்கிய வார்த்தைகள் - லாசரா).

தம்பி இன்னொரு பொட்லம் வேணுமா'
மத்யமாய் தலை ஆட்டுகிறேன்.
2 நிமிடம் இரு. சூடா போட்டுத் தரேன்.
கேட்கவா வேணும். வயறும் மனமும் நிறைந்த காலங்கள்.

இப்பொழுதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. நினைவு வாசனைகள் நீள்கின்றன.

புகைப்படம்: R.s.s.K Clicks