இது என் பதினெண்
வயதுகளில் ஒலிக்கத் துவங்கிய பாடல்.
படம் : பன்னீர்
புஷ்பங்கள்.
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
வாடைக்காற்று வீசத் துவங்குகிறது. நண்பர்கள் வட்டம் மெதுவாக வேடிக்கைப் பார்க்கிறது. கைகளில் இருப்பதை விளையாட்டாய் பேசிக் கொண்டே விளையாடத் துவங்குகிறாள் தலைவி. மரத்தில் தலைவன். மிதி வண்டி அருகினில் நாயகி.
உணவு படைக்கப்படும் இடத்தில் இருவரும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். புன்னகை இருவருக்கும்.
வாகனத்தில் வருகையில் கை அசைக்கும் காட்டுப் பூப் போல இசை நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாயகி வாசிக்கத் துவங்குகிறாள். நாயகன் தானும் வாசிக்க முற்படுகிறான். பல முறைகள் நிகழ்கிறது.
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே... கோலம் இட்டதே...
தேடிடுதே பெண் காற்றின் ராகம்...
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
தலைவி தேடுகிறாள். தோற்றுப் போகிறாள். தலைவன் 'கொக்கு' காண்பிக்கிறான்.
பூமலர் தூவும் பூ மரம் யாவும்
ம் ம் ம்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
அ..அ..அ
பூ விரலாலும் பொன் இதழாலும்
ம் ம் ம்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே எண்ணம் மிஞ்சுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
புகை வண்டியில் பயணம் தொடர்கிறது, விளையாட்டு விளையாட்டு என நகர்ந்து கொண்டிருக்கிறது(கூடவே வாழ்வும்)
நாயகி நேரம் கழித்து ஓடி வருகிறாள். தலைவனிடம் கோபம் மட்டுமே இருக்கிறது. தலைவி கை குலுக்கி கோபத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறாள். தலைவன் முரண்படுகிறான். பிறகு கோபம் மறைகிறது இருவருக்கும்.
இருவரும் மீன் பிடிக்கிறார்கள். தூண்டிலில் மீன் சிக்குகிறது. ஒரு சிறிய பயமுறுத்தல் தொடங்குகிறது.
சைக்கிளில் பயணம் தொடர்கிறது. கதிரவன் சாட்ஷியாக இருக்கிறான்.
பள்ளிக் கூட வாழ்வியல் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது.
காலம் உறைத்துவிட்ட தளிர்கள் இன்னும் இளமையாய், இனிமையாய்.
பன்னீர் புஷ்பங்கள் 1981 ஆம் ஆண்டு பி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ReplyDeleteஆனந்த ராகம் கேட்கும் காலம் - பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : உமா ரமணன்
இசைஞானி இளையராசா அவர்களின் இசை மனத்தை நெகிழச் செய்வது நிச்சயம்!
வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி. ஆனந்த ராகம் பாடல் குறித்தும் எழுத உள்ளேன்.
ReplyDeleteThanks to your coments,
ReplyDeleteenjoyed watching the video in youtube.
Thanks a lot uncle.
ReplyDelete