Sunday, January 17, 2016

2016 - பொங்கல் - பயணவழிக் குறிப்புகள் - அகம் புறம்


சென்னையில் இருந்து சிதம்பரம் வரை நின்று கொண்டே பயணம்

அகம்
·   நின்று கொண்டே வந்ததில் 10 வயது சிறுவர்களும் அடக்கம்.
·   பெரும்பாலானவர்வகள் மொபைலில் whatsapp பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
·   சிலர் Tab ல் சிவாஜி படப்பாடல், சண்டி வீரன் படப்பாடல் எனப்பார்த்துக் கொண்டே வந்தார்கள். இன்னும் சிலர் எட்டிப்பார்த்து அந்த பாடல்களைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
·   சிலர் bubbles விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
·   ‘பய புள்ளங்க என்னமா பேர் வைக்குதுங்கடா, Darling, Chellam’ என்று சிறு மாணவர்கள் குழு பேசிக் கொண்டு வந்தது.
·   அடுத்த இருக்கையில் இருப்பவர்களுக்கு தனது சிறு பிஸ்கட் போன்றவற்றை கூட தராமல் மற்றவர்களை பற்றி நினைக்கக் கூட மனமில்லாமல் தானே உண்டார்கள்.
·   பேருந்தில் இருக்கும் எல்லா பைகளையும் விடுத்து ஒரே ஒருவரிடம் இருக்கும் ஒரு பையை போலீஸ்கார் சோதனை செய்கிறார். அதில் ஒரு Full. (அதை இழக்கையில் அவன் சலனமே கொள்ளவில்லை ) -  பாவம் அவன் மனசு என்ன பாடு பட்டிருக்கும் என்று சிலர் பேசிக் கொண்டு வந்தார்கள்.

புறம்
·   ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 25 கார்கள் ஒரு பேருந்தினைக் கடக்கின்றன.
· Toyota Fortuner  போன்ற கார்களில் பின்னிருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள்
·   Alto போன்ற கார்களில் சராசரியாக ஓட்டுபவர் தவிர்த்து 6 பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
·   பெரிய சொகுசுக் கார்களில் பெரும்பாலும் அன்றைய தினசரிகள் கலைந்து கிடக்கின்றன.
· ''5 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சென்னை போலீஸ்காரர்' போன்றவை செய்திகளில் முதன்மையான செய்திகளாக படிக்கிறார்கள்
· சிறிய மற்றும் விலை குறைவான கார்களில் சிறிய தெய்வங்களின் விக்ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 2ல் இருந்து 3 முழம் வரை சாமந்தி மற்றும் மல்லிகை போன்ற மாலைகள் தொங்குகின்றன.
· விலை குறைவான கார்களில் மனைவி ஓட்டுனர் இருக்கைக்கு அருகினில் அமர்ந்திருக்கிறார், குழந்தைகள் dash board ல்  சாய்ந்து தூங்குகின்றன. பின்னிருக்கை காலியாகவே இருக்கிறது.
·   பெரும்பாலும் காரில் பயணிப்பவர்கள் பேருந்தில் இருக்கும் கூட்டதை கண்டு வியப்புற்று அது குறித்து பேசிச் செல்கிறார்கள்
·   2 சக்ர வாகனங்களில் குறைந்தது 3 பேர் பயணிக்கிறார்கள். சில வாகனங்களில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் பயணிக்கிறார்கள். இது நீண்ட தொலைவு பயணம் என்பது அவர்களுக்கு மறந்து விடுகிறது.


புகைப்படம் :  Karthik Pasupathy