விடுமுறை மறுத்தல் - 1
நாளைக்கு லீவு வேணும்
நாளைக்கு முக்கியமா இத முடிக்கணும். அதனால முடியாது.
விடுமுறை மறுத்தல் - 2
அடுத்தவாரம் லோக்கல் ரிலீஸ், அதனால அடுத்தவாரம் நம்ம டீம்ல யாருக்கும் லீவு கிடையாது. அதான் இப்பவே சொல்றேன்.
விடுமுறை மறுத்தல் - 3
விடுமுறை மறுத்தல் - 3
உடம்பு முடியல
என்னா செய்யுது?
வாமிட்டிங்
ஒன்னும் பிரச்சனை இல்ல, நம்ம ஆபீஸ்ல
பாத்ரூம் இருக்கு. ஒன் டெஸ்க்ல வேணும்னானும் வாமிட் பண்ணிக்கோ. ஆனா ஆபீஸ் வந்துரு.
விடுமுறை மறுத்தல் - 4
இந்த பொங்கலுக்கு ஒரு நாள் லீவு வேணும்.
இங்க பாருங்க பாஸ்(உன் பாசத்துல தீய போட்டு கொளுத்த) . நம்ம டீம்ல 3 பேர். நான் ஊருக்கு போகணும். நீங்க ரெண்டு பேர்ல யாருன்னு முடிவு பண்ணிங்க.
விடுமுறை மறுத்தல் - 5
தீபாவளிக்கு லீவு வேணும்
ஏங்க பாஸ், நம்ம டீம்ல 5 பேர் இருக்கோம். 3 பேர் வெளியூர் போறவங்க. அவங்க பேச்சிலர் வேற. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நீங்க எங்க ஊருக்கு போகப் போறீங்க.
விடுமுறை மறுத்தல் - 6
எனக்கு 5 நாள் வெகேஷன் லீவு வேணும்.
பாஸ், நீங்க முன்னால பின்னால இருக்கிற சனி, ஞாயிறு கணக்கு பண்ணி 9 நாள் லீவு எடுக்க பாக்காதீங்க. எம்ப்ளாயி ஹேன்ட் புக்ல என்னா போட்ருக்குன்னு நல்லா பாருங்க. ‘Depends upon the project’ ஞாபகம் வச்சிங்க.
விடுமுறை மறுத்தல் - 7
விடுமுறை மறுத்தல் - 7
நாளைக்கு
office official லா leave. But நாம கிளையன்ட்க்கு இது தெரியாது. அதனால நம்ம மெயின்
கேட் closed ஆ இருக்கும். அதனால பின் கேட் வழியா வந்துடுங்க.
விடுமுறை மறுத்தல் - 8
விடுமுறை மறுத்தல் - 8
பாஸ், சனி, ஞாயிறு லீவுன்னு ஹேண்ட் புக்ல போட்டுருக்குன்னு பாக்காதீங்க. சனிக்கிழமை வாங்க, இந்த வேலைய முடிச்சிடுங்க.
No comments:
Post a Comment