Wednesday, May 27, 2015

காற்றில் ஆடும் சருகுகள் - 18

Ethnic and party wear for your infants.  உங்க வியாபார அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்:  பிரளய காலம் - உதாரணம் தருக.
மாணவன் : சமையல் குறிப்பை TVல் பார்த்து எங்க அம்மா எழுத ஆரம்பிக்கும் தருணங்கள்.
செத்தாண்டா சேகரு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?
சில தினங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல ஸுகர் இருக்கா?

சில மாதங்களுக்கு பின்
ஏங்க, வீட்ட உப்பு மொளா, புளீ இல்லீங்க.
இருடி, பேஸ்ட் கம்பெனி காரணுக்கு சொல்லி அனுப்புறேன்.

உங்க கண்டுபிடிப்புல தீய போட்டு கொளுத்த.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கிளினிக் வாசல் board -ல்
தொல்காப்பியன், தொண்டை சிகிச்சை நிபுணர்(தங்க மெடல் பெற்றவர்)
உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Coca Cola - Train Advert 2015

ஒரு மனிதன் ரயில் ஏற முயற்சிக்கிறான். இடம் பிடிக்கிறான். அருகில் இருப்பவர்கள் தொல்லை செய்கிறார்கள். பல கஷ்டங்களுக்கு பிறகு குளிர் பானம் அருந்த செல்கிறான். அங்கும் அவனுக்கு அவன் விரும்பியது கிடைக்கவில்லை.
கடைசியாக தான் விரும்பிய பானத்தை குடித்துவிட்டு ஏப்பம் விட்டுச் செல்கிறான்.

1.   பன்னாட்டு குளிர் பானங்கள் குடித்த பிறகு இப்படித்தான் ஏப்பம் வருமா?
2.   இதே விளம்பரத்தை தனது தாய் திருநாட்டில் இதை போன்றே வெளியிடுவார்களா?
3.   இந்தியாவில் மட்டும் தான் இப்படி இந்த பானம் குடித்தபிறகு ஏப்பம் வருமா?

இதை விட coca cola தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்ள முடியாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதே பயத்தின் முதன்னைக் காரணமாக இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது மகன் வீட்டில் நுழைகிறான். நோயுற்று படுத்திருக்கிறேன்.
மிகக் கலவரமாக ' என்னா ஆச்சு'
இயலாமையை கைகளால் காண்பிக்கிறேன். 'பேச முடியவில்லை'
அவன் கண்களில் ஒளிக்கீற்று.
அப்ப இன்னைக்கு ஜாலியா  T.V பாக்கலாம், system எடுத்துக்கிட்டு games விளையாடலாம், tab வச்சி விளையாடலாம். உங்க மொபைல்லயும்  games ஆடலாம். Thank you GOD.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி:
இன்னைக்கு ஞாயிற்று கிழம. அதால நீங்க என்ன செய்றீங்கன்னா துணி எல்லாம் தொவைக்கிறீங்க, வீட்ட க்ளீன் பண்றீங்க..........
என்னங்க, சொல்லி முடிக்கிறத்துக்குள்ள சாயங்காலம் ஆகிடுச்சி.
கணவன்: ????

Monday, May 18, 2015

காற்றில் ஆடும் சருகுகள் - 17

ஃப்ஸ்ட் செமஸ்டர் மேக்ஸ் அரியரையே இன்னும் முடிக்கல. இந்த புரபசர் எல்லாம் எப்படி 'Post Dr.' பண்றாங்க?. இப்படிக்கு மேக்ஸ் புக்கை பரிச்சைக்கு முன் தினம் எந்திரன் ஸ்டைலில் ஸ்கேன் செய்வோர் சங்கம்.
***************************************************************************** 
வாகனத்தில் போகும் போது 'Horn' அடித்துவிட்டு, நாமே ஒதுங்கி செல்வது இந்த தாய் திரு தமிழ் நாட்டில் மட்டும் தான். இப்படிக்கு புதுப்பேட்டை போய் வாகனம் வாங்கலாமா என்று 30 மாதங்களாக யோசிப்போர் சங்கம்.
 *****************************************************************************
நாம ஜெராக்ஸ் எடுக்க இவ்வளவு கஷ்ட பட வேண்டியதாக இருக்கு. இவிங்க எப்படி இந்த 750 பக்கம் புத்தகம் எழுதி இருப்பாங்க? இப்படிக்கு எக்ஸாம் முதல் நாள் ஜெராக்ஸ் எடுக்க காத்திருக்கையில் கரண்ட் போனபின் புத்தகம் படிப்பது பற்றி யோசிப்போர் சங்கம்.
***************************************************************************** 
Pre-paid sim card வச்சிகிட்டு rate cutter முடிச்சி 7.01, 9.01 ன்னு முடிற காலுக்கு 1 ரூ இழக்கறவனுக்குத் தான் தெரியும் 1 ரூ வலி. இவன் Rate cutter முடிஞ்து  நண்பனிடன் வாங்கிய பத்து ரூபாய்க்கு recharge செய்து.Call  பேசி. அதில் ஒன்பது ரூபாயை இழந்தவர்கள் சங்கம்.
***************************************************************************** 
நண்பரின் குமுறல்.
பொண்டாட்டிகிட்ட நல்ல பேர எடுக்க முடியாது போலடா.
ஏண்டா?
'நேத்து ராத்ரி மாடியில காய்ர துணிய எடுத்துகிட்டு வர சொன்னா. ராத்ரி எடுத்துகிட்டு வரல. திட்டுவான்னு காலைல எடுத்துகிட்டு வந்தேன். குளிர்ல எல்லா துணியும் நனைஞ்சி போய் இருக்கு. இத போய் எடுத்துகிட்டு வந்து ஒட்டிக்கி ரெட்டி வேல வக்கிறீங்களே' அப்படீங்கறா. நான் என்னடா செய்ய?
செத்தாண்டா சேகரு.
***************************************************************************** 
Printer ink எவ்வளவு கெடுதல்ன்னு பேசுறோம். ஆனா, அது பிரிண்ட் ஆன பேப்பரை, பேப்பர் ப்ளேட்டாக பயன் படுத்துகிறோம். இதுல எதாவது கெடுதல் இருக்குமா? இவன் பிரிண்ட் ஆன பேப்பரில் சமோசா சாப்பிட்டு விட்டு, அதில் உள்ள கெமிக்கல் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற துடிப்போர் சங்கம்.
***************************************************************************** 
ஊட்டச்சத்து மிகுந்த குடிநீர். ஒரு வேளை ஏதாவது அரசியல்வாதி இந்த ‘Ad’ ready செய்திருப்பானோ?
11ரூ டிக்கெட்டுக்கு 10 ரூ குடுத்தா 1ரூ சில்லறைய கரிட்டா கேக்கிறான் கண்டக்டர். ஆனா 11ரூ டிக்கெட்டுக்கு 12 ரூ குடுத்தா மீதி சில்லறை இல்லேங்கிறான். அதோட கூடவே நம்மை பிச்சைக்காரனை விட மோசமா பாக்கிறான். இது தான் வாழ்க்கை. இவன் மனைவியிடம் வாங்கிய காசில் தண்ணி அடித்து விட்டு மீதி சில்லறை வாங்காமல் தத்துவவாதி ஆக முயற்சிப்போர் சங்கம்
***************************************************************************** 
சாதாரண பிரசவ செலவில் cesarean டெலிவரி செய்யப்படும். உங்க வியாபார ஆர்வத்திற்கு ஒரு அளவே இல்லையாடா?
***************************************************************************** 
Srusti Montessori School – Drawing, Painting, Music, spoken English/Hindi, abacus etc., உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லயாடா. விட்டா வயத்துல வளர்ர குழந்தைக்கு கூட IIT class க்கு training குடுப்பீங்க போல இருக்குடா.

Saturday, May 2, 2015

புத்தகங்களுக்கு அட்டை போடுதல்

காலை 8 மணி. எழுத்த உட ன் புயல் ஆரம்பம் ஆனது.

அப்பா, இன்னைக்கு புக்ஸ் கொடுக்குறாங்க, மறக்காம வாங்கிட்டு வரணும்,
சரிடா. வாங்கிகிட்டு வரேன்.
சொல்றீங்களே தவிர, நீங்க செய்ய மாட்டீங்க. (அவங்க அம்மா வாய்ஸ் அப்படீயே...)
சரிடா. வாங்கிகிட்டு வரேன்.
மறுபடியும் சொல்றேன். மறக்காக புக்ஸ் வாங்கிட்டு வந்துடூங்க. இன்னைக்கு விட்டா மறுபடியும் கொடுக்க மாட்டாங்க.உங்களுக்கு எங்க ஸ்கூல் பத்தி தெரியாது. அதால தான் சொல்றேன். நீங்க 12 மணிக்கு மேல போனீங்கன்னா, புக்ஸ் தீர்ந்து போயிடும்.
இருடா, அட்ட போடணும்னு சொல்லுவதானே. அப்ப வச்சிகிறேன்.(Mind voice)

பத்து மணிக்கு எல்லா புக்ஸ்ம் வாங்கி வந்து விட்டேன்.

11.30 விளையாடிவிட்டு வந்தான்.
ஏம்பா, புக்ஸ் வாங்கி கிட்டு வந்துட்டியா?
இன்னும் இல்லடா.
உங்க கிட்ட ஒரு வேலை சொல்லக்கூடாது. நீங்க எப்பவுமே இப்படித்தான். இன்னும் ரெண்டு நாள்ல ஸ்கூல் ஆரம்பிச்சி விடுவாங்க.

மெல்லிய இதழ் புன்னகை என்னுள்.
அப்பா, நீங்க நிச்சயமா வாங்கி கிட்டு வந்து இருப்பீங்க. தேடி கண்டுபிடித்து விட்டு வந்து செல்ல முத்தம் தந்தான். ‘அப்பான்னா அப்பாத்தான்’.

ஆமாம், என்ன wrappers காணும்.
அதான் plastic wrappers கொடுத்து இருக்காங்க தானே. அத வச்சி அட்டை போட வேண்டியது தான். ரொம்ப சிம்பிள். Front லயும் back லயும் insert பண்ணிட்டு இப்படி ஒட்டி விட வேண்டயது தான். இனிமே உங்க கிட்ட அட்டை போட சொல்லி கேட்கவே மாட்டேன்.

முப்பது வருடத்திற்கு மேல் கூடவே இருந்து அட்டை போடும் நிமிடங்களையும் ஒரு plastic wrapper பிரித்து விட்டது.

தந்தையர்களை தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் தொடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆற்று நீரின் ஒட்டத்தில் எது முதல் நீர் எது கடைசி நீர்?