Tuesday, March 22, 2016

2038 - குழந்தை மனக் குறைபாடுகளை கண்டறியும் இயந்திரங்கள்



Humanoid robot works in therapy for children with autism

TecO is the name of the humanoid robot that detects neural signals using a headset or a hood, which has electrodes mounted on the child's head and records this signals; then they are sent to a computer that translates them into information that is interpreted by a psychologist or a neurologist.

It detects certain intentions, such as moving an arm, if the kid is sleepy or alert, but doesn't read thoughts; the expression must be made clear. If the robot registers sadness in the child, it then modifies its mode of action to change that feeling.

Emotions are measured through facial expressions, which traditionally are done by observation, but the robot uses cameras that record the number of times that the kid turns to see it. The eye contact between the two is what denotes progress.

              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.

இந்தாபா, எவ்வூட்லயும் ஒரு கொயந்த இருக்கு. நான் அதுக்கு புருசன்னு பேரு வச்சிருக்கேன். உம் மிசின வச்சி அது வியாதிய சரி செய்ய முடியுமா?

2.

இந்தா பாருமா, நாங்க neural signals வச்சி problem identification செய்யிரோம். அதுக்காக signal சரியில்ல, call drop ஆச்சுன்னா காச திருப்பி தருவீங்களான்னு கேட்கிறது சரியில்லை.

3.

சார் நம்ம opposite கம்பெனி Sales ஐ எப்படி கொறைக்கிறது. (உன் தமிழ்ல தீய போட்டு கொளுத்த)

இதெல்லாம் ஒரு மேட்டராடா, ஒரு இஸ்கூல் பொண்ணு மொபைல் வாங்கி அது எடுத்து இருக்கிற செல்பி போட்டாவ register செய்யணும்னு சொல்லுவோம். ‘Expressions are not clear’ அப்படீன்னு ஆகிடும்.  அவ்வளவுதான்

4.

யோவ், அறிவு இருக்கா உனக்கு, facial expressions register  செய்ய ஆள் அழைச்சிகிட்டு வான்னா, கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆனவன கூட்டிகிட்டு வந்து இருக்கியே. இவனெல்லாம் வச்சி ஒரே ஒரு  expression   கூட எடுக்க முடியாதுன்னு உனக்கு தெரியாதா?

5.

ஏங்க, நாங்க கேமிரா வச்சி expressions   எல்லாம் படம் புடிக்கிறோம்.  நீங்க Professional photographer ஆக இருக்கலாம். அதுக்காக Front camera எத்தனை MB,  rear camera எத்தனை MB Sony's IMX 214 13MP Exmor RS stacked image sensor இருக்கா, Auto focuses 0.3 seconds முடியுமான்னு கேட்கிறது நியாயம் இல்லீங்க.

Ref:

Tuesday, March 8, 2016

2038 - உணவகங்கள்



              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
என்னா சார், சாப்பாட்டு டோக்கனோட ஜெலுசில் மருந்து தரீங்க.
எங்க ஒட்டல் சாப்பாடு சாப்பிட்டா வயறு சரியில்லாம போகும். அதுக்குத் தான் இந்த ஏற்பாடு. அப்புறம் எப்படி எங்க மெடிக்கல் ஷாப்பை நடத்துறது?
2.
என்னா சார், ரவா தோசையோட பூதக்கண்ணாடி  தரீங்க.
அத வச்சித்தான் நீங்க தோச எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும்,
3.
எதுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்க எல்லாம் ஓட்டல் வாசல்ல உக்காந்து இருக்காங்க?
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஹாஸ்பிடலோட ரெப்ரசன்டேட்டிவ். குடுக்குற காசுக்கு தகுந்த மாதிரி சாப்பிட்ட ஒடனே ஆர்யபட்டா ஹாஸ்பிடல் மாதிரி  ஹாஸ்பிடல்ல சேர்ப்போம்.
4.
அடுத்த தடவைல இருந்து கார்த்திகேயன் ஒட்டலுக்கு சாப்பிட போகக்கூடாதுடா?
ஏண்டா?

இல்லடா, ஊசி பின் முனைய கரண்டியா மாத்தி வச்சிருக்காங்க, அதால சாம்பார் ஊத்ராங்க. இன்னும்         கொஞ்சம் வேணும்னா, கைய கழிவிட்டு Rs. 10312.21 க்கு பில் வாங்கிகிட்டு வரச்சொல்றாங்க.
5.
என்னா சார், சாப்பாட்ல உப்பு, ஒரப்பு ஒண்ணுமே இல்ல.

'சன்யாசத்துக்கு முதல் நிலை எங்களது ஓட்டல்' அப்படீன்னு போர்டு எழுதி போட்ருக்கோமே, அத பாக்கலயா நீங்க.

Tuesday, March 1, 2016

நகர மறுக்கும் நினைவுகள் – மாக்கான்




இது சுமாராக 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக இருக்கலாம்.

மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் ஒருவ(ன்)ர் வருவார். எங்கிருந்து வருகிறார், எங்கு அவருக்கு வீடு, அவருடன் யார் யார் இருக்கிறார்கள என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

மேல் ஆடை தூய வெண்மையாக இருக்கும்.வேட்டி சற்றே வெளுத்த காவி. கைகளில் மிக சுத்தமான ஒரு பித்தளை பாத்திரம். (நிச்சயம் 5 கிலோ இருக்கும்.கிட்டத்தட்ட பாய்ஸ் படத்தில் செந்தில் வைத்திருக்கும் பாத்திரம் போல).

நாங்கள்( 3 பேர்) அவருக்கு வைத்த பெயர் 'மாக்கான்'. அந்நாளில் அதன் அர்த்தம் தெரியாது.

எல்லா வீடுகளுக்கும் செல்ல மாட்டார். நிச்சயமாக 4 வீடு மட்டுமே. அதுவும் தினசரி அந்த 4 வீடுகளில் மட்டுமே வாங்குவார். அந்த 4 வீட்டிலும் மறுக்காமல் தினமும் உணவளிப்பார்கள்.

இரவில் மிக மெல்லியதாக ஒலிக்கும் வானொலியின் குரலை ஒத்திருக்கும் அவர் குரல்.'அம்மா சோறு போடுங்கஇதுவே அவரிடம் இருந்து வரும் அதிகப்படியான வார்த்தைகள்.

இரண்டு மூன்று அறைகள் இருக்கும் வீடுகளில் சில நண்பர்களுடன் ஒளிந்து கொள்வேன். யாருக்கும் கேட்காமல் எல்லோரும் சேர்ந்து கத்துவோம். 'அம்மா சோறு போடுங்க'. சத்தம் அதிகமானால் வீட்டு பெண்களிடம் இருந்து அடி விழும்.

சில நாட்களில் கைகளில் இருக்கும் குச்சியால் விரட்ட வருவார். பல நாள் எதுவும் செய்ய மாட்டார்.

மூன்று வருடங்கள் தொடர்ந்து அவரை பார்த்திருக்கிறேன்.
பிறகு
அவரைக் காணவில்லை.

இன்றைக்கும் யாராவது யாசித்தால் இந்த ஞாபகம் தவிர்க இயலாதாக இருக்கிறது. எவ்வித காரணும் இன்றி இன்று உங்கள் நினைவு.

நீங்கள் எவ்வடிவத்திலும் இருக்கலாம். என் செய்களுக்காக மானசீகமா மன்னிப்பு கோருகிறேன். 

ஏனெனில் நீங்கள் ‘ப்ரம்மம்’.


புகைப்படம் : R.s.s.K Clicks