Thursday, December 4, 2014

I.T என்னும் பம்மாத்து - மீட்டிங் கூத்துக்கள்




நிகழ்வுகள் - 1
நாளைக்கு சீக்கிரம் வந்துடு தெரியுதா?
??
நாளைக்கு மீட்டிங் இருக்கு.
நாளைக்கு காலைல 8.00 - 8.30  - நம்ம டீம் Daily meeting. அப்புறம் 9.00 -9.30 எனக்கு மீட்டிங்.(போட்டு குடுக்க போறான்). 10.00 -11.00 நம்ம டீம் Weekly meeting. இது எதுக்குன்னா, நாம இந்த வீக்ல என்ன செய்யப்போறோம்ன்னு பேசுவோம்.(நிச்சயமா அதை செய்யப் போறது இல்ல). Before lunch 2.00 – 2.30 – Daily Status meeting. 7.00 – 7.30 – End of the day meeting. (நீ டெய்லி வீட்டுக்கு சீக்கிரம் போற இல்ல, அதான் இப்படி ஒரு டைமிங்). என்னா நவம்பர் வந்தா கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும்( நல்லா விடுவீங்களடா). திரும்பவம் மார்ச் வந்தா திரும்பவும் கஷ்டம் தான். எல்லாம் DST யால தான்

நிகழ்வுகள் - 2
TL : என்னா செய்துகிட்டு இருக்கீங்க?
---
TL :  அத விட இது priority ஜாஸ்தி, இத மொதல்ல முடிங்க.

நிகழ்வுகள் - 3
PL-1 : என்னா செய்துகிட்டு இருக்கீங்க?
---
PL-1 :  அத விட இது priority ஜாஸ்தி, இத மொதல்ல முடிங்க. Priority பண்ண தெரியலன்னா ஒன்னு எங்கிட்ட கேளுங்க, இல்ல TL உன் ஃப்ரண்ட் தானே. அவன்ட கேளுங்க. மதியம் 2.30 - 3.00 இந்த டீம் மீட்டிங்.நீங்க தான் எல்லாம்  explain பண்ணனும்.

நிகழ்வுகள் - 4
PL-2 : என்னா செய்துகிட்டு இருக்கீங்க?
---
PL-2 : ஏம்பா இன்னைக்கு டெமோ இருக்குன்னு உனக்கு தெரியாதா. ஏற்கனவே மைல்ஸ்டோன் ரெட்ல இருக்கு. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. 2 மணிக்குள்ள முடிச்சிட்டு என்கிட்ட demo காட்டு. நான் அப்ரூவ் பண்ண பிறகுதான் நீ பக் ட்ராக்கர்ல க்ளோஸ்டுன்னு மாத்தனும்.
Mr. X : இல்ல, இன்னொரு ஃப்ரையாரிட்டி வொர்க் இருக்கு, அதான்...
PL-2 : யாரு, PL1 தானே, நான் அவன் கிட்ட பேசிக்கிறேன். நீ இத முதல்ல முடி.

இரவு 7.43 PM
நிகழ்வுகள் - 5
PL-2 : ஏம்பா எங்க இருக்க?
Mr. X :கேபின்ல தான்.
PL-2 :இங்க பாரு, நாம இங்க டெமோ காமிச்சத client டீம்க்கு டெமோ காமிச்சேன். இது முடியாதுங்கிறாங்க. அதனால ஸ்பெக் மாத்ரோம். 9.30 (PM) க்கு மீட்டிங். Just 10 min. வந்துட்டு போய்டு.


*Overlapping ஆகும் மீட்டிங்குகள் / Emergency மீட்டிங்குகள்/ Quick மீட்டிங்குகள்/ Red milestone மீட்டிங்குகள் / Collaborative மீட்டிங்குகள்/ Pre delivery மீட்டிங்குகள்/ Post delivery மீட்டிங்குகள் /Unofficial மீட்டிங்குகள் கணக்கில்எடுத்துக் கொள்ளப்படவில்லை.

** - (Explained Entry level members meetings only)

புகைப்படம் : R.s.s.K Clicks

No comments:

Post a Comment