மனைவி: ஏங்க, இனிமே நான் உங்களோட சண்டையே போட மாட்டேன்.
கணவன் : ????
சற்று நேரத்திற்கு பிறகு
மனைவி : நீ எல்லாம் மனுஷனா, கடலை பருப்பு வாங்கிகிட்டு வரசொன்னா, தொவரம் பருப்பு வாங்கி கிட்டு வந்து இருக்கியே, என்னா, உங்க ஆத்தா உன்னை பெத்து வச்சிருக்கிருகாளோ?
கணவன் : கொஞ்சம் நேரத்துக்கு முன்னால தானே சண்ட போட மாட்டேன்னு சொன்ன?
மனைவி : ஆமா, சொன்னந்தான். இன்னைக்கு தேதிய பாரு. 01-Apr-2015
செத்தாண்டா சேகரு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன்னியாக்குமரி - 15 வது மொட்டை மாடியில் 2 நண்பர்கள்
வீட்ல ரொம்ப பிரச்சனடா
என்னடா ஆச்சு
மொத நாளு தண்ணி பிரச்சனை, பக்கெட்ல தண்ணி புடிச்சி வைங்க அப்படீங்கறா, அடுத்த நாளு பக்கெட் தண்ணில கொசு முட்டை போடுது, புடிக்காதீங்க அப்படீங்கறா, என்னடா செய்யறது.
செத்தாண்டா சேகரு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சார், உக்காருங்க. அந்த கம்பில உக்காரலம் வா சார் வா. 5 பேர் தான் --உள்ள உக்காந்து கீராங்க. இவன் ஆட்டோவில் மினி பேருந்து
கூட்டத்தை ஏற்ற முயற்சிப்போர் சங்க தலைவன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் உன்னதமான நிமிடங்கள்
ATM ல் எல்லா details ம் enter செய்து மிஷினில் பணம் count செய்து வெளியே வரும் நிமிடங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பூரி மசால்ல மசால் இருக்கு, மசால் தோசைல மசால் இருக்கு, ஆனா மசால் வடைல மசால் இல்லையே. இவன் 10 மசால் வடையை ஒரே நேரத்தில் சாப்பிடுவோர் சங்கம்,
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சந்தோஷத்த கொண்டாடுரத்துக்கும் காசு தேவையா இருக்கு., கஷ்டத்த கொண்டாடுரத்துக்கும் காசு தேவையா இருக்கு.
உ.ம் - சரவணபவன் 2 காபி -
56 ரூ
Chandra park 2 பீர் - ரூ 450(Including
tips).
என்னடா வாழ்க்கை இது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கும் ஜூஸ் கடையில் இருக்கும் பெண்ணுக்கும் நடைபெற்ற உரையாடல்
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
புரிலங்க.
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
தெளிவா சொல்லுங்க
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
….
Watermelon ஜீஸ் ஒன்னு கொடுங்க.
ஓ Watermelon ஜீஸ்சா, அப்படி தெளிவா கேளுங்க சார்.
அட பிக்காளிப்பயலுகளா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை எந்த வாகனமும் செல்ல இயலா நிலை. 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறேன். எரிச்சலாக திரும்பி வெளியே பார்க்கிறேன்.
வெளியே நிற்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கிறது 'தனிக்காட்டு ராஜா'.
என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறங்கி போச்சு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
IT ல் வேலை பார்ப்பவர்களை எளிதாக கண்டறியும் வழி(General)
31st :
Lets go to Saravanabhavan machi
1st : மச்சான் ஒரு டீ சொல்லுடா, கைல காசு இல்ல
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரயிலில் பயணம் செய்ய மிக வேகமாக நடை மேடை மேல் நடந்து கொண்டிருக்கிறேன்.
முதலாவது பிளாட்ஃபாமில் இருந்து இன்னும் சில நிமிடங்களில்....ஒலித்துக் கொண்டிருக்கிறது.
டோய்ங்.,,, டோய்ங்.,,, (Doppler
effect )
ஓட்டமும் வேகமும் குறைகிறது.
யாருடைய தொலை பேசியிலோ Ring tone. அழகிய கண்ணே, உறவுகள் நீயே
வினாடிக்குள் உலகம் நிலைபெறுகிறது.
அந்த மனிதர் நகர்ந்து விட்டார்.
சுய நினைவு திரும்புவதற்குள் ரயில் சென்றிருந்தது.
No comments:
Post a Comment