Sunday, November 23, 2014

2038 - வளர்ப்பு மிருகங்கள் - Pet animals



2038 - வளர்ப்பு மிருகங்கள்  - Pet animals


(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
உங்களது வளர்ப்பு மிருகங்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவைகளுக்கு உடற் பயிற்சி தருகிறோம், ஒருமணி நேரத்திற்கு Just 2999 + tax

2.
உங்களது வளர்ப்பு மிருகங்களுக்கு திருமணம் செய்ய எங்களை அணுகவும்.மேலும் தகவல்களுக்கு  நரி திருமண தகவல் மையம்

3.
வளர்ப்பு மிருகங்களுக்கு நியூமராலஜி படி பெயர் வைக்க எங்களை அணுகவும். (ஐந்து மிருகங்களுக்கு 1 பெயர் இலவசம்)

4.
உங்களது வளர்ப்பு மிருகங்களை உணவிற்காக எங்களிடம் அழைத்து வாருங்கள். வண்ண மீன் உணவகம்( உயர்தர சைவம்/அசைவம்)

5.
உங்களது வளர்ப்பு மிருகங்களை கடற்கரையில் வாக்கிங் செல்ல எங்களது வாகனங்களை பயன்படுத்துங்கள். (முதல் 3 கி.மி - 999+ tax அடுத்த ஒவ்வொரு கி.மி க்கும் ரூ.67 +tax).  மாத வாடகைக்கு கண்டிப்பாக சலுகை உண்டு.


Saturday, November 15, 2014

2038 - செயற்கை கண்திரை - Artificial Retina


(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)



Artificial Retina Brings Light to Blind - News

1.
அந்த தென்றல் சீரியல வர வர சரியாவே தெரியல. 1288 episode 14-11-14. அன்னைக்கு பாத்தேன். அப்புறம் சரியா தெரியல. இந்த ஆப்பரேஷன் பண்ணா ஒழுங்கா தெரியுமா டாக்டர்?

2.
சார், இதெல்லாம் ரொம்ப ஓவர் சார். பொண்டாட்டி பேச்ச 'Blind ' கேட்டுட்டு இந்த ஆப்பரேஷன் பின்னாடி கண்ணு தெரியுமான்னு கேட்டா எப்படி சார்?

3.
சரி சார். ஒத்துக்கிறேன்.. Argus II design consists of an external video camera. அதுக்காக வீடியோ வாடகைக்கு எல்லாம் விட முடியாது சார்.

4.
சார் இதெல்லாம் ரொம்ப ஒவர் சார். Artificial retina operation ஆன பிறகுதான் உங்க கம்பெனிக்கு 'Vision' என்னன்னு சொல்லுவேன் சொல்றது ரொம்ப ஓவர் சார்.

5.
இந்த ஆப்பரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு கண்ணு தெரியும் அம்மா. ஆனா உங்க புருசன் எங்க எங்க காசு வச்சி இருக்கார்னு கண்டுபிடிக்க முடியாது அம்மா.



Wednesday, November 5, 2014

I.T என்னும் பம்மாத்து - வளர்ச்சிப் படிகள் - Stages - 3






கலர் கலரான கனவுகளுடன் உள்ளே நுழைகிறார்கள்.

முதல் சில வாரங்கள்

HR - இதுல நம்ம Company பத்துன எல்லா விஷயமும் இருக்கும். பாருங்க. வேற doubt னா கேளுங்க. We are ready to help you at any time.

Manager : Guys, See me a for a min. This is Mr/Mrs. Joined in our team. He/She did her degree bloaa bloaaa etc.,

மதிய உணவு இடைவேளையில்
Mr.x :  Hi I am ...from (Native).
Mr. Y : Great ya. I am also from (native).( அவன் தான்டா உனக்கு ஆப்பு வைக்கப்போறான்.)
Mr.x :   Work load எப்டி இருக்கும்.
Mr. Y : பெருசா ஒன்னும் இருக்காது. கொஞ்சம் development  கொஞ்சம் testing. மெயில் அனுப்பிட்டு போய்டே இருக்கலாம்.

Mr.Y : Guys, Mr.x join பண்ணி one month ஆகிடுச்சி. Salary வந்துடுச்சி. So he is going to give treat. I hope he won’t mind if we order for Pizaa. Am I right Mr. X? 


Mr.Y : என்ன credit கார்டு வச்சி இருக்கீங்க
Mr.x :  எதுவும் இல்ல.
Mr.Y : எதுவும் இல்லயா?
Mr.x :   இல்ல.
Mr.Y : It has its own plus and minus. என்னோட friend ஒருத்தன் credit card company work ல பண்ரான். அவன்ட சொல்லி ஏற்பாடு பண்றேன். உங்க salary எவ்வளவு?? (அடுத்தவன் சம்பளம் என்னங்கறத எவ்வளவு talent ஆ கேக்ரான்)

HR “ உங்க வர அக்டோபர்ல உங்க mid year performance review
Mr.x : நான் என்ன செய்யனும்.
HR “ This is just formality. We are checking whether you are sync with what you defined in review form.


Mr.Y : நெக்ஸ்ட் வீக் லீவு போட்ராத.
Mr.x :   என்ன விஷேம்.
Mr.Y : Annual year end party. We will have drinks. Drinks சாப்டுவீங்கள்ல?( உன் தமிழ்ல தீய போட்டு கொளுத்த)
Mr.x :    occasionally
Mr.Y : அது போதும்,Hey Guys இவன் நம்ம team da.


சம்பளம் தாண்டி முதல் வருடத்தில் வாங்கிய ஷூ, வாட்ச், சர்ட், பேண்ட், பேக் இத்தியாதிகள் போக கடன் Rs. 75000/-(3 credit cards with limit of 25000 each)

புகைப்படம் : R.s.s.K Clicks