Sunday, January 17, 2016

2016 - பொங்கல் - பயணவழிக் குறிப்புகள் - அகம் புறம்


சென்னையில் இருந்து சிதம்பரம் வரை நின்று கொண்டே பயணம்

அகம்
·   நின்று கொண்டே வந்ததில் 10 வயது சிறுவர்களும் அடக்கம்.
·   பெரும்பாலானவர்வகள் மொபைலில் whatsapp பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
·   சிலர் Tab ல் சிவாஜி படப்பாடல், சண்டி வீரன் படப்பாடல் எனப்பார்த்துக் கொண்டே வந்தார்கள். இன்னும் சிலர் எட்டிப்பார்த்து அந்த பாடல்களைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
·   சிலர் bubbles விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
·   ‘பய புள்ளங்க என்னமா பேர் வைக்குதுங்கடா, Darling, Chellam’ என்று சிறு மாணவர்கள் குழு பேசிக் கொண்டு வந்தது.
·   அடுத்த இருக்கையில் இருப்பவர்களுக்கு தனது சிறு பிஸ்கட் போன்றவற்றை கூட தராமல் மற்றவர்களை பற்றி நினைக்கக் கூட மனமில்லாமல் தானே உண்டார்கள்.
·   பேருந்தில் இருக்கும் எல்லா பைகளையும் விடுத்து ஒரே ஒருவரிடம் இருக்கும் ஒரு பையை போலீஸ்கார் சோதனை செய்கிறார். அதில் ஒரு Full. (அதை இழக்கையில் அவன் சலனமே கொள்ளவில்லை ) -  பாவம் அவன் மனசு என்ன பாடு பட்டிருக்கும் என்று சிலர் பேசிக் கொண்டு வந்தார்கள்.

புறம்
·   ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 25 கார்கள் ஒரு பேருந்தினைக் கடக்கின்றன.
· Toyota Fortuner  போன்ற கார்களில் பின்னிருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள்
·   Alto போன்ற கார்களில் சராசரியாக ஓட்டுபவர் தவிர்த்து 6 பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
·   பெரிய சொகுசுக் கார்களில் பெரும்பாலும் அன்றைய தினசரிகள் கலைந்து கிடக்கின்றன.
· ''5 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சென்னை போலீஸ்காரர்' போன்றவை செய்திகளில் முதன்மையான செய்திகளாக படிக்கிறார்கள்
· சிறிய மற்றும் விலை குறைவான கார்களில் சிறிய தெய்வங்களின் விக்ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 2ல் இருந்து 3 முழம் வரை சாமந்தி மற்றும் மல்லிகை போன்ற மாலைகள் தொங்குகின்றன.
· விலை குறைவான கார்களில் மனைவி ஓட்டுனர் இருக்கைக்கு அருகினில் அமர்ந்திருக்கிறார், குழந்தைகள் dash board ல்  சாய்ந்து தூங்குகின்றன. பின்னிருக்கை காலியாகவே இருக்கிறது.
·   பெரும்பாலும் காரில் பயணிப்பவர்கள் பேருந்தில் இருக்கும் கூட்டதை கண்டு வியப்புற்று அது குறித்து பேசிச் செல்கிறார்கள்
·   2 சக்ர வாகனங்களில் குறைந்தது 3 பேர் பயணிக்கிறார்கள். சில வாகனங்களில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் பயணிக்கிறார்கள். இது நீண்ட தொலைவு பயணம் என்பது அவர்களுக்கு மறந்து விடுகிறது.


புகைப்படம் :  Karthik Pasupathy

Tuesday, November 17, 2015

2038 - மருத்துவமனைகள் - ஒரு வழிப் பாதை





(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
ABC மருத்துவமனை
சார் என் பையனுக்கு தலைய வலிக்குது. ஏதாவது மருந்து குடுங்க சார்.
உங்களுக்கு எந்த ஏரியால வீடு இருக்கு, அண்ணாநகர், அசோக் நகர், திண்டிவனம்?
சார் நான் என்ன பேசரேன், நீங்க என்ன பேசுறீங்க.
அண்ணாநகர்ல வீடுன்னா Suit ல வச்சி பாப்போம். அசோக் நகர்னா ICU ல வச்சி பாப்போம், திண்டிவனம்னா OP ல வச்சி பாப்போம். எப்படியும் நீங்க சொத்த எழுதி கொடுத்துத்தானே ஆவணும்

2.
என்னா சார் இது சளி புடுச்சி இருக்கின்னு வந்தேன். அதுக்கு பில் Rs..144,50,00,000 போட்டு இருகீங்க.

அதுவா ஒரு Lamborghini Aventador book பண்ண காசு இல்லாம இருந்தேன். நீங்க வந்துடீங்க. (Current price Lamborghini Aventador at Rs.4,50,00,000)

3.
சார் இந்த வருஷம் நம்ம மருத்துவமனைக்கு நல்ல income  வந்திருக்கு. IT ல மாட்டாம இருக்க என்ன செய்யறது சார்

வர மாசத்தில் இருந்து X-Ray தனி யூனிட், Blood test தனி யூனிட். மெடிக்கல் ஷாப்பை லஷ்மி மெடிக்கல்னு மாத்திடுவோம். பாவம் எல்லாம் சாமிக்கு போயிடும். அந்த ICU வ உள் வாடகைக்கு விட்டுடுவோம். ஏன்னா அது பிரச்சனை புடிச்சது ஒரு பேஷன்ட் கிட்டே இருந்து நமக்கு 1 கோடி நமக்கு வரணும் அப்படீன்னு மட்டும் சொல்லிடுவோம்.

4. சார் உங்க மெடிக்கல் இன்சூரன்ஸ்ல என்ன வசதி?

ஹாஸ்பிட்டல்ல எல்லா செலவையும் ஏத்துப்போம். உசுரு போச்சுன்னா சுடுகாட்டு செலவையும் நாங்களே செஞ்சிடுவோம். அதுல பாருங்க இப்ப சுடுகாட்டுச் செலவெல்லாம் இப்போ ரொம்ப அதிகம் பாருங்க.

5.
சார் எப்படி பாத்தாலும் பில் 50,00,000 வரலயே சார், என்ன செய்ய?
இதெல்லாம் ஒரு மேட்ரே இல்ல,ரூம் சார்ஜ் 10,00,000 போடு. செலைன் ஊசி போட 10,00,000 போடு. ஊசி எடுக்க 10,00,000 போடு. டுயுட்டி டாக்டர் சார்ஜ்  5,00,000 போடு, டுயுட்டி நர்ஸ் சார்ஜ்  3,00,000 போடு,  டுயுட்டி ஆயா சார்ஜ்  2,00,000 போடு, பெட் சார்ஜ் 7,00,000 போடு,  எல்லா டாக்டருக்கும் விசிட் சார்ஜ்ன்னு போட்டு ஒரு 12,00,000 போடு,  அப்படியே அட்மிஷன் சார்ஜ்  2,00,000 போடு,  மொத்தம் எவ்வளவு ஆச்சு.
மொத்தம் எவ்வளவு ஆச்சு.
சார் 61,00,000 வருது சார்.
சூப்பர் பில்ல போட்டு அவன் கையில கொடு.

புகைப்படம் : SLKumar




Friday, October 9, 2015

2038 - Digital Amnesia - உயர் தொழில் நுட்பம் சார்ந்த மறதிகள்




Reality

·   The continuous progress and evolution of technology in terms of hardware, software, operating systems and methods of digital encoding guarantees the possibility that digital amnesia will become a problem in the near future. There are many versions of programs and applications that have been considered as a standard for some time, but in the end they will always be replaced by newer versions with upgraded functions. The files that are meant to be edited or read by an old program will become unreadable if used with newer programs.
·   Smart phones and tablets are eroding our ability to remember.
·   Could be called as massive destruction of information!
·   Study conducted – UK, France, Germany, Italy, Spain, Belgium, the Netherlands and Luxembourg
·   Total adults - 6000

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

Proof

1.
Doctor : சார், உங்களுக்கு வந்திருக்கிறது digital amnesia
Patient  : அப்டீன்னா என்னா சார்
Doctor : The continuous progress and evolution of technology, technology technology
Patient  : சொல்லுங்க சார்
Doctor : இருப்பா எனக்கும் மறந்து போச்சு

2.
Employee : சார் எனக்கு எட்டு மாசமா சம்பளம் குடுக்கல சார்.
IT Manager : எனக்கு  Digital Amnesia இருக்கு. அதால உனக்கு கடைசியா எப்ப சம்பளம் குடுத்தேன்னு தெரியல

3.
மனைவி : போன மாசம், செலவுக்கு 121.37 காசு குடுத்தீங்க. இந்த மாசம் 23.57 காசு தான் குடுக்குறீங்க. கேட்டா உங்களுக்கு Digital Amnesia அப்படீன்னு சொன்னா எப்படி?

4.
Digital Amnesia தொல்லையில் இருந்து விடுபட எங்களிடம் உங்கள் மூளைத் தகவல்களை சேகரியுங்கள். For 1 TB – just Rs.100/- P/M. 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு discount போக Rs. 250/- P/M.. ஆயுள் சந்தாவிற்கு நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

5.
'நான் யார்' என்று விடை அளிக்க முடியா கேள்விக்கு விடை தேடுகிறது மதம். 'நான் யார்'  என்று அறிய முடியாதவர்களை   Digital Amnesia வால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது மருத்துவத்துறை. எனில் நாம் முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதே இதன் பொருள். - இது போன்று நிறைய பயன் உள்ள தகவல்களைப் பெற அணுகவும். மருத்துவராக இருந்து சாமியாக மாறிய செல்வி சூர்பணகை.

Wednesday, September 30, 2015

காற்றில் ஆடும் சருகுகள் - 19


மனைவி: ஏங்க, இனிமே நான் உங்களோட சண்டையே போட மாட்டேன்.
கணவன் : ????
சற்று நேரத்திற்கு பிறகு
மனைவி : நீ எல்லாம் மனுஷனா, கடலை பருப்பு வாங்கிகிட்டு வரசொன்னா, தொவரம் பருப்பு வாங்கி கிட்டு வந்து இருக்கியே, என்னா, உங்க ஆத்தா உன்னை பெத்து வச்சிருக்கிருகாளோ?
கணவன் : கொஞ்சம் நேரத்துக்கு முன்னால தானே சண்ட போட மாட்டேன்னு சொன்ன?
மனைவி : ஆமா, சொன்னந்தான். இன்னைக்கு தேதிய பாரு. 01-Apr-2015
செத்தாண்டா சேகரு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன்னியாக்குமரி - 15 வது மொட்டை மாடியில் 2 நண்பர்கள்

வீட்ல ரொம்ப பிரச்சனடா
என்னடா ஆச்சு
மொத நாளு தண்ணி பிரச்சனை, பக்கெட்ல தண்ணி புடிச்சி வைங்க அப்படீங்கறா, அடுத்த நாளு பக்கெட் தண்ணில கொசு முட்டை போடுது, புடிக்காதீங்க அப்படீங்கறா, என்னடா செய்யறது.
செத்தாண்டா சேகரு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சார், உக்காருங்க. அந்த கம்பில உக்காரலம் வா சார் வா. 5 பேர் தான் --உள்ள உக்காந்து கீராங்க. இவன் ஆட்டோவில் மினி பேருந்து 
கூட்டத்தை ஏற்ற முயற்சிப்போர் சங்க தலைவன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் உன்னதமான நிமிடங்கள்
ATM ல் எல்லா details ம் enter செய்து மிஷினில் பணம் count செய்து வெளியே வரும் நிமிடங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பூரி மசால்ல மசால் இருக்கு, மசால் தோசைல மசால் இருக்கு, ஆனா மசால் வடைல மசால் இல்லையே. இவன் 10 மசால் வடையை ஒரே நேரத்தில் சாப்பிடுவோர் சங்கம்,
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சந்தோஷத்த கொண்டாடுரத்துக்கும் காசு தேவையா இருக்கு., கஷ்டத்த கொண்டாடுரத்துக்கும்  காசு தேவையா இருக்கு.
உ.ம் - சரவணபவன் 2 காபி - 56 ரூ
Chandra park 2 பீர் - ரூ 450(Including tips).

என்னடா வாழ்க்கை இது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கும் ஜூஸ் கடையில் இருக்கும் பெண்ணுக்கும் நடைபெற்ற உரையாடல்

தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
புரிலங்க.
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
தெளிவா சொல்லுங்க
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க

….
Watermelon ஜீஸ் ஒன்னு கொடுங்க.
ஓ Watermelon ஜீஸ்சா, அப்படி தெளிவா கேளுங்க சார்.

அட பிக்காளிப்பயலுகளா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை எந்த வாகனமும் செல்ல இயலா நிலை. 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறேன். எரிச்சலாக திரும்பி வெளியே பார்க்கிறேன்.
வெளியே நிற்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கிறது 'தனிக்காட்டு ராஜா'.

என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறங்கி போச்சு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
IT ல் வேலை பார்ப்பவர்களை எளிதாக கண்டறியும் வழி(General)

31st : Lets go to Saravanabhavan machi
1st : மச்சான் ஒரு டீ சொல்லுடா, கைல காசு இல்ல
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரயிலில் பயணம் செய்ய மிக வேகமாக  நடை மேடை மேல் நடந்து கொண்டிருக்கிறேன்.

முதலாவது பிளாட்ஃபாமில் இருந்து இன்னும் சில நிமிடங்களில்....ஒலித்துக் கொண்டிருக்கிறது.

டோய்ங்.,,, டோய்ங்.,,,  (Doppler effect )
ஓட்டமும் வேகமும் குறைகிறது.

யாருடைய தொலை பேசியிலோ Ring tone. அழகிய கண்ணே, உறவுகள் நீயே
வினாடிக்குள் உலகம் நிலைபெறுகிறது.
அந்த மனிதர் நகர்ந்து விட்டார்.

சுய நினைவு திரும்புவதற்குள் ரயில் சென்றிருந்தது.