Showing posts with label குழந்தைகள் உலகம். Show all posts
Showing posts with label குழந்தைகள் உலகம். Show all posts

Wednesday, May 27, 2015

காற்றில் ஆடும் சருகுகள் - 18

Ethnic and party wear for your infants.  உங்க வியாபார அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்:  பிரளய காலம் - உதாரணம் தருக.
மாணவன் : சமையல் குறிப்பை TVல் பார்த்து எங்க அம்மா எழுத ஆரம்பிக்கும் தருணங்கள்.
செத்தாண்டா சேகரு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?
சில தினங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல ஸுகர் இருக்கா?

சில மாதங்களுக்கு பின்
ஏங்க, வீட்ட உப்பு மொளா, புளீ இல்லீங்க.
இருடி, பேஸ்ட் கம்பெனி காரணுக்கு சொல்லி அனுப்புறேன்.

உங்க கண்டுபிடிப்புல தீய போட்டு கொளுத்த.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கிளினிக் வாசல் board -ல்
தொல்காப்பியன், தொண்டை சிகிச்சை நிபுணர்(தங்க மெடல் பெற்றவர்)
உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Coca Cola - Train Advert 2015

ஒரு மனிதன் ரயில் ஏற முயற்சிக்கிறான். இடம் பிடிக்கிறான். அருகில் இருப்பவர்கள் தொல்லை செய்கிறார்கள். பல கஷ்டங்களுக்கு பிறகு குளிர் பானம் அருந்த செல்கிறான். அங்கும் அவனுக்கு அவன் விரும்பியது கிடைக்கவில்லை.
கடைசியாக தான் விரும்பிய பானத்தை குடித்துவிட்டு ஏப்பம் விட்டுச் செல்கிறான்.

1.   பன்னாட்டு குளிர் பானங்கள் குடித்த பிறகு இப்படித்தான் ஏப்பம் வருமா?
2.   இதே விளம்பரத்தை தனது தாய் திருநாட்டில் இதை போன்றே வெளியிடுவார்களா?
3.   இந்தியாவில் மட்டும் தான் இப்படி இந்த பானம் குடித்தபிறகு ஏப்பம் வருமா?

இதை விட coca cola தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்ள முடியாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதே பயத்தின் முதன்னைக் காரணமாக இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது மகன் வீட்டில் நுழைகிறான். நோயுற்று படுத்திருக்கிறேன்.
மிகக் கலவரமாக ' என்னா ஆச்சு'
இயலாமையை கைகளால் காண்பிக்கிறேன். 'பேச முடியவில்லை'
அவன் கண்களில் ஒளிக்கீற்று.
அப்ப இன்னைக்கு ஜாலியா  T.V பாக்கலாம், system எடுத்துக்கிட்டு games விளையாடலாம், tab வச்சி விளையாடலாம். உங்க மொபைல்லயும்  games ஆடலாம். Thank you GOD.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி:
இன்னைக்கு ஞாயிற்று கிழம. அதால நீங்க என்ன செய்றீங்கன்னா துணி எல்லாம் தொவைக்கிறீங்க, வீட்ட க்ளீன் பண்றீங்க..........
என்னங்க, சொல்லி முடிக்கிறத்துக்குள்ள சாயங்காலம் ஆகிடுச்சி.
கணவன்: ????

Monday, May 18, 2015

காற்றில் ஆடும் சருகுகள் - 17

ஃப்ஸ்ட் செமஸ்டர் மேக்ஸ் அரியரையே இன்னும் முடிக்கல. இந்த புரபசர் எல்லாம் எப்படி 'Post Dr.' பண்றாங்க?. இப்படிக்கு மேக்ஸ் புக்கை பரிச்சைக்கு முன் தினம் எந்திரன் ஸ்டைலில் ஸ்கேன் செய்வோர் சங்கம்.
***************************************************************************** 
வாகனத்தில் போகும் போது 'Horn' அடித்துவிட்டு, நாமே ஒதுங்கி செல்வது இந்த தாய் திரு தமிழ் நாட்டில் மட்டும் தான். இப்படிக்கு புதுப்பேட்டை போய் வாகனம் வாங்கலாமா என்று 30 மாதங்களாக யோசிப்போர் சங்கம்.
 *****************************************************************************
நாம ஜெராக்ஸ் எடுக்க இவ்வளவு கஷ்ட பட வேண்டியதாக இருக்கு. இவிங்க எப்படி இந்த 750 பக்கம் புத்தகம் எழுதி இருப்பாங்க? இப்படிக்கு எக்ஸாம் முதல் நாள் ஜெராக்ஸ் எடுக்க காத்திருக்கையில் கரண்ட் போனபின் புத்தகம் படிப்பது பற்றி யோசிப்போர் சங்கம்.
***************************************************************************** 
Pre-paid sim card வச்சிகிட்டு rate cutter முடிச்சி 7.01, 9.01 ன்னு முடிற காலுக்கு 1 ரூ இழக்கறவனுக்குத் தான் தெரியும் 1 ரூ வலி. இவன் Rate cutter முடிஞ்து  நண்பனிடன் வாங்கிய பத்து ரூபாய்க்கு recharge செய்து.Call  பேசி. அதில் ஒன்பது ரூபாயை இழந்தவர்கள் சங்கம்.
***************************************************************************** 
நண்பரின் குமுறல்.
பொண்டாட்டிகிட்ட நல்ல பேர எடுக்க முடியாது போலடா.
ஏண்டா?
'நேத்து ராத்ரி மாடியில காய்ர துணிய எடுத்துகிட்டு வர சொன்னா. ராத்ரி எடுத்துகிட்டு வரல. திட்டுவான்னு காலைல எடுத்துகிட்டு வந்தேன். குளிர்ல எல்லா துணியும் நனைஞ்சி போய் இருக்கு. இத போய் எடுத்துகிட்டு வந்து ஒட்டிக்கி ரெட்டி வேல வக்கிறீங்களே' அப்படீங்கறா. நான் என்னடா செய்ய?
செத்தாண்டா சேகரு.
***************************************************************************** 
Printer ink எவ்வளவு கெடுதல்ன்னு பேசுறோம். ஆனா, அது பிரிண்ட் ஆன பேப்பரை, பேப்பர் ப்ளேட்டாக பயன் படுத்துகிறோம். இதுல எதாவது கெடுதல் இருக்குமா? இவன் பிரிண்ட் ஆன பேப்பரில் சமோசா சாப்பிட்டு விட்டு, அதில் உள்ள கெமிக்கல் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற துடிப்போர் சங்கம்.
***************************************************************************** 
ஊட்டச்சத்து மிகுந்த குடிநீர். ஒரு வேளை ஏதாவது அரசியல்வாதி இந்த ‘Ad’ ready செய்திருப்பானோ?
11ரூ டிக்கெட்டுக்கு 10 ரூ குடுத்தா 1ரூ சில்லறைய கரிட்டா கேக்கிறான் கண்டக்டர். ஆனா 11ரூ டிக்கெட்டுக்கு 12 ரூ குடுத்தா மீதி சில்லறை இல்லேங்கிறான். அதோட கூடவே நம்மை பிச்சைக்காரனை விட மோசமா பாக்கிறான். இது தான் வாழ்க்கை. இவன் மனைவியிடம் வாங்கிய காசில் தண்ணி அடித்து விட்டு மீதி சில்லறை வாங்காமல் தத்துவவாதி ஆக முயற்சிப்போர் சங்கம்
***************************************************************************** 
சாதாரண பிரசவ செலவில் cesarean டெலிவரி செய்யப்படும். உங்க வியாபார ஆர்வத்திற்கு ஒரு அளவே இல்லையாடா?
***************************************************************************** 
Srusti Montessori School – Drawing, Painting, Music, spoken English/Hindi, abacus etc., உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லயாடா. விட்டா வயத்துல வளர்ர குழந்தைக்கு கூட IIT class க்கு training குடுப்பீங்க போல இருக்குடா.

Saturday, May 2, 2015

புத்தகங்களுக்கு அட்டை போடுதல்

காலை 8 மணி. எழுத்த உட ன் புயல் ஆரம்பம் ஆனது.

அப்பா, இன்னைக்கு புக்ஸ் கொடுக்குறாங்க, மறக்காம வாங்கிட்டு வரணும்,
சரிடா. வாங்கிகிட்டு வரேன்.
சொல்றீங்களே தவிர, நீங்க செய்ய மாட்டீங்க. (அவங்க அம்மா வாய்ஸ் அப்படீயே...)
சரிடா. வாங்கிகிட்டு வரேன்.
மறுபடியும் சொல்றேன். மறக்காக புக்ஸ் வாங்கிட்டு வந்துடூங்க. இன்னைக்கு விட்டா மறுபடியும் கொடுக்க மாட்டாங்க.உங்களுக்கு எங்க ஸ்கூல் பத்தி தெரியாது. அதால தான் சொல்றேன். நீங்க 12 மணிக்கு மேல போனீங்கன்னா, புக்ஸ் தீர்ந்து போயிடும்.
இருடா, அட்ட போடணும்னு சொல்லுவதானே. அப்ப வச்சிகிறேன்.(Mind voice)

பத்து மணிக்கு எல்லா புக்ஸ்ம் வாங்கி வந்து விட்டேன்.

11.30 விளையாடிவிட்டு வந்தான்.
ஏம்பா, புக்ஸ் வாங்கி கிட்டு வந்துட்டியா?
இன்னும் இல்லடா.
உங்க கிட்ட ஒரு வேலை சொல்லக்கூடாது. நீங்க எப்பவுமே இப்படித்தான். இன்னும் ரெண்டு நாள்ல ஸ்கூல் ஆரம்பிச்சி விடுவாங்க.

மெல்லிய இதழ் புன்னகை என்னுள்.
அப்பா, நீங்க நிச்சயமா வாங்கி கிட்டு வந்து இருப்பீங்க. தேடி கண்டுபிடித்து விட்டு வந்து செல்ல முத்தம் தந்தான். ‘அப்பான்னா அப்பாத்தான்’.

ஆமாம், என்ன wrappers காணும்.
அதான் plastic wrappers கொடுத்து இருக்காங்க தானே. அத வச்சி அட்டை போட வேண்டியது தான். ரொம்ப சிம்பிள். Front லயும் back லயும் insert பண்ணிட்டு இப்படி ஒட்டி விட வேண்டயது தான். இனிமே உங்க கிட்ட அட்டை போட சொல்லி கேட்கவே மாட்டேன்.

முப்பது வருடத்திற்கு மேல் கூடவே இருந்து அட்டை போடும் நிமிடங்களையும் ஒரு plastic wrapper பிரித்து விட்டது.

தந்தையர்களை தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் தொடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆற்று நீரின் ஒட்டத்தில் எது முதல் நீர் எது கடைசி நீர்?

Saturday, March 14, 2015

I.T என்னும் பம்மாத்து - குழுவுடன் சில நாட்கள் – Team outing

குழுவுடன் சில நாட்கள் – Team outing
'டீம் அவுட்டிங் குறித்து அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில்' என்று மெயில் வரும்.
*******************************************************************************************************************************************
பாஸ், மெயில் பாத்திங்களா,
இல்லயே
அட போங்க பாஸ், இந்த வருஷம் டீம் அவுட்டிங் எங்கன்னு மெயில் வந்திருக்கு, பாருங்க.
*******************************************************************************************************************************************
இது டீம் சார்ந்ததாகவோ அல்லது கம்பெனியின் அனைத்து நிலை மனிதர்களும் செல்தாகவோ இருக்கக் கூடும்.
*******************************************************************************************************************************************
இது நிச்சயம் சனி இரவு 8 மணிக்கு மேல் இருக்கும் நிகழ்வுக்கே அழைப்பு விடுக்கப்படும்.

சில வகைகள் :
1. 'பாதாள லோகம்' போன்ற திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
2. பக்கத்தில் இருக்கும் நாயர் கடை போன்ற இடங்களில் 'டீ/டிப்பன்(டேய், போங்கடா, போங்கடா'')
3. இந்தவாரம் ஒரு DJ சிமுகிவி அப்படீன்னு ஒருத்தர் புரோகிராம் பண்ரார். நல்ல இசை நிகழ்ச்சி.

இது போன்ற நிகழ்ச்சிகளில் 'வருவீர்களா/மாட்டீர்களா' என்பது போன்ற வினாக்களோடு மெயில் வரும்.
*******************************************************************************************************************************************
இந்த டீம் அவுட்டிங் மகாபலிபுரத்துக்கு பக்கத்துல நடக்குது. நம்ம கம்பெனி புரொகிராமுக்கு மட்டும் தான் ஸ்பான்சர் செய்யுது. சாப்பாடு அவங்கவங்களே  பாத்துக்க வேண்டியதுதான்'
*******************************************************************************************************************************************
இந்த டீம் அவுட்டிங்  உளுந்தூர் பேட்டைகிட்ட இருக்கிற ஒரு வயக்காட்ல நடக்குது. அதனானல எல்லாரும் கார்ல வந்துருங்க. கார் இல்லாதவங்க கார் இருக்கறவங்களோட சேந்து வந்துடுங்க. டோல் சார்ஜ் கார்காரங்களே பாத்துக்கணும்.
*******************************************************************************************************************************************
சில நேரங்களில் குழுக்களுக்கான போட்டிகளும், தனிமனித தெறமய (க்கும்) காட்டும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இதில் 'நான் ஒரு காட்டுவாசி' போன்ற எழுத்துக்கள் கிழிக்கப்பட்டு ஒவ்வொருவரிடம் கொடுக்கப்பட்டு எந்த டீம் முதலில் கண்டுபிடிக்கிறது போன்ற விளையாட்டுக்கள் இடம்பெறும்.
தனித்திறம (!!) காட்டும் நிகழ்சியில் யேசுதாஸ் போன்று குரல் உடையவர்களை(நான் உட்பட - வேறு என்ன சொல்ல) அவர்களை பாடவைப்பது. அப்பத்தானே கந்தசாமில வரமாதிரி அவனையே அவன் கட்டையால அடிச்சிக்க முடியும்.
சில வருடங்களுக்கு ஒரு முறை தொலை தூரம் சென்று இரவு தங்கி(கூத்தடித்து என்பது எழுதப்படா விதி) மறுநாள் மாலை(ஞாயிறு இரவு) திரும்பும் நிகழ்வுகளும் உண்டு.
*******************************************************************************************************************************************
மாலை 5 மணிக்கு ஏந்தப்படும் மதுக்கோப்பைகள் மறுநாள் காலை 3 மணிவரை தொடரும் நிகழ்வுகளும் உண்டு.
*******************************************************************************************************************************************
பாஸ், நீங்க சாப்பிட மாட்டீங்களா
...
பாஸ்(ரொம்ப செல்லமாக, நீ கூப்டும் காரணம் தெரியும்டா) வீட்லே இருந்து வெளியே வந்தாச்சு. வீட்ட மறந்துட்டு ஒரு ரவுண்ட் போங்க, அப்புறம் என்ன?'
*******************************************************************************************************************************************
ஒவ்வொரு டீம் அவுட்டிங்கிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வு. பெரிய தலைகள் ஒன்று கூடி இந்த வருஷத்துல எவன போட்டுத்தள்ளலாம்' என்பதுதான்.
*******************************************************************************************************************************************
மிகப் பெரிய தலைகளுடன் விவாதம் நடக்கும்.
அட்மின் டீம் : இந்த வருஷம் புரொகிராம எங்க வச்சிக்கலாம்.
தலைகள் :  போன வருஷம் போன ஹோட்டல் ஃப்ராடு ஓட்டல், சாப்பாடு பத்துக்கு ஒன்னு ஃப்ரி குடுத்தானக. இந்த வருஷம் பத்துக்கு ஐந்து ஃப்ரி  குடுக்கிற ஓட்டல்லதான் நாம புரொகிராம் நடத்துணும்
*******************************************************************************************************************************************
அடுத்த வருடம்:
அட்மின் டீம் : ??
தலைகள் :  போன வருஷம் போன ஹோட்டல தலைக்கு 121.57 வாங்கிட்டான். நம்ம கம்பெனி வேற சின்ன கம்பெனி. அதால இந்த வருஷம் 121.51 கீழ சாப்பாடு குடுக்ற ஹோட்டலா புடிங்க.
*******************************************************************************************************************************************
இவை அனைத்தும் கம்பெனியில் இருக்கும் ஒவ்வொருவரும் உழைத்து 5 லட்ச ரூபாய் கொடுத்து பதிலுக்கு குச்சி மிட்டாயும், குருவி பொம்மையும் வாங்கும் நிகழ்சிதான்.

Tuesday, December 30, 2014

காலத்தின் படிமங்கள் - இன்றும் வாழும் தெருக்கூத்து

'இன்றும் வாழும் தெருக்கூத்து' - மிகவும் நட்புடனும், நம்பிக்கையுடனும் சொல்லப்பட்ட வடிவங்களுடன் கூடிய ஒரு புதினம். (பி.ஜே. அமலதாஸ்)

காலங்களால் கடக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட கலைகளின் வாழ்வு ஒரு கண்ணீரின் வெப்பத்தோடு கலந்தே இருக்கிறது. இந்த தெருக்கூத்துக் கலையும் அதற்கு விலக்கல்ல.

சக மனிதர்கள் பற்றிய பதிவு என்பதாலே மிக அதிக அழுத்தத்தை உண்ர முடிகிறது. கட்டை கட்டி ஆடுதல், தெருக்கூத்து கதைகள், ஒப்பனை செய்யும் முறைகள்(18 விதமான கட்டுக்கள், கட்டும் முறைகள்) என பலவாறாக விரிகிறது.

தெருக்கூத்துக் கதைகளில், இராமாயணம், மகாபாரதம், கர்ண மோட்சம் போன்றவைகளே கருப்பொருளாகி இருக்கின்றன.

மிக சொற்பமான வருமானமே வருவதாக குறிப்பிடும் போது மனது கனத்துப் போனது.(கலைஞன் - ரூ. 15, ஆசிரியர் - ரூ25)

அழுக்கு படிந்த ஆடைகளுடன் பெரும்பாலும் கலைஞர்கள் தோன்றுவதாக குறிக்கப்படுகிறது. இதற்கு பொருள் ஈட்ட முடியா பொருளாதார மற்றவாழ்வு காரணம் என்று வகைபடுத்தப்படுகிறது. ஆறு மாதம் மட்டுமே (இந்த) வாழ்வு என்றும், மற்ற ஆறு மாதங்களுக்கு கரும்பு வெட்ட, சூளை போட, ரிக்க்ஷா வண்டி ஓட்ட என்று தருமன், பீமன் மற்றும் பாஞ்சாலி செல்வதாக குறிப்பிடுகிறார்கள்.

பிரதமை  (பாட்டிமுகம்) குறித்து மகாபாரத்தில் வரும் அரவான் சார்ந்த கதை அனுபவம் எனக்கு புதியது.

நான் தாண்டா ஒங்கப்பன்
நல்லமுத்து பேரன்
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வந்தேன்...-
வந்தேன்...-
வந்தேன்...-

என்ற வரிகளை நான் வாசித்த போது என் பதினென் பிரயாத்தில் மூழ்கினேன்.

காலத்தால் நகரங்களில் பெரும்பாலும் மறக்கட்டிக்கப்பட்டு கிராமங்களில் மட்டுமே இருக்கும் பச்சைக்காளி, பவளக்காளி வடிவம் தெருக்கூத்தின் வடிவமே என்று அறிய முடிகிறது.

இரவு 8 மணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே போஸ்டர் எங்கும் ஒட்டப்பட்டிருந்தது.
'இன்னாடா இது, சாமிக்கு முன்னாடி சினிமா காரங்களை ஆடவுட்ரான்னு' வேதனை வாய்வழியே சிந்திவிடாமல் கேட்பான் என்னும் வரிகளை வாசித்த போது நிஜங்களின் தரிசனம் தெரிந்தது. (காடு நமக்கு சொந்தம், காட்ல இருக்குற விலங்குகளும் நமக்கு சொந்தம், இவன் யாரு நமக்கு எல்லை போட்டு தரது (நன்றி - சோளக்கர் தொட்டி- நாவல்).

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
வரிகள் கனங்களாகி , இதயங்கள் கனத்துப் போய் இருக்கின்றன இக்கலைஞர்களுக்கு.       

பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியம் மிகுந்த கட்டிடத்தின் நிலை ஒத்து இருக்கிறது இக்கலைஞர்களின் வாழ்வு. பராமரிப்பும் நிர்வாகமும் நம் கைகளில்

புகைப்படம் : புதிய தலைமுறை