---------------------------------------------------------------------------------------------------------
யாசிக்கையில், கைகளைவிட கண்கள் கனமாக இருக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------------
தனது பெண், முதல் முறை மூக்குத்தி அணியும் அழகை கண்டு ரசிக்கும் தாயின் கண்கள் சிறப்பானவை. இருவரையும் ரசிக்கும் தகப்பனின் கண்கள் அதை விட அழகானவை.

தனது குழந்தையை பள்ளிக்குள் அனுப்பிவிட்டு திரும்பும் தாயின் கண்ணில் யாரும் அறியாமல் இருக்கும் நீர்த்துளிகள் கனமானவையாக
---------------------------------------------------------------------------------------------------
சித்திர குப்தன் - இவன் சிறு தவறு செய்திருக்கிறான்.
ப்ரம்மா - இவன் தமிழனாக பிறக்கட்டும்.
சித்திர குப்தன் - இவன் நிறைய தவறுகள் செய்திருக்கிறான். இவனை எப்படி தண்டிப்பது?
ப்ரம்மா - இவனை .... க்கு கணவணாக்கி விடு.
உயிர் - அது மட்டும் வேண்டாம், வேற எந்த தண்டனையும் கொடுங்கள்.
செத்தான்டா சேகர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டெம்போவில் தினக் கூலிக்கு நின்று செல்லும் மனிதர்கள், மற்றவர்களை விட சந்தோஷத்துடன்
செல்கிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குளிரில் உறங்கும் குழந்தையை கண்டு ரசித்து, குளிர் படாமல் போர்வையால் மூடி செல்லும் தாயின் ரகசிய புன்னகையுடன் கண்கள் விசித்ரமானவை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
'இன்று நான் உணவு சமைக்கவா' என்று கணவன் கேட்கையில் மனைவியின் கண்களில் தெரிகிறது கோடி சூரியன்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது நீண்ட கருங் கூந்தலை, கைகளால் சரி செய்தபடி சூரியனை பார்க்கும் கன்னியின் கண்கள் சூரியனை விட பிரகாசிக்கின்றன.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மன்னிக்கப் பட்ட கண்களில் இருந்து யாரும் அறியாமல் வழியும் கண்ணீர் துளிகள் இதயத்தில் நிலைபெறுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிகச் சிறிய குழந்தைகளின்
கண்களில் ஒட்டி இருக்கிறது தெய்வங்களின் தன்மைகள்.
Click by : SL Kumar
No comments:
Post a Comment