Sunday, October 12, 2014

வேதாளம் கட்டுப்பட்ட கதை


சற்றும் மனம் தளராமல் வேதாளத்தை மரத்தில் இருந்து கீழே தள்ளி தோளில் சாய்த்து நவீன விக்ரமாத்தியன் நடக்க ஆரம்பித்தான்.

நீ நல்லவன் தானே.
..
மௌனம் பதில் ஆகாது. எனக்கான பதில் அளிக்க முடியா வினாக்களில் மட்டுமே நான் உனக்கு கட்டுப்படுவேன்.
..

படைப்புகளின் தொடக்கதில் நீ இருக்கிறாய். உன்னை புகழின் ஏணியில் ஏற்றிவிட என்னால் முடியும். செய்யவா?

வாழ்வு மிகவும் ரசிக்கத் தக்கது என்பதை நீ அறிவாயா?

உணவில் பெரும் விருப்பம் கொண்டவன் நீ என்பதை நான் அறிவேன். விருப்பப்படி உணவினை வழங்கவா?

இசையினில் பெரும் ஆர்வம் கொண்டவன் நீ. இசையின் நுணுக்கங்களை கற்றுத் தரவா?

தனிமை உனக்கு பழக்கமானது. உன்னை தனிமைப்படுத்தி மகிழ்வினை உண்டாக்கவா?

உலக அனுவங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்.

இல்லற தர்மத்தில் இருக்கிறாய். உனக்கான கவலைகள் மற்றவர்களை விட மிக அதிகம் என்பதை நான் அறிவேன். உனக்கான விருப்பங்கள் இருப்பின் தெரிவிப்பாய். உனக்காக செய்து முடிப்பேன்.

ஞாயிறு அன்று என் மனைவி எந்த வேலையும் எனக்கு கொடுக்கக் கூடாது.

அடுத்த வினாடியில் வேதாளம் கட்டுப்பட்டது

புகைப்படம் : இணைய தளம்


4 comments: