Monday, February 18, 2013

தொடரும் நினைவுகளும் பாடலும்


விழியில் விழுந்து - இந்த பாடலை பல ஆயிரம் முறை கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுமையாகத்தான் இருக்கிறது. காட்சியா, இசையா, பாடலை பாடிய சசிரேகாவா அல்லது வரிகளா தெரியவில்லை. என் சிறு பிராயத்தின் வரிகள் என்பதாலா. எனக்கு மட்டும் சொந்தம் உந்தன்... என்ற வார்தைகளின் தொகுப்பா. கோடையில் குளிரினையும், குளிரினில் ஒரு வெம்மையையும் தரும் இந்த பாடலை உங்களுக்கு பிடிக்குமா?

பார்க்க ரசிக்க
http://www.youtube.com/watch?v=H3cs6IXfqQ8

Sunday, February 17, 2013

அடைப்புக்குறிக்குள் அடைபடா அனுபவங்கள்

வீசிச் செல்லும் பனிக்காற்று வழிச் செல்லும் எல்லா செடிகளிலும் தன் இருப்பை உறுதிப்படுத்தி செல்லும். தடையங்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும். நினைவு ஓடையில் வரும் சில நினைவுக் குறிப்புகள் மட்டும் இங்கே.