Monday, September 29, 2014

I.T என்னும் பம்மாத்து

மனித வாழ்வின் காலத்தடம் படாத இடங்கள் கூட கணினியின் தடங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்பதே நிஜமான உண்மையாகும்.

தொழில் சார்ந்த துறைகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும் போது, தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி வகை தொகை இல்லா வளர்ச்சியினை சந்தித்து இருக்கிறது. இதில் பெரும்பாலும் நிறுவனங்களின் வளர்ச்சி மலை அளவிற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களின் வளர்ச்சி மடு அளவிற்கும் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

இங்கு நான் குறிப்பிடும் அனுவபங்கள் எனக்கானவை மட்டும் அல்ல. பல அல்லல் பட்ட மனிதரிகளின் அனுபங்களும் கூட.

ஒரு நாட்டின் வளர்ச்சியினை வேறறுக்க அதன் அடிப்படை கலாச்சாரத்தை அறுத்துவிட்டால் போதும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களாக இருந்த ஒரு கலாச்சாரம், சில தசாப்தத்தில் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.

இது குறித்து கீழ் கண்ட தலைப்புகளில் எழுத உள்ளேன்.

  1. வளர்ச்சிப் படிகள் - Stages
  2. மீட்டிங் கூத்துக்கள் – Meetings
  3. விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – Leave
  4. மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – appraisal
  5. குழுவுடன் சில நாட்கள் – Team outing
  6. மற்றவை

இவைகளின் நோக்கம் எவர் மனதையும் புண்படுத்துதல் அல்ல. நிதர்சனங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம்.

புகைப்படம் : R.s.s.K Clicks

Sunday, September 28, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 13

நினைவுகளை கலைத்தலை விட கனமான வேலை ஒன்றும் இல்லை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வறுமை உடையவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சாலை ஒரங்களில் இருக்கும் மரங்களில் மிக மெல்லிய அடுக்குகளாக மணல் துகள்கள் படிந்திருப்பதைப் போல், 35+ கடக்கும் மனிதர்களிடம் மரணம் குறித்த சிந்தனை படிந்திருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பட்ட மரத்திலிந்து பறந்து செல்கின்றன பல பறவைக் கூட்டங்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட வன்முறையின் மிகச் சிறந்த வடிவம் மௌனம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தண்டவாளங்களின் மேல் பறந்து செல்லும் பறவைகளின் சேரும் இடம் எதுவாக இருக்கக் கூடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வாழ்வின் தனிமைகள் கற்றித் தருவதை விட வேறு யார் அதிகம் கற்றுத் தரமுடியும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேடலைத் தொலைத்தவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனைவியின் முகத்தில் அதிக பிரகாசம் உண்டாக்க வேண்டுமா? 'மணி 10 ஆயிடுத்து. ஒரே தடவையா மதியம் சாப்பிடலாமா?' என்று சொல்லிப் பாருங்கள்.
அன்னைக்கு நிச்சயம் கறி மீன் குழம்பு வகையரா தான். 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உறவுகள் அற்று இருப்பவர்களுக்கே உலகம் வசமாகிறது.

Sunday, September 7, 2014

2038 – T.V Serialsssssss

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
சார், உங்களுக்கு கல்யாணம் ஆகுணும்னா நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ரொம்ப ஈசி. கார்த்தின்னு பேர் வச்சிங்க. காமாட்சின்னு ஹீரோயின் பேரு வைச்சிப்போம். எங்க சீரியல நடிங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிடும்.

2.
என்னா அநியாயமா இருக்கு. எங்க காலத்துல 1000 எபிசோட் வந்தா பெருசா கொண்டாடுவாங்க. இப்ப என்னடான்னா, 20000 எபிசோட் மேல வர சீரியலுக்கு கூட ஒரு கொண்டாட்டமும் இல்லயே.

3.
30 நிமிடம் இடைவெளி இல்லா சீரியல் இன்று - நாசமா போறவனே, கட்டைல போறவனே போன்ற அழகு வசனங்கள்.

4.
வீட்டு பெண்மணிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு. . எவ்வித இடஞ்சல் இன்றி சீரியல் பாருங்கள். உங்கள் வீட்டிற்கே Breakfast/Lunch/Dinners வந்து  சப்ளை செய்கிறோம்.

5.
TRB ரேட்டிங் ஏறவே மாட்டேங்குது சார், என்ன செய்யலாம் சார்?
அது பெரிய மேட்டரே இல்ல. ஒரு வெள்ளிக்கிழமை புருஷன் பொண்டாட்டியை அடிச்சு காயப்படுத்துற மாதிரி முதல் 7 நிமிஷம் காமிக்கலாம். அடுத்த 2 நிமிஷம் பொண்டாட்டி அழுவுற மாதிரி சீன் கடைசி 5 நிமிஷம் பொண்டாட்டியை சாகடிக்கிறதை லைவ்ல காமிக்கலாம்.