Friday, March 27, 2015

காற்றில் ஆடும் சருகுகள் - 15

தூரத்தில் இருக்கும் மரத்தில் அமர்ந்து காலையில் இருந்து 'க்கூகூகூகூகூகூ'  என்று  அலைவரிசை மாறாமல்  கொண்டிருக்கும் அக்கூ குருவி(ஏன்டா, சரியாதானே பேசறேன்) சுதந்திர நாளினை முழுமையாக்கிக் கொண்டிருக்கிறது, 
**************************************************************************************************************************************
உருளைக் கிழங்கு போண்டாவிலும் உ.கிழங்கு உண்டு. மசால் தோசையிலும் உண்டு. ஆனா ஏன் சாதா தோசையை விட மசால் தோசைக்கு  ரூ.10 அதிகமா வாங்குறான். இப்படிக்கு மனைவியிடம் கடன் வாங்கி உ..கிழங்கு போண்டா சாப்பிடுபவர்களிடம் பிடுங்கி தின்று யோசிப்போர் சங்கம்.
**************************************************************************************************************************************
குழந்தைகளில் 'ப்ளீஸ்' என்று கண்களை சாய்த்து தலையை ஆட்டி கேட்கும் குரலில் ஆயிரம் கவிதைகள் ஒளிந்திருக்கின்றன.
**************************************************************************************************************************************
ஒரு பொண்ணு ‘wow’  ன்னு status போட்டா 72 லைக் வருது. மனசு ஒடஞ்சி feeling sad ன்னு status போட்டா 1 லைக் வருது,  இப்படிக்கு பத்து லைக் வாங்க ப்ரம ப்ரயத்தனம் செய்வோர் சங்கம்.

Google translation.
A girl 'wow' nnu status Bota gets like 72. Otanci heart feeling sad status nnu Bota 1 Like coming up, so you can buy ten Like those prama prayattanam Association.
**************************************************************************************************************************************
'ஒரு கதை சொல்லுங்கள்' என்பது மாறி 'போதும்பா, நிறுத்துங்க,
போரடிக்காதீங்க ' என்னும் பொழுதுகளில் வாலிபத்தின் தொடக்கம் நிகழ்கிறது.
**************************************************************************************************************************************
சில தினங்களுக்கு முன்
கல்லூரிப் பேருந்தில் பாட்டு கேட்டுக் கொண்டே செல்கிறேன். வெளியே சிறு தூறல்களாய் மழை. காற்று என் மேனியை தழுவிச் செல்கிறது. பாடல் மாறுகிறது. ' எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்'. 
பாடலும் அதனோடு இசையும் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுகிறது. வாழ்வில் இன்னும் வாழவேண்டிய சந்தர்ப்பங்கள் இருப்பதை உணர்கிறேன்.
**************************************************************************************************************************************
ஏன் இந்த பெண்கள் இப்படி கொல கொலன்னு பேசிகிட்டே இருக்கிறார்கன்னு ஆண்களும், ஏன் இந்த ஆண்கள் எதுவுமே இப்படி எதுவுமே கண்டுக்காக இருக்கிறார்கள்ன்னு பெண்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இது அனைவரையும் பார்த்து எதுவுமே பேசாமல் வேடிக்கை பார்ப்போர் சங்கம்.
**************************************************************************************************************************************
 என்னடா நூடுல்ஸ், மைதா மாவ இடியாப்பம் மாதிரி புழிஞ்சி கொஞ்சம் மசாலா போட்டா அது நூடுல்ஸ், அதையும் பித்தளை பாத்திரத்தில் வச்சி கொடுத்தா அது ஸ்டார் ஹோட்டல். போங்கடா, போங்க. இப்படிக்கு பீடி வாங்க காசில்லாமல் பிரியாணிக்கும், நூடுல்ஸ்க்கும் ஆசைப்படுவோர் சங்கம். 
**************************************************************************************************************************************
இன்னைக்கு தேதி 14-10-14 . வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும்.
இப்படிக்கு தேதி பார்த்துக் கொண்டே தன்னையும் குழந்தையாக நினைத்து குழந்தைகள் தினம் கொண்டாட மாத சம்பளம் எதிர் பார்போர் சங்கம்.
(எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை)
**************************************************************************************************************************************
என் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்படது. புற மாறுதல்கள் என்னை சுடுவதில்லை.
**************************************************************************************************************************************
கல்லூரிப் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன்.
வெளியே மழை.
'முதல் மழை எனை நனைத்ததே' பாடல் ஒலிக்கிறது.
சுற்றுப்புறமும், பாடலும் தனியே ஒரு தள்ளாட்டத்தில் விடுகின்றன.
நினைவுகளை விட கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லை என்றுபடுகிறது.
மனது மயங்கிக்கிடக்கிறது.

ஏங்க மணி ஆறு  ஆவுது. எழுந்திரீங்க.சீக்கிரம் காலேஜீக்கு கிளம்புங்க. அப்புறம் பஸ்சை விட்டுடுவீங்க.(யார் இது)

'அப்பா உங்களுக்கு தெரியாதா. ஸ்கூல் மட்டும் தான் லீவு. உங்க காலேஜூக்கு லீவு இல்ல. கிளம்புங்க சீக்கிரம். நானும் அம்மாவும் நெட்ல படம் பாக்கணும்'  ( இது யாரு)

மனிதர்களின் துக்கங்களில் சந்தோஷம் கொண்டாட ஒரு கூட்டமே அலையுது அப்பா

No comments:

Post a Comment