Showing posts with label கணவன். Show all posts
Showing posts with label கணவன். Show all posts

Wednesday, May 27, 2015

காற்றில் ஆடும் சருகுகள் - 18

Ethnic and party wear for your infants.  உங்க வியாபார அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்:  பிரளய காலம் - உதாரணம் தருக.
மாணவன் : சமையல் குறிப்பை TVல் பார்த்து எங்க அம்மா எழுத ஆரம்பிக்கும் தருணங்கள்.
செத்தாண்டா சேகரு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?
சில தினங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல ஸுகர் இருக்கா?

சில மாதங்களுக்கு பின்
ஏங்க, வீட்ட உப்பு மொளா, புளீ இல்லீங்க.
இருடி, பேஸ்ட் கம்பெனி காரணுக்கு சொல்லி அனுப்புறேன்.

உங்க கண்டுபிடிப்புல தீய போட்டு கொளுத்த.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கிளினிக் வாசல் board -ல்
தொல்காப்பியன், தொண்டை சிகிச்சை நிபுணர்(தங்க மெடல் பெற்றவர்)
உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Coca Cola - Train Advert 2015

ஒரு மனிதன் ரயில் ஏற முயற்சிக்கிறான். இடம் பிடிக்கிறான். அருகில் இருப்பவர்கள் தொல்லை செய்கிறார்கள். பல கஷ்டங்களுக்கு பிறகு குளிர் பானம் அருந்த செல்கிறான். அங்கும் அவனுக்கு அவன் விரும்பியது கிடைக்கவில்லை.
கடைசியாக தான் விரும்பிய பானத்தை குடித்துவிட்டு ஏப்பம் விட்டுச் செல்கிறான்.

1.   பன்னாட்டு குளிர் பானங்கள் குடித்த பிறகு இப்படித்தான் ஏப்பம் வருமா?
2.   இதே விளம்பரத்தை தனது தாய் திருநாட்டில் இதை போன்றே வெளியிடுவார்களா?
3.   இந்தியாவில் மட்டும் தான் இப்படி இந்த பானம் குடித்தபிறகு ஏப்பம் வருமா?

இதை விட coca cola தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்ள முடியாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதே பயத்தின் முதன்னைக் காரணமாக இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது மகன் வீட்டில் நுழைகிறான். நோயுற்று படுத்திருக்கிறேன்.
மிகக் கலவரமாக ' என்னா ஆச்சு'
இயலாமையை கைகளால் காண்பிக்கிறேன். 'பேச முடியவில்லை'
அவன் கண்களில் ஒளிக்கீற்று.
அப்ப இன்னைக்கு ஜாலியா  T.V பாக்கலாம், system எடுத்துக்கிட்டு games விளையாடலாம், tab வச்சி விளையாடலாம். உங்க மொபைல்லயும்  games ஆடலாம். Thank you GOD.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி:
இன்னைக்கு ஞாயிற்று கிழம. அதால நீங்க என்ன செய்றீங்கன்னா துணி எல்லாம் தொவைக்கிறீங்க, வீட்ட க்ளீன் பண்றீங்க..........
என்னங்க, சொல்லி முடிக்கிறத்துக்குள்ள சாயங்காலம் ஆகிடுச்சி.
கணவன்: ????

Monday, August 18, 2014

சொர்க்கம் - வீடும் வீடு சார்ந்த இடமும்

அலை கழிக்கப்படும் வாழ்வின் படகுகளில் அனுதினமும் நாம் சார்ந்திருக்கும் மனிதர்கள் நம்மைக் கொண்டாடினால்....

யட்ஷன் : உலகின் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த நண்பன் யார்?
தருமன் : அவனது மனைவி.

மகாபாரதம் : யட்ச பர்வம்

எனக்கான கனவுகளையும், கவிதைகளையும் கொண்டாடியவள் நீ.

நீ நிஜம்
நீ காற்று
நீ ஆகாயம்
நீ ஆதார ஸ்ருதி.

அபஸ்வரத்திற்கு முன்பாகவே என்னை மாற்றியவள் நீ.

உன்னை அன்றி என்னை யார் முழுமையாக மாற்றி இருக்க முடியும்.

12 வருட காலம், காதல், தனிமை, வலிமை, அழுகை, வரம். சந்தோஷம், விருப்பங்கள், வலிகள், மாற்பட்ட கருத்துக்கள், மாறாத ஒற்றுமைகள், ஒற்றுமை, அன்பு. தமிழின் அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கிறது நம் வாழ்வு.

உன் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
என் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
காலம் இன்னமும் பாடலகளை எழுதிக் கொண்டிருக்கிறது.

தேர்தெடுக்கப்பட்டவைகள் உரிமையாளருக்கு சொந்தம் எனில், நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் உன் உரிமையாக.

உனக்கான கோபங்கள் குழந்தை தன்மை உடையவை என்பதை எப்போதோ உணர்ந்தவன். அதுவே உன் கோபங்களை ரசிக்கச் செய்கிறது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆம் எனக்கு வரம் கிடைத்து விட்டது.

எனக்கான அனைத்து தருணங்களிலும் நீ இருக்கிறாய் என் ஆச்சாரியனைப் போல், ஆச்சாரியனாகவும்.

Saturday, April 12, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 9

போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
---------------------------------------------------------------------------------------------- 
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------- 
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும், கவலையும் தெரிகிறது.
---------------------------------------------------------------------------------------------- 
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின் கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காரினில் முன்னிருக்கையில் தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும் என்று நிஜமாகும்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது 
தான்  தெரிகிறது. (டேய், போடா, போடா)

Friday, March 21, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 8

நம் குழந்தைகள் நம் முன்னே வளர்தல் தான் உலகின் மிகப் பெரிய அதிசயம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறுத்தலில் மகிழ்வுறுபவன் மயானம் அடையான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிகக் குறைந்த தூரம் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் மிக வயதானவனில் அருகில் அமரும் இளம்   பெண்கள், யாரும் அறியாமல் ஒரு இதழ் வழி புன்னகையை வயதானவனிடம் ஏற்படுத்துகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விளக்கில் இருந்து எடுத்த பின்னும் நூல் திரியில் இருக்கும் எண்ணை தீரும் வரை அது எரியும்.  அதுபோல்  ஆன்மாக்கள் பக்குவம் பெறாமல் ஆசைகள் இருக்கும் வரை பழைய வாசனையின் காரணமாக பிறப்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிறு மழையில்தாயின் குடையில் வராமல் தலையை குடைக்குள் வைத்து கைகளை மழையில்   நனைந்து செல்லும் சிறார்களில் சந்தோஷங்கள் வலிமையானவை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி :  இன்னைக்கு லீவுஇன்னைக்கு முக்கியமா.... என்னங்க பேசாம இருக்கீங்க.
கணவன் : கையால் சைகை காட்டி - மௌனம் (எப்புடி)
மனைவி :  எல்லா நாளும் அப்படித் தான் பேசாம இருக்கீங்கஇது என்ன புதுசா (எப்புடி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------வாசிப்புக்கு உரிய கைகள் யாசித்தலே வாழ்வின் மகத்தான வலிகளில் ஒன்று.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------புகைவண்டியில் பயணிக்கும் போது பொருள் வேண்டி பாடும் கண்கள் அற்றவனின் 'முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்என்ற பாடல் அதிக வலி உண்டாக்குகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது முதல் நரையை காணும் ஆணின் மனவலிகள் அதிகமானவை. பெண்ணின் மனவலிகள் அதை விட அதிகமானவை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------மனைவியின் 'பயண்பாட்டிற்கு' ஏற்றவாறு கணவன் நேசிக்கப்படுகிறான்.