குழுவுடன் சில நாட்கள் – Team outing
'டீம் அவுட்டிங் குறித்து
அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில்' என்று மெயில் வரும்.
************************************************************************ *******************************************************************
பாஸ், மெயில்
பாத்திங்களா,
இல்லயே
அட போங்க பாஸ், இந்த
வருஷம் டீம் அவுட்டிங் எங்கன்னு மெயில் வந்திருக்கு, பாருங்க.
************************************************************************ *******************************************************************
இது டீம் சார்ந்ததாகவோ
அல்லது கம்பெனியின் அனைத்து நிலை மனிதர்களும் செல்வதாகவோ இருக்கக் கூடும்.
************************************************************************ *******************************************************************
இது நிச்சயம் சனி இரவு 8
மணிக்கு மேல் இருக்கும் நிகழ்வுக்கே அழைப்பு விடுக்கப்படும்.
சில வகைகள் :
1. 'பாதாள லோகம்' போன்ற
திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
2. பக்கத்தில் இருக்கும்
நாயர் கடை போன்ற இடங்களில் 'டீ/டிப்பன்(டேய், போங்கடா, போங்கடா'')
3. இந்தவாரம் ஒரு DJ
சிமுகிவி அப்படீன்னு ஒருத்தர் புரோகிராம் பண்ரார். நல்ல இசை நிகழ்ச்சி.
இது போன்ற நிகழ்ச்சிகளில்
'வருவீர்களா/மாட்டீர்களா' என்பது போன்ற வினாக்களோடு மெயில் வரும்.
************************************************************************ *******************************************************************
இந்த டீம் அவுட்டிங்
மகாபலிபுரத்துக்கு பக்கத்துல நடக்குது. நம்ம கம்பெனி புரொகிராமுக்கு மட்டும் தான்
ஸ்பான்சர் செய்யுது. சாப்பாடு அவங்கவங்களே பாத்துக்க வேண்டியதுதான்'
************************************************************************ *******************************************************************
இந்த டீம் அவுட்டிங் உளுந்தூர் பேட்டைகிட்ட இருக்கிற ஒரு வயக்காட்ல
நடக்குது. அதனானல எல்லாரும் கார்ல வந்துருங்க. கார் இல்லாதவங்க கார்
இருக்கறவங்களோட சேந்து வந்துடுங்க. டோல் சார்ஜ் கார்காரங்களே பாத்துக்கணும்.
************************************************************************ *******************************************************************
சில நேரங்களில்
குழுக்களுக்கான போட்டிகளும், தனிமனித தெறமய (க்கும்) காட்டும் நிகழ்ச்சிகளும் இடம்
பெறும். இதில் 'நான் ஒரு காட்டுவாசி' போன்ற எழுத்துக்கள் கிழிக்கப்பட்டு
ஒவ்வொருவரிடம் கொடுக்கப்பட்டு எந்த டீம் முதலில் கண்டுபிடிக்கிறது போன்ற
விளையாட்டுக்கள் இடம்பெறும்.
தனித்திறம (!!) காட்டும்
நிகழ்சியில் யேசுதாஸ் போன்று குரல் உடையவர்களை(நான் உட்பட - வேறு என்ன சொல்ல)
அவர்களை பாடவைப்பது. அப்பத்தானே கந்தசாமில வரமாதிரி அவனையே அவன் கட்டையால
அடிச்சிக்க முடியும்.
சில வருடங்களுக்கு ஒரு
முறை தொலை தூரம் சென்று இரவு தங்கி(கூத்தடித்து என்பது எழுதப்படா விதி) மறுநாள்
மாலை(ஞாயிறு இரவு) திரும்பும் நிகழ்வுகளும் உண்டு.
************************************************************************ *******************************************************************
மாலை 5 மணிக்கு
ஏந்தப்படும் மதுக்கோப்பைகள் மறுநாள் காலை 3 மணிவரை தொடரும் நிகழ்வுகளும் உண்டு.
************************************************************************ *******************************************************************
பாஸ், நீங்க சாப்பிட
மாட்டீங்களா
...
பாஸ்(ரொம்ப செல்லமாக, நீ
கூப்டும் காரணம் தெரியும்டா) வீட்லே இருந்து வெளியே வந்தாச்சு. வீட்ட மறந்துட்டு
ஒரு ரவுண்ட் போங்க, அப்புறம் என்ன?'
************************************************************************ *******************************************************************
ஒவ்வொரு டீம்
அவுட்டிங்கிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வு. பெரிய தலைகள் ஒன்று கூடி இந்த
வருஷத்துல எவன போட்டுத்தள்ளலாம்' என்பதுதான்.
************************************************************************ *******************************************************************
மிகப் பெரிய தலைகளுடன்
விவாதம் நடக்கும்.
அட்மின் டீம் : இந்த
வருஷம் புரொகிராம எங்க வச்சிக்கலாம்.
தலைகள் : போன
வருஷம் போன ஹோட்டல் ஃப்ராடு ஓட்டல், சாப்பாடு பத்துக்கு ஒன்னு ஃப்ரி குடுத்தானக.
இந்த வருஷம் பத்துக்கு ஐந்து ஃப்ரி குடுக்கிற ஓட்டல்லதான் நாம
புரொகிராம் நடத்துணும்
************************************************************************ *******************************************************************
அடுத்த வருடம்:
அட்மின் டீம் : ??
தலைகள் : போன
வருஷம் போன ஹோட்டல தலைக்கு 121.57 வாங்கிட்டான். நம்ம கம்பெனி வேற சின்ன கம்பெனி.
அதால இந்த வருஷம் 121.51 கீழ சாப்பாடு குடுக்ற ஹோட்டலா புடிங்க.
************************************************************************ *******************************************************************
இவை அனைத்தும்
கம்பெனியில் இருக்கும் ஒவ்வொருவரும் உழைத்து 5 லட்ச ரூபாய் கொடுத்து பதிலுக்கு
குச்சி மிட்டாயும், குருவி பொம்மையும் வாங்கும் நிகழ்சிதான்.
No comments:
Post a Comment