Thursday, January 29, 2015

I.T என்னும் பம்மாத்து - மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – Appraisal


நிறுவனங்களுக்கு தகுந்தவாறு நவம்பர் (Calender year) அல்லது பிப்ரவரி/மார்ச்-ல் (Financial year) நிகழும் பொய்யான கூத்துக்கள்

இவைகள் நிகழ்த்தபடும் காலகட்டங்களில் பெரும்பாலான மனித வள அதிகாரிகளுக்கு அதிக வேலைகள் கூடும்.

பத்தோடு பதினொன்றாக கடிதம் வரும். உங்களுக்கு ... தேதி ... இவரோடு முதல் நிலை நேர்காணல். மற்ற எல்லாநிகழ்வுகளையும் விட இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த நாளில் விடுமுறை கிடையாது. உறுதி செய்க. மனைவி பேச்சுக்கு எதிர் பேசா கணவன் போல் அதனை உறுதி செய்யவேண்டும்.

(நம்மை நேர்காணல் செய்பவர்கள் முதன்மை அதிகாரிகளோடு ஏற்கனவே பேசி இருப்பார்கள். (எது எப்படி பேச வேண்டும் என்பது))


காட்சி -1  நேர் முதன்மை அதிகாரிகளுடன்
1.
Welcome to first review meeting
2.
என்னாங்க, 10 நிமிடம் முன்னாலே வந்துடீங்க?
நீங்க தானே சொன்னீங்க எப்பவுமே 10 நிமிடம் முன்னாலே வரணும்னு.
கொஞ்சம் வெளியில இருங்க, நாங்களே கூப்பிட்ரோம்.
3.
என்னாங்க, 2 நிமிடம் லேட்டா வரீங்க?
கொஞ்சம் வேலை. அதான்..
அதான் ஏற்கனவே மெயில் அனுப்பி இருந்தோமே, அத கூட ஃபாலோ பண்ணலேனா எப்படி?
4
இன்னொரு மதிப்பீட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.(நீங்க என்னா சொல்லப் போறீங்கன்னு தெரியும்டா)
 5
இது நீங்க போன வருஷம் எழுதி கொடுத்தது. இதுல எது எது நீங்க செய்திருக்கிறீங்கள்ன்னு பாப்போம்.
 5.1
நீங்க எழுதின முதல் பாய்ண்ட்  - 90% முடிச்சி இருக்கீங்க. இன்னும் நீங்க பெட்டரா செய்து இருக்கலாம்.அதால உங்களுக்கு ‘D’ கிரேட்
கொஞ்சம் தானே மிஸ் பண்ணி இருக்கேன்
அதுதான் பிரச்சனை. நீங்க மிஸ் பண்ண தால நம்ம entire Team 2 weeks delay. அதால உங்களுக்கு ‘D’ கிரேட்.
5.2
நீங்க எழுதின ரெண்டாவது பாய்ண்ட்  - 70% முடிச்சி இருக்கீங்க. இன்னும் நீங்க பெட்டரா செய்து இருக்கலாம்.அதால உங்களுக்கு ‘D’ கிரேட்
 ---

அடுத்த தடவை நல்லா பண்ணுங்க.
5.3
நீங்க எழுதின மூணவது பாய்ண்ட்  - 50% முடிச்சி இருக்கீங்க. அதாவது நீங்க ஆரம்பிக்கவே இல்லை.அதால உங்களுக்கு ‘D’ கிரேட்.

அக்சுவலா இதுக்கு கிரேட் குடுக்க கூடாது. நீங்க பெட்டரா பண்ணனும் அப்படீங்கறத்துகாக உங்களுக்கு ‘D’ கிரேட்

அடுத்தவருஷத்துக்கு என்னா செய்யப்போறீங்க?
..
இது எல்லாரும் செய்றது தான். இத பெரிய விஷயமா சொல்லாதீங்க. வேற ஏதாவது எழுதுங்க.

இல்ல கம்பெனிக்கு தேவை இது தான். அதால இத நீங்க செய்வீங்க அப்படீன்னு எழுதிக்கவா(இல்லன்னா மட்டுமா உட்டுடவாப் போறீங்க)
5.4
அட்மின்லேருந்து டீட்டெய்லா info வந்து இருக்கு. நீங்க நிறைய லீவு எடுக்குறீங்கன்னு. அத குறைச்சிகீங்க.(அடேய் அது வருஷத்துக்கே 5 நாள் தானடா)

5.5 
இப்ப நீங்க சொன்னது நாம பேசினது எல்லாம் கரெட்ன்னு கையெழுத்து போட்டு குடுங்க.