ஃப்ஸ்ட் செமஸ்டர் மேக்ஸ் அரியரையே இன்னும் முடிக்கல. இந்த புரபசர் எல்லாம் எப்படி 'Post
Dr.' பண்றாங்க?. இப்படிக்கு மேக்ஸ் புக்கை பரிச்சைக்கு முன் தினம் எந்திரன் ஸ்டைலில் ஸ்கேன் செய்வோர் சங்கம்.
வாகனத்தில் போகும் போது 'Horn' அடித்துவிட்டு, நாமே ஒதுங்கி செல்வது இந்த தாய் திரு தமிழ் நாட்டில் மட்டும் தான். இப்படிக்கு புதுப்பேட்டை போய் வாகனம் வாங்கலாமா என்று 30 மாதங்களாக யோசிப்போர் சங்கம்.
நாம ஜெராக்ஸ் எடுக்க இவ்வளவு கஷ்ட பட வேண்டியதாக இருக்கு. இவிங்க எப்படி
இந்த 750 பக்கம் புத்தகம் எழுதி இருப்பாங்க? இப்படிக்கு எக்ஸாம் முதல் நாள்
ஜெராக்ஸ் எடுக்க காத்திருக்கையில் கரண்ட் போனபின் புத்தகம் படிப்பது பற்றி
யோசிப்போர் சங்கம்.
Pre-paid sim card வச்சிகிட்டு rate cutter முடிச்சி 7.01, 9.01 ன்னு
முடிற காலுக்கு 1 ரூ இழக்கறவனுக்குத் தான் தெரியும் 1 ரூ வலி. இவன் Rate cutter
முடிஞ்து நண்பனிடன் வாங்கிய பத்து ரூபாய்க்கு recharge
செய்து.Call பேசி. அதில் ஒன்பது ரூபாயை இழந்தவர்கள் சங்கம்.
நண்பரின் குமுறல்.
பொண்டாட்டிகிட்ட நல்ல பேர எடுக்க முடியாது போலடா.
ஏண்டா?
'நேத்து ராத்ரி மாடியில காய்ர துணிய எடுத்துகிட்டு வர சொன்னா. ராத்ரி
எடுத்துகிட்டு வரல. திட்டுவான்னு காலைல எடுத்துகிட்டு வந்தேன். குளிர்ல எல்லா
துணியும் நனைஞ்சி போய் இருக்கு. இத போய் எடுத்துகிட்டு வந்து ஒட்டிக்கி ரெட்டி வேல
வக்கிறீங்களே' அப்படீங்கறா. நான் என்னடா செய்ய?
செத்தாண்டா சேகரு.
Printer ink எவ்வளவு கெடுதல்ன்னு பேசுறோம். ஆனா, அது பிரிண்ட் ஆன பேப்பரை, பேப்பர் ப்ளேட்டாக பயன் படுத்துகிறோம். இதுல எதாவது கெடுதல் இருக்குமா? இவன் பிரிண்ட் ஆன பேப்பரில் சமோசா சாப்பிட்டு விட்டு, அதில் உள்ள கெமிக்கல் பற்றி ஆராய்ச்சி செய்து
முனைவர் பட்டம் பெற துடிப்போர் சங்கம்.
*****************************************************************************
ஊட்டச்சத்து மிகுந்த குடிநீர். ஒரு வேளை ஏதாவது அரசியல்வாதி இந்த
‘Ad’ ready செய்திருப்பானோ?
11ரூ டிக்கெட்டுக்கு 10 ரூ குடுத்தா 1ரூ சில்லறைய கரிட்டா கேக்கிறான்
கண்டக்டர். ஆனா 11ரூ டிக்கெட்டுக்கு 12 ரூ குடுத்தா மீதி சில்லறை இல்லேங்கிறான்.
அதோட கூடவே நம்மை பிச்சைக்காரனை விட மோசமா பாக்கிறான். இது தான் வாழ்க்கை. இவன்
மனைவியிடம் வாங்கிய காசில் தண்ணி அடித்து விட்டு மீதி சில்லறை வாங்காமல்
தத்துவவாதி ஆக முயற்சிப்போர் சங்கம்
சாதாரண பிரசவ செலவில் cesarean டெலிவரி செய்யப்படும். உங்க வியாபார ஆர்வத்திற்கு ஒரு
அளவே இல்லையாடா?
Srusti Montessori School – Drawing, Painting, Music, spoken
English/Hindi, abacus etc., உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லயாடா. விட்டா வயத்துல
வளர்ர குழந்தைக்கு கூட IIT class க்கு training குடுப்பீங்க போல இருக்குடா.
No comments:
Post a Comment