Tuesday, August 26, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 12

விலக்கப்பட்ட மனிதர்களின் நேசிப்புகள் உண்மையானவைகள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருப்பு மிகவும் அழகான நிறம். ராமர் கருப்பு, கிருஷ்ணர் கருப்பு, அந்த... (அட சே...) அதனால் கருப்பாக இருப்பதற்காக மகிழ்வு அடைவோம். இப்படிக்கு பெரிய fair and lovely  வாங்குவோர் சங்கம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அஹோரிகள் அழுவதில்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனவு காண்பது கண்கள், நிஜத்தில் வாழ்வது நெஞ்சம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எதிரியை காயப்படுத்த மௌனத்தை விட சிறந்த ஆயுதம் இல்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருணை அற்றுச் செல்லும் காலங்களில் கனவுகளுடன் வாழ்பவன் தானே மனிதன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 உறக்கங்கள், மீளா உறக்கங்களை ஒத்து இருக்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒவ்வொரு தெருக் கூத்தாடியும் நினைவு படுத்துகிறான் வாழ்வினையும், பொருள் பெறுவதும் மட்டுமே வாழ்வு   என்று.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கடக்கும் பொழுதுகளை விட கடந்த பிறகான ஒய்வுறுதல் மிக்க ஆயாசம் தருகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேசம் வென்றவரைவிட
தேகம் வென்றவரையே கொண்டாடுகின்றன
உலகங்கள்

Thursday, August 21, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 11

பள்ளி விடுமுறைக் காலங்களில் மகள்களை விட தந்தைகளே அதிகம் மகிழ்வுறுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தன்னாலே தான் தன் பிறப்பு என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நேசிப்பையும் நிரந்தரமின்மையையும் ஒன்றாகக் காட்டும் இடங்களே இரயில் பயணங்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அருந்து காப்பியின் கடைசித் துளிகள் நினைவுபடுத்துகின்றன அது எத்தனை மயக்கம் தரும் என்று.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எரியும் விளக்கிறகு ஏது கர்மம்?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட ஆனந்த அனுபவத்தின் வெளிப்பாடு அழுகையாகத் தான் இருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனிதர்களின் மூடப்படா கதவுகளின் வழியே கனவுகள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லறையில் காவளாளி யாருக்காக?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
காலை நேரங்களில்  மிக அழகாக கத்திக்கொண்டு இரு கால்களால் மரத்தில் அமர்ந்து, தன் முன் கால்களால் தென்னம் குரும்பைகளை உண்ணும் அணில்கள் அழகானவையாக இருக்கின்றன. அதனால் விடியல்கள் வெளிச்சம் பெறுகின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனம் பயிற்று விக்க கூடியது என்பது தாண்டி அறியக்கூடியது என்று உணர்பவன் மயானம் அடையான்.

Monday, August 18, 2014

சொர்க்கம் - வீடும் வீடு சார்ந்த இடமும்

அலை கழிக்கப்படும் வாழ்வின் படகுகளில் அனுதினமும் நாம் சார்ந்திருக்கும் மனிதர்கள் நம்மைக் கொண்டாடினால்....

யட்ஷன் : உலகின் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த நண்பன் யார்?
தருமன் : அவனது மனைவி.

மகாபாரதம் : யட்ச பர்வம்

எனக்கான கனவுகளையும், கவிதைகளையும் கொண்டாடியவள் நீ.

நீ நிஜம்
நீ காற்று
நீ ஆகாயம்
நீ ஆதார ஸ்ருதி.

அபஸ்வரத்திற்கு முன்பாகவே என்னை மாற்றியவள் நீ.

உன்னை அன்றி என்னை யார் முழுமையாக மாற்றி இருக்க முடியும்.

12 வருட காலம், காதல், தனிமை, வலிமை, அழுகை, வரம். சந்தோஷம், விருப்பங்கள், வலிகள், மாற்பட்ட கருத்துக்கள், மாறாத ஒற்றுமைகள், ஒற்றுமை, அன்பு. தமிழின் அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கிறது நம் வாழ்வு.

உன் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
என் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
காலம் இன்னமும் பாடலகளை எழுதிக் கொண்டிருக்கிறது.

தேர்தெடுக்கப்பட்டவைகள் உரிமையாளருக்கு சொந்தம் எனில், நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் உன் உரிமையாக.

உனக்கான கோபங்கள் குழந்தை தன்மை உடையவை என்பதை எப்போதோ உணர்ந்தவன். அதுவே உன் கோபங்களை ரசிக்கச் செய்கிறது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆம் எனக்கு வரம் கிடைத்து விட்டது.

எனக்கான அனைத்து தருணங்களிலும் நீ இருக்கிறாய் என் ஆச்சாரியனைப் போல், ஆச்சாரியனாகவும்.

Saturday, August 16, 2014

காற்றில் ஆடும் சருகுகள் - 10

தனது மகளை கல்லூரி அனுப்ப காத்திருக்கும் வேளையில் மகளை வாகனத்தில் இருத்தி தான் தரையில்நின்று   பேசும் தந்தையில் கண்களில்  மாறுதல் இல்லா ஒரு சந்தோஷம் தெரிகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேகத்தின் பணி தேகம் நீக்குதல் என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அம்மா என்று அழைத்தால் எவ்வாறு தாய் மகிழ்வாளோ, அவ்வாறே நாம் குருவினை அழைக்க அவர்கள்         பிரியப்பட்டு நம்மிடம் வந்து உறைகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(மகா)சந்தோஷம்
மனைவி :  ஏங்க, நான் மௌன விரதம் இருக்கலாம்ன்னு இருக்கேன்.
கணவன் : நான் இப்ப பூமியிலே இல்லையே. வானத்துல இருக்கேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனத்திருப்பவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வினைகளை அறுப்பவனையே பெரு வலிகள் வந்து சேர்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்கள் தங்கத்தை நேசிப்பதை விட தந்தைகள் மகள்களை நேசிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கர்வம் அழித்தலில் மருத்துவ மனைகளின் பங்கு மகத்தானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கற்றல் தாண்டி அறிதலை கொள்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மூச்சுக்காற்றில் சிக்கனம் காட்டுபவன் மயானம் அடையான்.