Thursday, December 25, 2014

I.T என்னும் பம்மாத்து - விடுமுறைகள் என்னும் நாடகங்கள் - 2



விடுமுறை மறுத்தல் - 9

வர அக்டோபர்ல நம்ம ப்ராடக்ட் மேஜர் ரீலிஸ். அதால இப்பலேருந்து யாருக்கும் சனி ஞாயிறு லீவு இல்ல. (02-Jan-2014)

விடுமுறை மறுத்தல் - 10

Continuous சா 4 சனி ஞாயிறு வந்திருக்கேன். அதான் இந்த வாரம் நான் Monday லீவு எடுக்கலாம்னு இருக்கேன்.
நீங்க,ஒங்க வேலைய முடிக்கத்தான வந்தீங்க. எனக்காகவா வந்தீங்க. Monday முக்கிய மீட்டிங் இருக்கு. வந்துடுங்க.

விடுமுறை மறுத்தல் - 11
போன வாரம் சனி, ஞாயிறு வந்தேன். Comp off உண்டா?
அப்படீன்னா?

விடுமுறை மறுத்தல் - 12

ப்ராஜக்ட் முடிச்சிட்டு  Thursday  2 PM Airport வறீங்க. அதனால Thursday ஆபீஸ் வந்துடூங்க. client meeting இருக்கு

விடுமுறை மறுத்தல் - 13

எனக்கு 1 மணி நேரம் பர்மிஷன் வேணும்.
எத்தனை மணிக்கு
ஈவினிங் 8 மணிக்கு

என்னது 8 மணிக்கேவா?

விடுமுறை மறுத்தல் - 14

என்ன, எனக்கு போன மாசம் 0.5 டேஸ் CL வந்திருக்கு?
Admin : உங்க office working hours ல 0.1 min. difference. நீங்க office ல just 14.59 hours தான் இருந்துறீக்கீங்க

விடுமுறை மறுத்தல் - 15

சார், எனக்கு 15 டேஸ் வெகேஷன் லீவு உண்டுதானே?
நீங்க, 2st Apr வேலைக்கு சேர்ந்திருக்கீங்க. இந்த 15 டேஸ் வெகேஷன் லீவு மார்ச் 31க்கு முன்னால் join பண்ணவங்களுக்கு மட்டும் தான். அதனால 10 நாட்களுக்கு மட்டும் தான் நீங்க eligible.

விடுமுறை மறுத்தல் - 16

சார், உங்களுக்கு இன்னைக்கு 33வது பிறந்த நாள். உங்களுக்கு இன்னைக்கு ஒரு கிப்ட் தரப்போறோம்.
மகிழ்வுடன்(என்னது).
நீங்க லீவு வேணும்ணு கேட்டுகிட்டு இருந்தீங்கள்ல, இன்னைலேருந்து நீங்க வேலைக்கு வர வேண்டாம்.

விதிவிலக்காக சில கம்பெனிகள் உண்டு. மருத்துவக் காரணம் எனில் விசாரிக்காமல் கூட leave கொடுத்து விடுவார்கள். (.ம் - IBM )

No comments:

Post a Comment