Tuesday, November 17, 2015

2038 - மருத்துவமனைகள் - ஒரு வழிப் பாதை





(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
ABC மருத்துவமனை
சார் என் பையனுக்கு தலைய வலிக்குது. ஏதாவது மருந்து குடுங்க சார்.
உங்களுக்கு எந்த ஏரியால வீடு இருக்கு, அண்ணாநகர், அசோக் நகர், திண்டிவனம்?
சார் நான் என்ன பேசரேன், நீங்க என்ன பேசுறீங்க.
அண்ணாநகர்ல வீடுன்னா Suit ல வச்சி பாப்போம். அசோக் நகர்னா ICU ல வச்சி பாப்போம், திண்டிவனம்னா OP ல வச்சி பாப்போம். எப்படியும் நீங்க சொத்த எழுதி கொடுத்துத்தானே ஆவணும்

2.
என்னா சார் இது சளி புடுச்சி இருக்கின்னு வந்தேன். அதுக்கு பில் Rs..144,50,00,000 போட்டு இருகீங்க.

அதுவா ஒரு Lamborghini Aventador book பண்ண காசு இல்லாம இருந்தேன். நீங்க வந்துடீங்க. (Current price Lamborghini Aventador at Rs.4,50,00,000)

3.
சார் இந்த வருஷம் நம்ம மருத்துவமனைக்கு நல்ல income  வந்திருக்கு. IT மாட்டாம இருக்க என்ன செய்யறது சார்

வர மாசத்தில் இருந்து X-Ray தனி யூனிட், Blood test தனி யூனிட். மெடிக்கல் ஷாப்பை லஷ்மி மெடிக்கல்னு மாத்திடுவோம். பாவம் எல்லாம் சாமிக்கு போயிடும். அந்த ICU உள் வாடகைக்கு விட்டுடுவோம். ஏன்னா அது பிரச்சனை புடிச்சது ஒரு பேஷன்ட் கிட்டே இருந்து நமக்கு 1 கோடி நமக்கு வரணும் அப்படீன்னு மட்டும் சொல்லிடுவோம்.

4. சார் உங்க மெடிக்கல் இன்சூரன்ஸ்ல என்ன வசதி?

ஹாஸ்பிட்டல்ல எல்லா செலவையும் ஏத்துப்போம். உசுரு போச்சுன்னா சுடுகாட்டு செலவையும் நாங்களே செஞ்சிடுவோம். அதுல பாருங்க இப்ப சுடுகாட்டுச் செலவெல்லாம் இப்போ ரொம்ப அதிகம் பாருங்க.

5.
சார் எப்படி பாத்தாலும் பில் 50,00,000 வரலயே சார், என்ன செய்ய?
இதெல்லாம் ஒரு மேட்ரே இல்ல,ரூம் சார்ஜ் 10,00,000 போடு. செலைன் ஊசி போட 10,00,000 போடு. ஊசி எடுக்க 10,00,000 போடு. டுயுட்டி டாக்டர் சார்ஜ்  5,00,000 போடு, டுயுட்டி நர்ஸ் சார்ஜ்  3,00,000 போடுடுயுட்டி ஆயா சார்ஜ்  2,00,000 போடு, பெட் சார்ஜ் 7,00,000 போடுஎல்லா டாக்டருக்கும் விசிட் சார்ஜ்ன்னு போட்டு ஒரு 12,00,000 போடுஅப்படியே அட்மிஷன் சார்ஜ்  2,00,000 போடுமொத்தம் எவ்வளவு ஆச்சு.
மொத்தம் எவ்வளவு ஆச்சு.
சார் 61,00,000 வருது சார்.
சூப்பர் பில்ல போட்டு அவன் கையில கொடு.

புகைப்படம் : SLKumar




No comments:

Post a Comment