நினைவுகளை கலைத்தலை விட கனமான வேலை
ஒன்றும் இல்லை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வறுமை உடையவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சாலை ஒரங்களில் இருக்கும் மரங்களில் மிக மெல்லிய அடுக்குகளாக மணல் துகள்கள் படிந்திருப்பதைப் போல், 35+ கடக்கும் மனிதர்களிடம் மரணம் குறித்த சிந்தனை படிந்திருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பட்ட மரத்திலிந்து பறந்து செல்கின்றன பல
பறவைக் கூட்டங்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட வன்முறையின் மிகச் சிறந்த
வடிவம் மௌனம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தண்டவாளங்களின் மேல் பறந்து செல்லும்
பறவைகளின் சேரும் இடம் எதுவாக இருக்கக் கூடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வாழ்வின் தனிமைகள் கற்றித் தருவதை விட வேறு யார் அதிகம் கற்றுத்
தரமுடியும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேடலைத் தொலைத்தவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனைவியின் முகத்தில் அதிக பிரகாசம்
உண்டாக்க வேண்டுமா? 'மணி 10 ஆயிடுத்து. ஒரே தடவையா மதியம் சாப்பிடலாமா?' என்று
சொல்லிப் பாருங்கள்.
அன்னைக்கு நிச்சயம் கறி மீன் குழம்பு
வகையரா தான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உறவுகள் அற்று இருப்பவர்களுக்கே உலகம்
வசமாகிறது.
No comments:
Post a Comment