மரபணு மாற்றம் - மயானம் நோக்கிய பயணம் - முன்னுரை
ஒரு தேசத்தை வேரோடு அழிக்க பல முறைகள் உள்ளன. அவற்றின் கலாச்சாரம் அழித்தல், இடங்களை அழித்தல் போன்ற பல முறைகள் உள்ளன. அவற்றின் முதன்மையானதும், முக்கியமானதாகவும் இருப்பது உணவு முறைகளை மாற்றுவது.
மாறிவரும் மக்கட்தொகைக்கு ஏற்ப உணவுப் பெருக்கம் என்பது தவிர்க்க இயலாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உணவினை முன்வைத்து அரசும் பன்னாட்டு அரசியல் வாதிகள்(நிறுவனங்கள்) நடத்தும் கூத்துக்கள் எண்ணில் அடங்காதவை.
மரபணு மாற்றத்தின் நோக்கம் பூச்சிகளிடம் இருந்து பயிர்களை
பாதுகாத்தல், நோய் எதிர்ப்பு, ஊட்டச் சத்து மிக்க பயிர்கள், கெடாதத் தன்மை, விளைச்சல்
அதிகரிப்பு, அதிக உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள்
செயற்கை உடல் உறுப்புகள் செயற்கை இன்சுலீன்
எனப் பல பொய்யான காரணங்களை பட்டியல் இடப்பட்டாலும், 'எத்தனை உயிர் அழிந்தாலும் எனது நோக்கம் பணம் சம்பாதிப்பது' எனும் 'உயரிய' நோக்கம் இதன் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு வித்திடுகிறது.
இதனால் ஏற்படும் வலியை, கஷ்டங்களை, பாதிப்புகளை உணர்ந்த நாடுகளான இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, ரொமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் அங்கு மாற்றுப் பயிர்களுக்கு தடை விதித்து விட்டன.
மாற்றங்கள் பயிர், காய்கறிகள், பழங்கள் எனப் பலவகைப்பட்டன.
- பயன்படுத்தப்படும் வழி முறைகள்
- கவலைகள் - உடல் நலம் சார்ந்து
- கவலைகள் - சூழலியல் சார்ந்து
- கவலைகள் - பொருளாதாரம் சார்ந்து
- கவலைகள் - சோதனை எலிகளாகும் இந்தியர்கள்
ஆகிய தலைப்பு குறித்து எழுத உள்ளேன்.
புகைப்படம் : R.s.s.K Clicks
No comments:
Post a Comment