பள்ளி நாட்களைப் பற்றிய நினைவு எப்போதும் விலகுவதில்லை.
அப்போது எலிமன்டரி(ஆமாம் தானே) ஸ்கூலில் இருந்து பெரிய( higher secondary) ஸ்கூல் வந்த புதிது.
மீனாட்சி டீச்சர் எங்கள் கிளாஸ் மிஸ்
.
நான் நடந்து போகக் கூடாது என்பதற்காக என் அப்பா சைக்கிள் ரிக்க்ஷா வில் அனுப்புவார்கள்.
நான் திருவிழந்துதூர் மேட்டுத் தெரு அவர்கள் பெருமாள் கோவில் மேல வீதி.
அவர்கள் எப்போதுமே மிக அழகாக உடை உடுத்துவார்கள். (அது அம்பாளுகே உரித்தானது என்று இப்போது தான் தெரிகிறது. பாடம் நடத்துவே ஒரு கம்பீரம். சொற்கள் காத்திருந்து அப்படியா வரும்.. எத்தனை குடம் தேன் அபிஷேகமோ)
டீச்சர் : இன்னைக்கு தமிழ் பாடம். வாக்கியத்தில் அமைத்து எழுதுவது எப்ப்டீன்னு கத்துத் தரேன்.
கூட்டம் : .....(வேற யாரு நாங்க தான்)
டீச்சர் : இப்படித்தான் எழுதனும், புரிஞ்சுதோன்னோ. இப்ப எல்லாரும் 'குறிக்கோள்' என்பது குறித்து வாக்கியத்தில் எழுதுங்கள்.
நான் : 'ஒழுக்கமே உயிர்' என்பது நம் பள்ளியின் குறிக்கோள்.
டீச்சர் : ரொம்ப நன்னா இருக்குடா, எல்லாரும் இவனை மாதிரி எழுதுங்க பாக்கலாம். (முதல் பாராட்டு.. )
விதி விளையாட ஆரம்பித்தது.
ரிக்க்ஷாகாரர் : இன்னைக்கு லேட், அதால டீச்சர் வீட்டுக்கு நான் வந்தேன்னு சொல்றேன். நீயும் அப்படியே சொல்லு என்னா?
நான் : சரிங்க.
இது நடந்து ஒரிரு நாள் கழித்து டீச்சர் அழைதார்கள். (பச்சை நிறப்புடவை.. மறுபடியும் அம்பாள்) குலை நடுங்க ஆரம்பித்தது.
டீச்சர் : ஏன்டா, உன்னைய நல்ல பையன்னு நினைச்சுண்டு இருந்தேன். இப்படி பண்ணிட்டையே.
நான் :
டீச்சர் : இதுக்கு தண்டனை உண்டு தெரியுமா. இனிமே நீ எங்கிட்ட பேசக் கூடாது. (உலகம் தலையில் விழுதல் இது தானா). பசங்களா யாரும் இவனோட பேசாதீங்க. இனிமே என் சேர்ருக்கு கீழ தான் நீ உக்காரணும்.
நான் : டீச்சர், டீச்சர் இனிமே இப்படி செய்யல டீச்சர், பேச மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க
டீச்சர்.
டீச்சர் : (தெய்வத்தின் கண்களில் ஒளிக் கீற்று), தப்பே பண்ணக் கூடாது, தெரியாம செஞ்சிருந்தா தப்ப ஒத்துண்டு இனிமே நடக்காம சரி பண்ணிக்கணும்.
வெகு நீண்ட வருடங்களுக்குப் பின் வீட்டை அடையாளம் கண்டு அவர்களை சந்திதேன்.
டீச்சர் : நீங்க யாருன்னு தெரியலையே
நான் : நீங்கங்கறத விட்டுடுங்க. நான் உங்க பழைய மாணவன். (பழைய நினைவுகள்.. பரிமாற்றங்கள்..)
டீச்சர் : இருடா காப்பி போட்டு எடுத்துண்டு வரேன், நானே மிஷின் வச்சிருக்கேன். (காபியா -அது தேவாமிருதம்னா)
நான் : டீச்சர் நான் நம்ஸ்காரம் பண்ணனும்.
டீச்சர் : ஏன்னா சித்த இங்க வாங்கோ(அம்பாளுக்கு உரியவர் வேறு எப்படி இருக்க முடியும்). இவன் என் கிட்ட படிச்சான். நம்ஸ்காரம் பண்ணனுமாம். நன்னா இருடா. நல்லா வருவடா.
விதைகள் விருட்சங்கள் ஆகும். அந்த அடிப்படை விதைகள் அவர்களால் விதைக்கப்பட்டவை.
அனைத்தும் ஒன்றில் தோன்றி ஒன்றில் ஒடுங்குகின்றன. ‘ஆச்சார்ய தேவோ பவ:’
Click by : SL Kumar
No comments:
Post a Comment