Monday, October 6, 2014

I.T என்னும் பம்மாத்து - வளர்ச்சிப் படிகள் - Stages



இக்கட்டுரைகள் குறித்த விமர்சனங்கள் பல்வேறாக வந்த வண்ணம் உள்ளன.

வயது என்னும் நிகழ்வினைக் கொண்டும்அதனால் அடையப்படும் பதவிபதவி சார்ந்த  உயர்வுகள்   குறித்து இந்த தொகுப்பு.

என்வரையினில் வசதிக்காக 20 வயதிற்கு கீழ், 20 - 30 வயது, 30 - 40 வயது, 40க்கு மேல் என்று வயதின் வரைகளை உருவாக்கி இருக்கிறேன்இதில் பல்வேறு மாறுபட்ட   கருத்துக்கள் இருக்கலாம்.

பணியின் அடிப்படையில்  Entry level, Middle level and Higher level  என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Entry level  - Trainee, Software Engineer etc.,
Middle level  - Project Leader, Project Manager etc.,
Higher level  - IT Consultant, Associative Director etc.,

வாழ்வின் வளச்சியில் என் தந்தை ஒரு ‘IT’ ல் வேலை பார்க்கிறார்     என்று குழந்தை கூறுவதை ஏற்று மிகவும் மகிழ்வுறுகிறோம். அங்கு தான் ஆரம்பமாகிறது வினை.

நல்லா படிச்சா மட்டும் தான் 'IT ' கம்பெனிகளில் வேலை கிடைக்கும். இல்லைன்னா ஒன்னும் பண்ணமுடியாது' இப்படித்தான் வார்தைகளின் விஷம் குழந்தைகளுக்கு ஏற்றப்படுகிறது.

'சார், இதெல்லாம் கத. நான் எல்லாம் அப்படி இல்ல' சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். மறுப்பவர்களின் குழந்தைகள் மிகப்பெரிய கல்விக் கூடங்களில் பயில்கிரார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

பெற்றவர்களால் தூண்டப்பட்டோதன் விருப்பத்தின் காரணமாகவோ அவர்கள் தங்களது   பள்ளிப் பருவத்திலேயே  Computer Science  தேர்ந்தெடுக்கிறார்கள்.

கல்லூரிக்கு முன் - நண்பர்கள்
மச்சான் வேற எந்த branch  ம் எடுத்துடாத. வருஷத்துக்கு 500 ரூ சம்பளம் அதிகமாகும். IT ல மட்டும் தான் வருஷத்துக்கு 1 லட்சம் increment வரும்.

இவர்கள் மிகப் பெரிய கல்விக் கூடங்களில் பயில்வதற்காக மிகப் பெரியதான தன்  வாழ்வினை இழக்கிறார்கள்.(ஒரு சிலர் தவிர்த்து)

கல்லூரி கனவினை வளர்த்து விடுகிறது.
நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க சார். எங்க college ல் சேர்ந்தா 100% Placement. - இத்யாதி விளம்பரங்கள்

சில கல்வி நிறுவனங்கள் கம்பெனிகளுடன் தொடர்பில் இருக்கின்றன. இதன்படி கம்பெனிகள் கல்லூரி நிறுவன மாணவர்களுக்கு ‘Offer Letter’  மட்டுமே தருகின்றன.  Not ‘appointment order’

அவர்கள் சந்தோஷமாக கல்லூரிகளில் இருக்கட்டும். சில நாட்கள் தவிர்த்து அவர்களை சந்திப்போம்.

(அதெல்லாம் இல்லை என்று உடனடியாக மறுப்பு சொல்கிறவர்கள் இருக்கக்கூடும். இங்கு   பெரும்பான்மை மட்டுமே விளக்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.)

புகைப்படம் : R.s.s.K Clicks

No comments:

Post a Comment