Friday, January 24, 2014

நகர மறுக்கும் நினைவுகள் - 1

டேய், சீக்கிரம் வாடா.
எதுக்குடா?
வாடக சைக்கிள் எடுக்கணும். கத்துக்கத்தான்.
யாரு கடையில, மீசக் காரங்க கடையிலயா?
ஆமாம்டா.

யாருடா பசங்களா நீங்க
கடைசி மெத்த வீட்டுப் பசங்க.
அவன் யாருடா?
டெய்லர் பையன்.
யாரு, யாருக்கு கத்துக் குடுக்கப் போறீங்க.
நான் அவனுக்கு சார்.
ஒரு மணி நேரத்துக்கு 60 காசு. ஒரு நிமிஷம் அதிகமானாலும் இன்னொரு 60 காசு குடுக்கணும். கண்களில் சிரிப்பு.

கரைக்டா கொடுத்துடுவோம் சார்.
லேடிஸ் வண்டியா, ஜென்ஸ் வண்டியா.

நீ என்னடா சொல்ற? - ஒருவன் மற்றொருவனிடம். குழப்பம் இருவருக்கும்.
ஜென்ஸ் வண்டின்னாத்தான் குரங்கு பெடல் போட்டு பார்ல ஏற முடியும், அதால ஜென்ஸ் வண்டி தாங்க.

சைக்கிள் கைகளில்.
வண்டியை தள்ளிகிட்டு நம்ம தெருவுக்கு போவோம்.
இந்த வழியில பஸ் நிறைய வரும்(மணிக்கு ஒரு டவுன் பஸ்). அதால ராஜா தெரு வழியா போய்டுவோம்.

முது தண்ட வளைக்காம தலைய நேர பாருடா
கொஞ்சம் தண்ணி குடிக்கலாமாடா.
எடுத்ததே ஒரு மணி நேரம். இதுல தண்ணி குடிச்சா நேரம் போய்டும்.
டேய், எடுக்கும் போது மணி பாத்தியா?
பாத்தேன். 4.46 டா.
டேய், கம்னாட்டி, அது அவரு கடை கடிகாரம், உங்க வீட்டு கடிகாரத்ல என்ன மணி. அத வச்சித்தான் ஒரு மணி நேரத்ல திருப்பி கொடுக்கணும்.
பாக்கலடா.
போடா பன்னி.
முகம் மற்றும் உடல் முழுவதும் வியர்வை இருவருக்கும்.
சரி வாடா, கொண்டு போய் கொடுத்துட்டு வந்துடுவோம்.

என்னடா பசங்களா, பத்து நிமிஷம் முன்னாடியே வந்துட்டீங்க.

இருவருக்கும் 100 வாட் பல்பு பிரகாசம்.

இன்னொரு ரவுண்ட் போய்ட்டு வரோம் சார்.
கரக்டா, பத்து நிமிஷம் தான். இல்லன்னா இன்னொரு ஒரு மணி நேரம் கணக்கு.

ஓகே சார்.

சரியாய் பதினோராவது நிமிடம் திருப்பிக் கொடுக்கும் போது கலவரம் இருவருக்கும்.
எவ்வளவு சார்.
60 பைசா.
நிம்மதிப் பெரு மூச்சு - இருவருக்கும்.


ஏம்பா, என் ப்ரெண்ட் ஒரு கியர் வைத்த சைக்கிள் வாங்கி இருக்கான். ஜஸ்ட் 5999 ஒன்லி தாம்பா, அதமாதிரி எனக்கும் ஒன்னு வாங்கிக் கொடுப்பா. என்னப்பா நாம்பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். நீ முழிக்கிற. - மூன்றாவது படிக்கும் மகன்.

Click by : Karthik Pasupathy

Wednesday, January 1, 2014

காதலுடன் காதல்...


எல்லா வீட்டிலும் ஒரு எலி எப்பொழுதும் மாட்டிவிடுகிறது - என் வீடு தவிர்த்து. (இன்னைக்கு ஒரு புது மெனு செய்திருக்கிறேன் ) 
-------------------------------------------------------------------------------------------
கைகள் உணவினை தயார் படுத்திக் கொண்டிருக்கும்.
சாப்பாடு நல்லா இருக்கா??
???
வாய தொறந்து சொன்னாத்தான் சாப்பாடு செய்ய ஆசயா இருக்கும்.

??
சாப்பாடு நல்லா இருக்கு(மாறுதலுக்காக - வேறு வழி)
நம்ம வூட்ட தவிர எல்லா வீட்டு சாப்பாடும் நல்லா இருக்கும். அப்படி இருக்கு நாக்கு. இது பக்கத்து வீட்டு சாம்பார்.

பெண்களுக்கான உலகில் என்றைக்கும் ஆண்களுக்கு அனுமதி இல்லை.
-------------------------------------------------------------------------------------------
நிகழ்வு 1 - அன்னம் ப்ராணனுக்கு சமம். அன்னமே உயிருக்கு ஆதாரம். (வேதம் - புத்தகம்)
நிகழ்வு 2 - 4 வாய் சாப்பாடுக்கு 40 ரூசி கேக்குதா
 
(சம்பவங்கள் யாவும் கற்பனையே )
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி : உங்களுக்குன்னு ஒரு முடிவு வச்சிருங்க, யாருக்காகவும் எப்பவும் அத மாத்தாதீங்க.
மனைவி (வேறுவகை) : உங்களுக்குன்னு ஒரு முடிவு வச்சிருக்கீங்க, அத மாத்திக்கலன்னா என்னா வேல அது.

என்னலே நடக்குது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி - எப்பவோ ஒரு நாளைக்கு சத்யவான் சாவித்ரி படம் போடரான் டிவில. நிம்மதியா படம் பாக்க விடுறீங்களா? 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு விஷயம் இருவிதமான நிகழ்வுகளில் (எதிர்மறையாய்)
மனைவி - ஏன் கத்ரிங்க. கொஞ்சம் அமைதியா இருங்க.
மனைவி - எது சொன்னாலும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்.

என்ன கொடும சார் இது?
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Click by : Gayu Venkat