போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
----------------------------------------------------------------------------------------------
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம்
இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும்,
கவலையும் தெரிகிறது.
----------------------------------------------------------------------------------------------
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின்
கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காரினில் முன்னிருக்கையில்
தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும்
என்று நிஜமாகும்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது
தான் தெரிகிறது. (டேய், போடா, போடா)
No comments:
Post a Comment