Friday, May 13, 2016

IT - தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 3



கற்பித்தல் குறைபாடுகள்

சமீபத்தில் எனது நண்பர் (பேராசிரியர்) ஒருவரை சந்திக்கச்  சென்றிருந்தேன்.   அப்போது  எனது நண்பரை சந்திக்க மாணவர் ஒருவர் வந்திருந்தார்.

சரிடா, நான் உனக்கு சொல்லித் தரேன். புக்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு வா.
இல்ல, எங்களுக்கு புக்ஸ் கொடுக்கல. ஸ்லைடு தான்.
எத்தனை page?
22 page.
ஒரு யூனிட்க்கா?
இல்ல சார், மொத்த சிலபஸ்ம் அவ்வளவுதான்.
என்னடா சொல்ற?
ஆமாம் சார்.
(அது என்ன subject  என்பதை கடைசியில் சொல்கிறேன்.)

படிப்பதற்கு 5 Text book  3 reference book என்பது இருந்தெல்லாம் லெமுரியா கண்டத்தோடு வழக்கொழிந்து போனது.

2000 ஆரம்ப காலகட்டங்களில் 5 யூனிட்டையும் படித்து(ம்க்கும்) 122 பக்கத்திற்கு as per Anna University syllabus   என்று வெளியிடுவார்கள்.

இப்போது அதுவும் போயிற்று. ஒரு subject க்கு 22 slide என படித்து வருபவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?


கற்றல் குறைபாடுகள் - 1

டேய், நாளைக்கு cycle test டா. இன்னும் ஒண்ணும் படிக்கவே இல்ல. என்ன பண்றதுடா?
டேய், விடுடா, objective type தானே, 4 answer ல ஏதோ ஒண்ண click  பண்ண வேண்டியது தானே

கற்றல் குறைபாடுகள் – 2

டேய், attendance கம்மியா வரும் போல இருக்கு.  பயமா இருக்கு டா.
விடுடா, compensatory course போட்டுக்கலாம்.

கற்றுத்தருபவர்களிடமும் கற்பவர்களிடம் இருக்கும் குறைபாடுகள் ஏராளமானவை. இரண்டுமே ஜாடிக்கு ஏத்த மூடி போல் மிக அழகாக பொருந்துகின்றன.

சமீபத்திய ஒரு கட்டுரையின் படி (Economic times), இந்த வருடத்தில் campus interview   வழியாக மிகப் பெரிய நிறுவனங்கள் 30000 ஆட்களை மட்டுமே எடுக்க இருக்கின்றன. (சென்ற வருடம் 35000).


இதற்கு காரணம் automation and artificial intelligence என்று வேறு ஒரு கட்டுரையும் வந்திருந்தது.


அந்த Subject : Relational Database Management System

தான் வாழ பிறரை கெடுக்கும் மனிதர்கள் (அனைத்து நிலைகளிலும்) - அடுத்த பதிவு


தொடரும்...

புகைப்படம் : Karthik Pasupathy

No comments:

Post a Comment