தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – செயற்கையாக
உருவாக்கப்படவை.
வாழ்வின்
அனைத்து விஷயங்களும் (சந்தோஷம் துக்கம் உட்பட) பொருளாதாரம் சார்ந்து இருப்பதே வாழ்வின் முக்கியமான வலி.
தேசத்தில்
சில நிறுவனங்கள் ஏமாற்றம் செய்யும். தற்பொழுது பெரும்பாலான ஒன்றாக கூடி ஏமாற்றும் வேலையை செய்கின்றன. அதன் பொருட்டே accelerated depreciation.
<<
Accelerated depreciation is a depreciation method whereby an asset loses book
value at a faster rate than the traditional straight-line method. Generally,
this method allows greater deductions in the earlier years of an asset and is
used to minimize taxable income.
>>
ஒரு நிறுவனம் ஏன் இதை மேற்கொள்கிறது?
இதன் மூலம் (உண்மை நிலை தவிர்த்து) நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்படுகிறது.
மேலும் இது வரிகளையும் வருமானங்களையும் கருத்தில் கொண்டு இவ்வழி பாதுகாப்பு செய்கிறது..
இதம் மூலம் அதிக தேய்மான செலவுகள், குறைவான நிகர லாபம் தருகின்றன. உதாரணத்திற்கு 20 வருடங்களுக்கு கணக்கு காட்டி தேய்மானம் குறிப்பிடபட வேண்டிய நிறுவனங்கள் 10 வருடத்தில் அதை கணக்கில் காட்டி விடுகின்றன.
Subsequently,
the government put out a draft roadmap that sought to rationalize exemptions
such as those given to aid scientific expenditure, capital expenditure and the
benefits of accelerated depreciation—mainly benefitting sectors like
infrastructure and information technology and those who undertake research and
development activities in India. [1]
2013
- 2014 ம் ஆண்டில் வரிகளின் இழப்பு தோராயமாக 57,793 கோடி. இது 2014 - 2015ம் ஆண்டில் 62,399 கோடியாக
உயர்ந்துள்ளது. [2]
கடந்த 5
வருட காலங்களில் மிகப் பெரிய நிகர லாபம் ஈட்டிய அனைத்து நிறுவங்களும் தங்களது வரவு செலவு கணக்கில் மிகப் பெரிய நஷ்டம் சந்தித்ததாகவே குறிப்பிடுகின்றன. இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்திய தொழில் நுட்பம் சார்ந்த நிறுவங்களுக்கும் இது பொருந்தும்.
அதாவது
10 ஆண்டுகளில் பெறவேண்டிய பணம் முழுவதையும் 5 ஆண்டுகளில் சம்பாதித்து 5ம் ஆண்டு முடிவில் தாங்க முடியா நிதி நிலைமை காரணமாக மூடி விடுவதாக கூறுகின்றன நிறுவனங்கள். (அதாவது மூடிய பின் வந்த லாபத்தை கொண்டு வேறு நிறுவனம் ஆரம்பித்து விடுவார்கள். )
குறிப்புரை இணையங்கள்
புகைப்படம் : Karthik Pasupathi
No comments:
Post a Comment