Ethnic and party wear for your infants. உங்க வியாபார அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: பிரளய காலம் - உதாரணம் தருக.
மாணவன் : சமையல் குறிப்பை TVல் பார்த்து எங்க அம்மா எழுத ஆரம்பிக்கும்
தருணங்கள்.
செத்தாண்டா சேகரு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?
சில தினங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல ஸுகர் இருக்கா?
சில மாதங்களுக்கு பின்
ஏங்க, வீட்ட உப்பு மொளா, புளீ இல்லீங்க.
இருடி, பேஸ்ட் கம்பெனி காரணுக்கு சொல்லி அனுப்புறேன்.
உங்க கண்டுபிடிப்புல தீய போட்டு கொளுத்த.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கிளினிக் வாசல் board -ல்
தொல்காப்பியன், தொண்டை சிகிச்சை நிபுணர்(தங்க மெடல் பெற்றவர்)
உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Coca Cola - Train Advert 2015
ஒரு மனிதன் ரயில் ஏற முயற்சிக்கிறான். இடம் பிடிக்கிறான். அருகில்
இருப்பவர்கள் தொல்லை செய்கிறார்கள். பல கஷ்டங்களுக்கு பிறகு குளிர் பானம் அருந்த
செல்கிறான். அங்கும் அவனுக்கு அவன் விரும்பியது கிடைக்கவில்லை.
கடைசியாக தான் விரும்பிய பானத்தை குடித்துவிட்டு ஏப்பம் விட்டுச்
செல்கிறான்.
1. பன்னாட்டு குளிர்
பானங்கள் குடித்த பிறகு இப்படித்தான் ஏப்பம் வருமா?
2. இதே விளம்பரத்தை தனது
தாய் திருநாட்டில் இதை போன்றே வெளியிடுவார்களா?
3. இந்தியாவில் மட்டும்
தான் இப்படி இந்த பானம் குடித்தபிறகு ஏப்பம் வருமா?
இதை விட coca cola தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்ள முடியாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதே பயத்தின் முதன்னைக் காரணமாக இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது மகன் வீட்டில் நுழைகிறான். நோயுற்று படுத்திருக்கிறேன்.
மிகக் கலவரமாக ' என்னா ஆச்சு'
இயலாமையை கைகளால் காண்பிக்கிறேன். 'பேச முடியவில்லை'
அவன் கண்களில் ஒளிக்கீற்று.
அப்ப இன்னைக்கு ஜாலியா T.V பாக்கலாம், system எடுத்துக்கிட்டு games விளையாடலாம், tab வச்சி விளையாடலாம். உங்க மொபைல்லயும் games ஆடலாம். Thank you GOD.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி:
இன்னைக்கு ஞாயிற்று கிழம. அதால நீங்க என்ன செய்றீங்கன்னா துணி எல்லாம் தொவைக்கிறீங்க, வீட்ட க்ளீன் பண்றீங்க..........
என்னங்க, சொல்லி முடிக்கிறத்துக்குள்ள சாயங்காலம் ஆகிடுச்சி.
கணவன்: ????
No comments:
Post a Comment