Saturday, February 22, 2014

நகர மறுக்கும் நினைவுகள் - 2 - செந்தாழம் பூவில்

செந்தாழம் பூவில்

நடிகை ஷோபா குறித்து இப்பதிவு. ராஜா சார், ஏசுதாஸ் பற்றி குறிப்பிட இனி எதுவும் இல்லை.

என் பதினென் பிரயாணங்களுக்கு முன்பே இப்பாடலை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் காரணங்கள் அற்று. என் தமிழ் மனப்பாடல் வரிகளை விட இப்பாடலை அதிகம் படித்திருக்கிறேன்.

அம்மா: என் பையன் நல்லா பாடுவான்.
விருந்தினர் : எங்க பாடு.
நான் : அப்பவே அழகிய காக்கா குரல்(இன்று வரை மாறவில்லை.) செந்தாழம் பூவில் பாடல் தொடரும்.


மெதுவாக வாகனத்தில் பயணம் தொடர ஆரம்பிக்கிறது. தலைவனும் தலைவியும் பயணம் செய்கிறார்கள். கூடவே இரு தோழிகள்.

நகரத்துவங்குகையில் ஒரு மருட்சி தெரிகிறது தலைவி கண்களில்( அட்டகாசம்)

தலைவன் இயற்கையை வர்ணித்து பாடத் துவங்குகிறான். தலைவியிடம் மீண்டும் ஒரு  புன்னகை.
இயற்கையையும் பெண்ணையும் சேர்த்து வர்ணிக்க துவங்குகிறான். வளைவான பாதையில் பயணம் தொடர்கிறது.

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளித்தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

தலைவி வானத்தை வேடிக்கைப் பார்த்து வருகிறாள். ஆனாலும் அச்சம் தீரவில்லை. பயணம் தொடக்கிறது.

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

தலைவிக்கு கொஞ்சம் அச்சம் விலகுகிறது, மெதுவாக புன்னைக்க துவங்குகிறாள். தோழிகளுக்குள் மந்தஹாசப் புன்னகை.

பூக்கள் பூத்திருக்கின்றன. மெதுவாக அவ்வழிகளில் நடக்கத்துவங்குகிறாள். இசையின் பரிணாமங்கள் மாறுகின்றன. வெள்ளைப் புடவையில் அடிக்காதப் பூப்போட்ட டிசைன். (இதற்கு எப்படி இத்தனை அழகு).

காற்று அடிக்கத் துவங்குகிறது. கையில் இருக்கும் பூக் கொத்துகளும், முடிக்கற்றைகளும் பறக்கத் துவங்குகின்றன.

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

நீர் தடாகத்திற்கு அருகில் தலைவி. மெதுவாய் நதி நகர்ந்து செல்கிறது.
ஒற்றை மூக்குத்தி, காதுகளில் கூண்டு வடிவ தோடுகள்.

நிகழ்வுகள் முடிந்து நாயகன் தன் பணிகளைத் தொடர்கிறான்.

பாலு மகேந்திரா சார் வார்தைகளில் சொல்வது என்றால் 'பல கோடி வருடங்களுக்கு ஒரு தேவதை பிறக்கிறாள். அது ஷோபா'


அதனால் தான் இன்னும் இப்பாடல் வாசம் வீசிக் கொண்டிருக்கிறது.

Image : Internet

No comments:

Post a Comment