Saturday, May 28, 2016

IT - தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 5




2015 
ஆண்டு கணக்குப்படி ஆண்டு ஒன்றுக்கு 5.8 மில்லியன் பட்டதாரிகள் இருப்பில் உள்ளவர்களுடன் (வேறு எப்படி சொல்ல முடியும்) சேர்க்கப்படுகிறார்கள்.

உலக சந்தையினை முன்வைத்து(அமெரிக்கா என்றே கொள்ளலாம்) செலவுகள்  என்பது 3 - 4 மடங்கு வரை குறைவு

இதனால் தான், வெளிநாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் I.T நிறுவனங்கள் தாராளமயமாக்கலுக்கு பிறகு இங்கு தடம் பதித்தன. சராசரியாக 45% முதல் 50% வரையில் அனைத்து திட்டங்களையும் முடித்து விடமுடியும். மற்றவை லாபம் தான். லாபத்தில் குறையும் போது தான் நிறுவனங்கள் தாங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லு ஜல்லியடிக்கின்றன.(நன்றி சுஜாதா சார்)

நாஸ்காம் வெளியிட்டுள்ள  மார்ச் 2016 அறிக்கையின் படி தகவல் தொழில் நுட்பத் துறை எந்த வித ஏற்றம், இறக்கம் இல்லாமல் $118 பில்லியன் அளவிலே இருக்கும். வளர்ச்சி விகிதம் 11.5% - 12.0% மட்டுமே.இது எதிர்பார்க்கப்பட்ட 13% - 15% வளர்ச்சியை விட குறைவு.

தெளிவான திட்டமும் நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வரவு செலவு திட்டம் ஆண்டு ஒன்றுக்கு 11.7%. உலக நாடுகள் இதற்கு 1% மட்டுமே செலவழிக்கின்றன.

மாறி வரும் நாணய மதிப்பு, நிலையற்ற அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் இத் துறையை மிக வேகமாக கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் நாஸ்காம் தனது 2016 - 2017 ஆண்டிற்கான ஏறுமதி வளர்ச்சியினை 12% முதல் 14% இருந்து 10% முதல் 12% ஆக குறைத்துள்ளது.

வரும் 2017ம் ஆண்டு கணக்குப்படி இந் நிறுவனங்கள் 30% வரை  பாதுகாப்பு மற்றும் இணக்கம் (security and compliance) ஆபத்துக்கால வரவு செலவு திட்டதிற்காக செலவழிக்க இருக்கின்றன. 10% ஆட்கள் இந்த பாதுகாப்பு செய்பாடுகளுக்காக செயல்படுவார்கள். இது 2014ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.

தன்னிடம் உள்ளவர்கள் இத்தனை பேர் இத்தனை விதமான சான்றிதழ்(certification)  பெற்றிருக்கிறார்கள் என்பது போன்று நிலைப்பாடுகள் கொண்ட நிறுவனங்களும் உண்டு. அவர்களுக்கு வேலை உண்டோ இல்லையே அவர்களுக்கு தரப்படும் விலை மிக அதிகம். இதை இங்கே குறிப்பிடக் காரணம் மிக மிக அதிகமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்.

இது இத்துறை சம்மந்தமான ஒரு பொதுவான பதிவு மட்டுமே. இங்கு யாரும் வேலை பார்க்கக் கூடாதா என்பவர்களுக்கு என் பதில்.

·   நீங்கள் சுமாராக 7 முதல் 10 வருடம் மட்டுமே இத்துறையில் வேலை பார்க்க முடியும். அதுபற்றி கவலை இல்லை எனில் இத்துறையையில் சேரலாம்.
·   மிகச் சிறந்த அறிவாளி, என்னால் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் உள்ளவர்கள் சேரலாம்.
· வருங்காலத்தில் எத்தனை பெரிய வியாதி வந்தாலும் கவலை இல்லை, எனது குடும்பம் என்னை கவனித்துக் கொள்ளும் என்பவர்கள்  சேரலாம்.
·   இது எதுவும் சரியாக வராது, ஆனால், என்னால் மிக அதிகமாக சொம்பு தூக்க முடியும் என்பவர்கள் சர்வ நிச்சயமாக நீண்ட கால நோக்குடன் இத் துறையே தேர்ந்து எடுக்கலாம். ஏனெனில் மகுடம் உங்களுக்குத் தான் காத்திருக்கிறது.

முற்றும்.

புகைப்படம் : Karthik Pasupathy

No comments:

Post a Comment