Tuesday, February 4, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 1

புழுதி எழுப்பி செல்லும் வாகனமாக ஒவ்வொரு மழைத்துளியும் எழுப்பிச் செல்கிறது சில நினைவுகளை
---------------------------------------------------------------
நாணயத்தின் இரு பக்கங்கள்
அவள் - சனியன் புடிச்ச எலி இன்னைக்காவது மாட்டுச்சே, கொண்டு போய் எங்கயாவது விட்டுட்டு வாங்க
அவன் - புண்ணியம் செய்ததால தான அது தப்பிக்கிறது.
அவள் - கால நேரத்துல என்ன தானா சிரிப்பு வேண்டி கிடக்கு?
---------------------------------------------------------------
பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்து விடுகிறது
உள் அழுகையை மறைத்து ஆனந்தமாய் சிரிப்பதாய் காட்ட
---------------------------------------------------------------
ஆண்களின் மன வலிகளைவிட பெண்களின் மன அழுத்தங்கள் அதிகமாக இருக்குமோ?
.ம் - மாலை பொழுதின் மயக்கத்திலே .. சொன்னது நீதானா, சொல் சொல் என் உயிரே..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுத் தாலியை விட மின்னுகிறது புது மணப் பெண்ணின் கண்கள் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊமைப் பெண் பேச வேண்டுமா, அவளுக்கு திருமணம் செய்து வைத்து பாருங்கள். மாற்றம் தெரியும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் ரசித்த காதல் காட்சி

அன்றலர்ந்த தாமரை போல் முகம்.வட்ட வடிவமாய் தாழம்பூ குங்குமம். சிறியதாய் வைர மூக்குத்தி. மாம்பழ நிறப் புடவை. தலைவன் கைப்பிடிக்கிறாள் தலைவி. 'மேடும் பள்ளமுமா இருக்கோன்னோ, பாத்து வாங்கோன்னா'. (70+ பாட்டி + 80+தாத்தா). கரம் பற்றுகையில் தெரிகிறது காதல்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிஜங்களில் வாழ்வதை விட கற்பனையில் வாழ்வது கடினமாக இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடிமை : தலைவா, தலைவா மக்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்ன செய்யறது.
சாத்தான் : இது ஒரு மேட்டரே இல்ல. எல்லாருக்கும் கல்யாணம் செய்து வச்சிடலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தாய்மை கொண்டிருக்கும் பெண்ணின் கண்கள் கன்னியாக்குமரி அம்மனின் மூக்குத்தியை விட பிரகாசமாக மின்னுகின்றன
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Click by : SL Kumar

No comments:

Post a Comment