DNA can store digital information
Reality
• Model developed by Swiss scientists
• DNA as a method to store the data
• It can last upto 2000 years without breaking down
• While decoding, no errors
• 28grams of DNA could store 300000 terabytes.
• DNA code is written in sequences of four chemical nucleotides, known as A,C,T and G.
Proof
1.
ஏங்க, காய்கறி வாங்கிகிட்டு கொத்தமல்லி, கருவேப்பில வாங்கிகிட்டு வரல.
மறந்துட்டேன்.
இந்த தப்பத்தான் போன தடவையும் சொன்னீங்க. இது உங்களுக்கு 4வது தடவ. இது முன்னால 06-12-2003 12.31
PM, 05-11-2007 6.01 PM, 27-06-2012 7.01 AM, 19-08-2015 8.03 PM ம் தேதிகள்ல இப்படி செஞ்சி இருகீங்க. உடனே நம்ம டேட்டாவ எடுத்து பாத்திருப்பாளோன்னு நினைக்காதீங்க. எல்லாம் என் ஞாபத்தில் இருந்து சொல்றேன்.
#செத்தாண்டா சேகரு
2.
உங்க பாட்டி தவறிட்டாங்கன்னு இதுக்கு முன்னால 3 தடவ லீவு எடுத்து இருக்கீங்க. 06-06-2006 10.30 AM, 09-05-2009 7.35 PM, 28-03-2013
4.30 PM. ஆனா உங்களுக்கு மொத்தமே 2 பாட்டி இருக்கிறாங்கன்னு Employee
Personal form ல fillup பண்ணி கொடுத்து இருக்கீங்க. சொல்லுங்க எந்த கம்பெனி interview க்கு போய்ட்டு வந்தீங்க
3.
Wife : நீங்களும் நானும் 2 வருஷம் லவ் பண்ணும் போது பைக்ல போன தூரம் 27131.56 கிமி. அதுல 34790 தடவ ரைட்ல திரும்பி இருக்கீங்க. 57943 தடல லெஃட்ல திரும்பி இருக்கீங்க. 3 தடவ பொண்ணுங்களை திரும்பி பாத்து இருக்கீங்க. இப்ப ஏன் நீங்க என்ன கவனிக்கறது இல்ல.
Husband
: அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா…
Wife : No explanation. I want answer.
4.
சார், நாங்க ' உத்தம கழுகு' கம்பெனியில் இருந்து வரோம். நாங்க DNA
storage ல
Specialist.
அட போங்க சார், எங்க கேப்டன விட நீங்க டீட்டெல் சொல்ல முடியாது
5.
வானவில் ஜோதிட ஆராய்ச்சி மையம்
1.சார் நீங்க எங்க software ஐ use பண்ணுங்க சார்
2.நாங்க
ஏன் உங்க software ஐ use பண்ணனும்?
1.சார் எங்ககிட்ட
இருக்கிற டேட்டா வச்சி 2015ல பிரசன்னாவுக்கும் ஸ்னேகவுக்கும் குழந்தை பிறக்கப்போகுதுன்னு
சொன்ன முதல் ஆள் நாங்க தான் சார்.
Image : Internet