பயன்படுத்தப்படும் வழி முறைகள்
"சொரம் அடிக்குது ஒரு கோரசனை மாத்திர சாப்பிடு" எனும் பாட்டியின் நாட்கள் மலையேறி விட்டன. நீடித்திருக்கும் கால அளவுகளுக்கு ஏற்ப Continuous fever, Remittent fever, Pel Ebstein fever,
Intermittent fever, Septic fever என ஜுரத்தின் பெயர்கள் மாறுகின்றன.
சார், உங்களுக்கு spinal cord ல பிராபளம். ஒன்னும் கவலைப்படாதீங்க, ஒரு சின்ன ஆப்பரேஷன். L1,L2, L5 இதுல எல்லாம் கைய வைக்க மாட்டோம். Just ஒரு சின்ன கீறல்.
L3, L4 மட்டும் modify பண்ணிடலாம். அவ்வளவுதான்.
சார், நான் Type A ஜுரம் மட்டும் தான் பார்ப்பேன், Type B ன்னா நீங்க வேற டாக்டர பாருங்க என்பது போன்றது தான் இந்த மரபணு மாற்ற ஆராய்ச்சிகள்.
உதாரணத்திற்கு
கத்திரியினை எடுத்துக் கொள்ளலாம். குருத்து மற்றும் காய்த்துளைப்பான், தண்டு துளைப்பான், ஹட்டா / புள்ளி வண்டு, சாம்பல் கூன் வண்டு, பழுப்புத் தத்துப் பூச்சி, கண்ணாடி இறக்கைப் பூச்சி போன்ற பல்வேறு பூச்சி
தாக்குதல்கள் நடக்கலாம்.
நாங்க சோதனை செய்யறது காய்த்துளைப்பான் மட்டும் தான். மத்த பூச்சி தாக்குதல்கள் பற்றி எங்ககிட்ட கேட்காதீங்க. இப்படியாகத்தான் இருக்கிறது ஆராய்ச்சிகள்.
Polymerase
Chain Reaction (PCR) Analysis
A single copy or a few copies of a piece of DNA across
several orders of magnitude, generating thousands to millions of copies of a
particular DNA sequence.
ஒரே ஒரு DNA ல் இருந்து லட்சக் கணக்கான அதே மாதிரியான DNA க்கள் பெருக்கம் செய்யப்படும்.
Restriction
fragment length polymorphism (RFLP)
It analyzes the length of strands of DNA that include repeating base pairs.
ஆராய்ச்சியின்
பொருட்டு ஒத்த அமைப்புடைய தொடர் DNA க்கள் எடுத்துக்கொள்ளப்படும். இழைகளாக
இருக்கக் கூடிய அமைப்புகள் சார்ந்ததும் அவைகளின் மீட்சி ஆக்கமும் ஆய்வுக்கு
எடுத்துக் கொள்ளப்படுதல்
Short Tandem Repeat (STR) analysis.
It can start with a much smaller sample of DNA. Scientists amplify this small sample through a process known as polymerase chain reaction, or PCR.
இதுவும்
மேல் குறிப்பிட்டது போல் தான் என்றாலும், இம் முறை மிகச் சிறிய அளவிலான DNA மாதிரி
வடிவங்களில் இருந்து பெறப்படும். ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி போன்ற முறை இது.
கீழ்கண்ட
முறைகளும் உள்ளன. அவைகளின் முழு முறை செய்பாடுகள் இன்னும் சோதனை அளவிலே உள்ளன.
Mitochondrial
DNA Analysis
Y-Chromosome
Analysis
மருத்துவத்துறை உடலில் கத்தி வைக்கிறது. மரபணு மாற்றம் உலகில் கத்தி வைக்கிறது. சர்க்கரை நோயாளியின் ரணங்கள் போல மண்ணின் ரணங்கள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கின்றன.
புகைப்படம் : R.s.s.K Clicks
தொடரும்..
தொடரும்..
No comments:
Post a Comment