Saturday, June 28, 2014

குப்பாச வாழ்க்கை

அவசர அவசரமாக பொத்தேரி புகை வண்டி நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பயணச் சீட்டுப் பெற்றேன். அடுத்த வண்டி 12.36 என்று எழுதி இருந்தது. கடிகாரத்தில் மணி பார்த்தேன்.
12.53. அப்பாடா புகைவண்டி சீக்கிரம் வந்துவிடும்  என்று அவசர அவசரமாக ஒடினேன்.
1.23க்கு புகைவண்டி வந்தது.

ஒரு நிகழ்வினை எதிர்பார்ப்புகள் இல்லாமல் பதிவு செய்ய எண்ணம் உண்டானது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பயணம் செய்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
குழந்தைகள் - பெரும்பாலும் பெரியவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்று பயத்துடன் பயணிக்கிறார்கள்.
கல்லூரி மாணவர்கள் - அவர்கள் உலகத்தில் அவர்கள்
வயதானவர்கள் - கவலைகளோடு பயணிக்கிறார்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலானவர்கள் இரண்டு  mobile  வைத்திருக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லூரி வயதுக்காரர்கள்  பெரும்பாலும் Temple run  விளையாடுகிறார்கள் அல்லது FB பார்க்கிறார்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வயது உடையவர்கள் 'நீ என்ன அப்பா டக்கரா' வகையரா பாட்டுக்களைக் கேட்கிறார்கள். புகைவண்டி இரைச்சலை தாண்டி பாட்டு வெளியே கேட்கிறது.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்னைக்கு புதன் கிழகை வேற பார்ட்டி இல்ல. 12.5 லட்சத்துக்கு கேக்கிறான். திங்க கிழமை ரிஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம்.பார்ட்டிய முடிச்சிடு.எனது பக்கத்து இருக்கைக் காரர். (நேரே போய் சொல்லி வந்திருக்கலாம்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
திருநங்கைகளின் கைத்தட்டல் ஓசை ஒரே விதமாக இருக்கிறது. பணம் கொடுப்பவர்களை மனமாற வாழ்த்துக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலான பொருள் ஏற்பவர்கள்(பிச்சைக்காரகள் என்று அழைக்க மனம் விழையவில்லை) பாத்திரம் ஒற்றை நாணயம் மட்டும் கொண்டிருக்கிறது. சிலர் பாடி பொருள் கேட்கிறார்கள். சிலர் ஏதுவும் பேசாமல் கேட்கிறார்கள். அவர்களின் பாத்திரம் நிரம்புவதே இல்லை. அதுவே மிகப் பெரிய வலி உண்டாக்குகிறது
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்மணிகளே வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். மாதம் Rs.30000 என்ற விளம்பரம் பெரும்பாலான இடங்களில் தென்படுகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மிக அதிகமாக கசங்கிய ஆடைகளை உடையவர்கள் நுழைவு வாயில் அருகிலே அமர்ந்து விடுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பூர்விகா மொபைல் விளம்பரத்தில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவை சிலர் ஓரக் கண்ணால் பார்க்கிறார்கள். சிலர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இரண்டு பேர் இருக்கையில் மற்றும் ஒருவர் நகர்ந்து கொள்ளச் சொல்லி இடம் கேட்டால் தி. நகரில் இருக்கும் பத்து க்ரௌண்ட் இடம் கேட்டது போல் முறைக்கிறார்கள்.
* * * * *
சில குழுக்கள் புகைவண்டியில் கதவருகே நின்று selfie எடுத்துக் கொண்டிருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மச்சான் அந்த மஞ்ச கலர் மைனாவ பார்தா த்ரிஷா மாதிரி இல்ல.
போடா டேய், த்ரிஷா எல்லாம் பாட்டி அவள போய் கம்பேர் பண்ரியே. சொல்லுவது ஆசை அஜித்(ஹா ஹா)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தாய்மை உடையவர்கள் மிக அதிக கனமான இதயத்துடன் பயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனத்த மௌனத்துடனே பெரும்பாலான பயணம் தொடர்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இலக்கை அடைந்த பின் வேறொரு பயணத்திகு தயாராகி விடுகிறார்கள்.

குப்பாச வாழ்க்கை -நிலைஅற்ற வாழ்வு
நன்றி : கந்தர் அலங்காரம்

புகைப்பட உதவி : Karthik Pasupathi

No comments:

Post a Comment