Monday, August 18, 2014

சொர்க்கம் - வீடும் வீடு சார்ந்த இடமும்

அலை கழிக்கப்படும் வாழ்வின் படகுகளில் அனுதினமும் நாம் சார்ந்திருக்கும் மனிதர்கள் நம்மைக் கொண்டாடினால்....

யட்ஷன் : உலகின் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த நண்பன் யார்?
தருமன் : அவனது மனைவி.

மகாபாரதம் : யட்ச பர்வம்

எனக்கான கனவுகளையும், கவிதைகளையும் கொண்டாடியவள் நீ.

நீ நிஜம்
நீ காற்று
நீ ஆகாயம்
நீ ஆதார ஸ்ருதி.

அபஸ்வரத்திற்கு முன்பாகவே என்னை மாற்றியவள் நீ.

உன்னை அன்றி என்னை யார் முழுமையாக மாற்றி இருக்க முடியும்.

12 வருட காலம், காதல், தனிமை, வலிமை, அழுகை, வரம். சந்தோஷம், விருப்பங்கள், வலிகள், மாற்பட்ட கருத்துக்கள், மாறாத ஒற்றுமைகள், ஒற்றுமை, அன்பு. தமிழின் அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கிறது நம் வாழ்வு.

உன் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
என் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
காலம் இன்னமும் பாடலகளை எழுதிக் கொண்டிருக்கிறது.

தேர்தெடுக்கப்பட்டவைகள் உரிமையாளருக்கு சொந்தம் எனில், நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் உன் உரிமையாக.

உனக்கான கோபங்கள் குழந்தை தன்மை உடையவை என்பதை எப்போதோ உணர்ந்தவன். அதுவே உன் கோபங்களை ரசிக்கச் செய்கிறது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆம் எனக்கு வரம் கிடைத்து விட்டது.

எனக்கான அனைத்து தருணங்களிலும் நீ இருக்கிறாய் என் ஆச்சாரியனைப் போல், ஆச்சாரியனாகவும்.

No comments:

Post a Comment