Tuesday, May 3, 2016

2038 - ஒலியியல் வழியில் மூளையின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தும் திறன்



(SOUND WAVES TO CONTROL BRAIN CELLS)

·         Scientists have developed a new way to selectively activate brain, heart, muscle and other cells using ultrasonic sound waves.
·         This is a new, additional tool to manipulate neurons and other cells in the body.
·         By shining a focused laser on the cells, they can selectively open these channels, either activating or silencing the target neurons.
·         In contrast to light, low-frequency ultrasound can travel through the body without any scattering. This could be a big advantage when you want to stimulate a region deep in the brain without affecting other regions

Ref :

http://zeenews.india.com/news/science/indian-american-scientist-uses-sound-waves-to-control-brain-cells_1798152.html
http://www.salk.edu/news-release/in-first-salk-scientists-use-sound-waves-to-control-brain-cells/

              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.

ஒரு சோதனைக்கு உங்க கணவர் எங்களுக்கு தேவைப்படுறார், ஒரு வார காலத்திற்கு கூட்டிகிட்டு போகலாமா?
சோத்த போட்டா எங்க வேணும்னாலும் வரும் அந்த நாயி, இதுக்கு கேள்வி எதுக்கு; மூளையே கிடையாது   அதுக்கு, அதுகிட்ட என்ன சோதனை பண்ணப்போறீங்களோ?

2.

சார், நம்ம படத்துல பல புதுமைகள் செய்திருக்கோம் சார்.
கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
அதாவது சார், நீங்க கதப்படி செவ்வாய் கிரகத்தில இருக்கீங்க, உங்களால எதிரி ராக்கெட்ட கன்ட்ரோல் பண்ணமுடியல, அதனால நாங்க இங்க இருந்து உங்கள கன்ட்ரோல் பண்ணி எதிரி ராக்கெட் ஒயர்  எல்லாத்தையும் பிச்சி,எதிரிராக்கெட்ட சிதைச்சிடுறோம். படப் பேர்சோனாலஜிஸ்டும், வெடித்து சிதறும் சில ராக்கெட்டுகளும்’, சுருக்கமா S-VSSR. உங்களுக்கு 9ம் எண் நல்லா இருக்கும் அப்படீங்கறதால படப்பேர் கூட 18 ல வச்சி இருக்கோம் சார்.

3.
அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே, ஒலியியல் வழியில் மூளையின் செயல்பாடுகள் கட்டுப்படுத்துவதற்காக உபகரணங்களுக்கு வாரத்தில் 2 நாட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளோம்.

4
ரொம்ப சந்தோஷம், வெளியிலே இருந்துஉங்களை யாரோ கண்ட்ரோல் செய்து உங்களை கொல செய்ய வச்சிருக்காங்க’ன்னு சொல்லி, கேச திருப்பி உங்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விட்டேன். எனக்கு பீஸ் எப்ப கொடுப்பீங்க?
என்னா சார் இது, போன தடவ வந்தப்பவே வெளியில் இருந்து கண்ட்ரோல் செய்து உங்க பீஸை வாங்கி கிட்டீங்களே, ஞாபகம் இல்லையா? (யாருகிட்ட )
5.
இந்த ப்ராடெக்ட் தான் பெஸ்ட்ன்னு எப்படி  விளம்பரம் ரெடி பண்றது?

'எங்க ப்ராடெக்ட்  பயன்படுத்தி உங்கள் மனைவியை கூட கண்ட்ரோல் செய்யலாம்' அப்படீன்னு விளம்பரம் செய்ங்க. அப்புறம் பாருங்க, கூட்டத்த. இதெல்லாம் தெரியாம நீங்க எப்படி தான் விளம்பர  கம்பெனியில வேல பாக்றீங்களோ தெரியல?

No comments:

Post a Comment