Friday, February 28, 2014

நகர மறுக்கும் நினைவுகள் – 4 பூங்காற்று திரும்புமா?

காரணங்கள் அற்று ஒரு குரலில் மயக்கம்(வேறு எப்படி வகைப்படுத்த முடியும்) உண்டு எனில் அதில் திரு. மலேஷியா வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு.

அந்த வகையில் அவர் குரலில் இன்றைக்கும் மயங்கும் ஒரு பிறவி நான்.

பாடல் ஆரம்பமாகிறது. தலைவன் ஒரு கல்லில் அமர்ந்திருக்கிறான். மெதுவாக அவனுள் இருக்கும் வலிகள் சொற்களின் வடிவம் பெற்று காற்றுடன் கலக்க ஆரம்பிக்கின்றன.

மெதுவாக வேட்டியின் நுனிகள் காற்றில் ஆட ஆரம்பிக்கின்றன. ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.

பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

மெதுவாக நடை பயணம் தொடங்குகிறது.  மெதுவாக மீண்டும் காற்று அசைகிறது.

ராசாவே வருத்தமா

வார்த்தைகளில் முடிக்கும் முன்பே ஒரு குயில் கூவ ஆரம்பிக்கிறது. காற்றின் வீச்சமும் குயிலின் கீதமும் இணைய ஆரம்பிக்கின்றன.

ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

விழிகள் தேடலை ஆரம்பிக்கின்றன. பாதங்கள் நடை பயிலுகின்றன. ஆற்று நீர் வழிந்தோடுகிறது. தலைவி கரையில் அமர்ந்திருக்கிறாள்.

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

தலைவி பதில் உரைக்கிறாள்.

இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

உரையாடல் தொடர்கிறது

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சொகத்த சொன்னேனடி

சோக ராகம் சொகந்தானே(சொல்லில் முடிவில் பறவை பறக்கிறது)

குயில் முகம் காட்ட மறுக்கிறது. தோணியில் குயிலில் பயணம் தொடர்கிறது. தலைவன் பயணம் தரையில் தொடர்கிறது.

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

குயில் ஆறுதல் கூறுகிறது.

உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

தலைவன் பயணம் தொடர்கிறது

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிக்கேன் நானே

தன் மன வலிகளை குறைத்திடும் தோள்களைத் தேடுகிறான் தலைவன்.

பூங்குயில் யாரது

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க.

இன்று வரையில் சிவாஜின் அந்த கடைவாய் புன்னகையை யாரும் நெருங்க முடியவில்லை.

அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

சிவாஜியின் மேலும் கீழுமான பார்வை புன்னகையுடன் (என்ன சொல்ல)

நான்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா

காமம் கடந்த விஷயங்களை, இயல்பான மனித வாழ்வின் மிகப் பெரும் வலிகளை காலம் பதிவு செய்து கொண்டிருக்கிறது. அதானால் தான் பூங்காறு இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது.

துக்கடா :
சார் நீங்க முதல் மரியாதை படத்துட நடிச்சது பத்தி...

சிவாஜி : நான் எங்க நடிச்சேன். அந்த பய என்ன படத்துட நடக்க வச்சி படத்த முடிச்சிட்டான்.

Image - Internet

Tuesday, February 25, 2014

நகர மறுக்கும் நினைவுகள் – 3 ஆச்சார்ய தேவோ பவ:

பள்ளி நாட்களைப் பற்றிய நினைவு எப்போதும் விலகுவதில்லை.

அப்போது எலிமன்டரி(ஆமாம் தானே) ஸ்கூலில் இருந்து பெரிய( higher secondary) ஸ்கூல் வந்த புதிது.

மீனாட்சி டீச்சர் எங்கள் கிளாஸ் மிஸ்
.

நான் நடந்து போகக் கூடாது என்பதற்காக என் அப்பா சைக்கிள் ரிக்க்ஷா வில் அனுப்புவார்கள். நான் திருவிழந்துதூர் மேட்டுத் தெரு அவர்கள் பெருமாள் கோவில் மேல வீதி.

அவர்கள் எப்போதுமே மிக அழகாக உடை உடுத்துவார்கள். (அது அம்பாளுகே உரித்தானது என்று இப்போது தான் தெரிகிறது. பாடம் நடத்துவே ஒரு கம்பீரம். சொற்கள் காத்திருந்து அப்படியா வரும்..  எத்தனை குடம் தேன் அபிஷேகமோ)

டீச்சர் : இன்னைக்கு தமிழ் பாடம். வாக்கியத்தில் அமைத்து எழுதுவது எப்ப்டீன்னு கத்துத் தரேன்.

கூட்டம் : .....(வேற யாரு நாங்க தான்)

டீச்சர் : இப்படித்தான் எழுதனும், புரிஞ்சுதோன்னோ. இப்ப எல்லாரும் 'குறிக்கோள்' என்பது குறித்து வாக்கியத்தில் எழுதுங்கள்.

நான் : 'ஒழுக்கமே உயிர்' என்பது நம் பள்ளியின் குறிக்கோள்.

டீச்சர் :  ரொம்ப நன்னா இருக்குடா, எல்லாரும் இவனை மாதிரி எழுதுங்க பாக்கலாம். (முதல் பாராட்டு.. )

விதி விளையாட ஆரம்பித்தது.

ரிக்க்ஷாகாரர் : இன்னைக்கு லேட், அதால டீச்சர் வீட்டுக்கு நான் வந்தேன்னு சொல்றேன். நீயும் அப்படியே சொல்லு என்னா?

நான் : சரிங்க.

இது நடந்து ஒரிரு நாள் கழித்து டீச்சர் அழைதார்கள். (பச்சை நிறப்புடவை.. மறுபடியும் அம்பாள்) குலை நடுங்க ஆரம்பித்தது.

டீச்சர் : ஏன்டா, உன்னைய நல்ல பையன்னு நினைச்சுண்டு இருந்தேன். இப்படி பண்ணிட்டையே.

நான்

டீச்சர் : இதுக்கு தண்டனை உண்டு தெரியுமா. இனிமே நீ எங்கிட்ட பேசக் கூடாது. (உலகம் தலையில் விழுதல் இது தானா). பசங்களா யாரும் இவனோட பேசாதீங்க. இனிமே என் சேர்ருக்கு கீழ தான் நீ உக்காரணும்.

நான் :  டீச்சர், டீச்சர் இனிமே இப்படி செய்யல டீச்சர், பேச மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க

டீச்சர்.

டீச்சர் : (தெய்வத்தின் கண்களில் ஒளிக் கீற்று), தப்பே பண்ணக் கூடாது, தெரியாம செஞ்சிருந்தா தப்ப ஒத்துண்டு இனிமே நடக்காம சரி பண்ணிக்கணும்.

வெகு நீண்ட வருடங்களுக்குப் பின் வீட்டை அடையாளம் கண்டு அவர்களை சந்திதேன்.

டீச்சர் :  நீங்க யாருன்னு தெரியலையே

நான் : நீங்கங்கறத விட்டுடுங்க. நான் உங்க பழைய மாணவன். (பழைய நினைவுகள்.. பரிமாற்றங்கள்..)

டீச்சர் : இருடா காப்பி போட்டு எடுத்துண்டு வரேன், நானே மிஷின் வச்சிருக்கேன். (காபியா -அது தேவாமிருதம்னா)

நான் : டீச்சர் நான் நம்ஸ்காரம் பண்ணனும்.

டீச்சர் : ஏன்னா சித்த இங்க வாங்கோ(அம்பாளுக்கு உரியவர் வேறு எப்படி இருக்க முடியும்). இவன் என் கிட்ட படிச்சான். நம்ஸ்காரம் பண்ணனுமாம். நன்னா இருடா. நல்லா வருவடா.

விதைகள் விருட்சங்கள் ஆகும். அந்த அடிப்படை விதைகள் அவர்களால் விதைக்கப்பட்டவை.

அனைத்தும் ஒன்றில் தோன்றி ஒன்றில் ஒடுங்குகின்றன. ‘ஆச்சார்ய தேவோ பவ:’



Click by : SL Kumar