Saturday, May 2, 2015

புத்தகங்களுக்கு அட்டை போடுதல்




காலை 8 மணி. எழுத்த உட ன் புயல் ஆரம்பம் ஆனது.

அப்பா, இன்னைக்கு புக்ஸ் கொடுக்குறாங்க, மறக்காம வாங்கிட்டு வரணும்,
சரிடா. வாங்கிகிட்டு வரேன்.
சொல்றீங்களே தவிர, நீங்க செய்ய மாட்டீங்க. (அவங்க அம்மா வாய்ஸ் அப்படீயே...)
சரிடா. வாங்கிகிட்டு வரேன்.
மறுபடியும் சொல்றேன். மறக்காக புக்ஸ் வாங்கிட்டு வந்துடூங்க. இன்னைக்கு விட்டா மறுபடியும் கொடுக்க மாட்டாங்க.உங்களுக்கு எங்க ஸ்கூல் பத்தி தெரியாது. அதால தான் சொல்றேன். நீங்க 12 மணிக்கு மேல போனீங்கன்னா, புக்ஸ் தீர்ந்து போயிடும்.
இருடா, அட்ட போடணும்னு சொல்லுவதானே. அப்ப வச்சிகிறேன்.(Mind voice)

பத்து மணிக்கு எல்லா புக்ஸ்ம் வாங்கி வந்து விட்டேன்.

11.30 விளையாடிவிட்டு வந்தான்.
ஏம்பா, புக்ஸ் வாங்கி கிட்டு வந்துட்டியா?
இன்னும் இல்லடா.
உங்க கிட்ட ஒரு வேலை சொல்லக்கூடாது. நீங்க எப்பவுமே இப்படித்தான். இன்னும் ரெண்டு நாள்ல ஸ்கூல் ஆரம்பிச்சி விடுவாங்க.

மெல்லிய இதழ் புன்னகை என்னுள்.
அப்பா, நீங்க நிச்சயமா வாங்கி கிட்டு வந்து இருப்பீங்க. தேடி கண்டுபிடித்து விட்டு வந்து செல்ல முத்தம் தந்தான். ‘அப்பான்னா அப்பாத்தான்’.

ஆமாம், என்ன wrappers காணும்.
அதான் plastic wrappers கொடுத்து இருக்காங்க தானே. அத வச்சி அட்டை போட வேண்டியது தான். ரொம்ப சிம்பிள். Front லயும் back லயும் insert பண்ணிட்டு இப்படி ஒட்டி விட வேண்டயது தான். இனிமே உங்க கிட்ட அட்டை போட சொல்லி கேட்கவே மாட்டேன்.

முப்பது வருடத்திற்கு மேல் கூடவே இருந்து அட்டை போடும் நிமிடங்களையும் ஒரு plastic wrapper பிரித்து விட்டது.

தந்தையர்களை தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் தொடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆற்று நீரின் ஒட்டத்தில் எது முதல் நீர் எது கடைசி நீர்?

2 comments:


  1. நண்பரின் பயணங்கள் இனிதே ஆரம்பம்!!

    உங்கள் பின்னால் எனது பயணங்கள் தொடறும் :)

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி. வாருங்கள் இணைந்து பயணம் செய்வோம்.

    ReplyDelete