Saturday, May 28, 2016

IT - தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 5




2015 
ஆண்டு கணக்குப்படி ஆண்டு ஒன்றுக்கு 5.8 மில்லியன் பட்டதாரிகள் இருப்பில் உள்ளவர்களுடன் (வேறு எப்படி சொல்ல முடியும்) சேர்க்கப்படுகிறார்கள்.

உலக சந்தையினை முன்வைத்து(அமெரிக்கா என்றே கொள்ளலாம்) செலவுகள்  என்பது 3 - 4 மடங்கு வரை குறைவு

இதனால் தான், வெளிநாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் I.T நிறுவனங்கள் தாராளமயமாக்கலுக்கு பிறகு இங்கு தடம் பதித்தன. சராசரியாக 45% முதல் 50% வரையில் அனைத்து திட்டங்களையும் முடித்து விடமுடியும். மற்றவை லாபம் தான். லாபத்தில் குறையும் போது தான் நிறுவனங்கள் தாங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லு ஜல்லியடிக்கின்றன.(நன்றி சுஜாதா சார்)

நாஸ்காம் வெளியிட்டுள்ள  மார்ச் 2016 அறிக்கையின் படி தகவல் தொழில் நுட்பத் துறை எந்த வித ஏற்றம், இறக்கம் இல்லாமல் $118 பில்லியன் அளவிலே இருக்கும். வளர்ச்சி விகிதம் 11.5% - 12.0% மட்டுமே.இது எதிர்பார்க்கப்பட்ட 13% - 15% வளர்ச்சியை விட குறைவு.

தெளிவான திட்டமும் நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வரவு செலவு திட்டம் ஆண்டு ஒன்றுக்கு 11.7%. உலக நாடுகள் இதற்கு 1% மட்டுமே செலவழிக்கின்றன.

மாறி வரும் நாணய மதிப்பு, நிலையற்ற அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் இத் துறையை மிக வேகமாக கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் நாஸ்காம் தனது 2016 - 2017 ஆண்டிற்கான ஏறுமதி வளர்ச்சியினை 12% முதல் 14% இருந்து 10% முதல் 12% ஆக குறைத்துள்ளது.

வரும் 2017ம் ஆண்டு கணக்குப்படி இந் நிறுவனங்கள் 30% வரை  பாதுகாப்பு மற்றும் இணக்கம் (security and compliance) ஆபத்துக்கால வரவு செலவு திட்டதிற்காக செலவழிக்க இருக்கின்றன. 10% ஆட்கள் இந்த பாதுகாப்பு செய்பாடுகளுக்காக செயல்படுவார்கள். இது 2014ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.

தன்னிடம் உள்ளவர்கள் இத்தனை பேர் இத்தனை விதமான சான்றிதழ்(certification)  பெற்றிருக்கிறார்கள் என்பது போன்று நிலைப்பாடுகள் கொண்ட நிறுவனங்களும் உண்டு. அவர்களுக்கு வேலை உண்டோ இல்லையே அவர்களுக்கு தரப்படும் விலை மிக அதிகம். இதை இங்கே குறிப்பிடக் காரணம் மிக மிக அதிகமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்.

இது இத்துறை சம்மந்தமான ஒரு பொதுவான பதிவு மட்டுமே. இங்கு யாரும் வேலை பார்க்கக் கூடாதா என்பவர்களுக்கு என் பதில்.

·   நீங்கள் சுமாராக 7 முதல் 10 வருடம் மட்டுமே இத்துறையில் வேலை பார்க்க முடியும். அதுபற்றி கவலை இல்லை எனில் இத்துறையையில் சேரலாம்.
·   மிகச் சிறந்த அறிவாளி, என்னால் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் உள்ளவர்கள் சேரலாம்.
· வருங்காலத்தில் எத்தனை பெரிய வியாதி வந்தாலும் கவலை இல்லை, எனது குடும்பம் என்னை கவனித்துக் கொள்ளும் என்பவர்கள்  சேரலாம்.
·   இது எதுவும் சரியாக வராது, ஆனால், என்னால் மிக அதிகமாக சொம்பு தூக்க முடியும் என்பவர்கள் சர்வ நிச்சயமாக நீண்ட கால நோக்குடன் இத் துறையே தேர்ந்து எடுக்கலாம். ஏனெனில் மகுடம் உங்களுக்குத் தான் காத்திருக்கிறது.

முற்றும்.

புகைப்படம் : Karthik Pasupathy

Wednesday, May 25, 2016

மரபணு மாற்றம் - மயானம் நோக்கிய பயணம்



மரபணு மாற்றம் - மயானம் நோக்கிய பயணம் - முன்னுரை

ஒரு தேசத்தை வேரோடு அழிக்க பல முறைகள் உள்ளன. அவற்றின் கலாச்சாரம் அழித்தல், இடங்களை அழித்தல் போன்ற பல முறைகள் உள்ளன. அவற்றின் முதன்மையானதும், முக்கியமானதாகவும் இருப்பது உணவு முறைகளை மாற்றுவது.

மாறிவரும் மக்கட்தொகைக்கு ஏற்ப உணவுப் பெருக்கம் என்பது தவிர்க்க இயலாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உணவினை முன்வைத்து அரசும் பன்னாட்டு அரசியல் வாதிகள்(நிறுவனங்கள்) நடத்தும் கூத்துக்கள் எண்ணில் அடங்காதவை.

மரபணு மாற்றத்தின் நோக்கம் பூச்சிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்தல், நோய் எதிர்ப்பு, ஊட்டச் சத்து மிக்க பயிர்கள், கெடாதத் தன்மை, விளைச்சல் அதிகரிப்பு, அதிக உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் செயற்கை உடல் உறுப்புகள்  செயற்கை இன்சுலீன் எனப் பல பொய்யான காரணங்களை பட்டியல் இடப்பட்டாலும், 'எத்தனை உயிர் அழிந்தாலும் எனது நோக்கம் பணம் சம்பாதிப்பது' எனும் 'உயரிய' நோக்கம் இதன் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

இதனால் ஏற்படும் வலியை, கஷ்டங்களை, பாதிப்புகளை உணர்ந்த நாடுகளான இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, ரொமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் அங்கு மாற்றுப் பயிர்களுக்கு தடை விதித்து விட்டன.

மாற்றங்கள் பயிர், காய்கறிகள், பழங்கள் எனப் பலவகைப்பட்டன.


  • பயன்படுத்தப்படும் வழி முறைகள்
  • கவலைகள் - உடல் நலம் சார்ந்து
  • கவலைகள் - சூழலியல் சார்ந்து
  • கவலைகள் - பொருளாதாரம் சார்ந்து
  • கவலைகள் - சோதனை எலிகளாகும் இந்தியர்கள்

ஆகிய தலைப்பு குறித்து எழுத உள்ளேன்.

புகைப்படம் : R.s.s.K Clicks


Tuesday, May 17, 2016

IT - தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 4





தான் வாழ பிறரை கெடுக்கும் மனிதர்கள் (அனைத்து நிலைகளிலும்)


தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மிகப் பெரிய திட்ட நோக்கம், இலக்கங்கள் இல்லாமல் தொடங்கப்படுகின்றன.(சிவாஜி  : பார்த்த வேலை – Software Solution Architect).

அவைகள் தொடங்கப்படும் காலங்கட்டங்களில் அந்த இடங்களில் அங்கு என்ன மாதிரியான மனிதர்களும், படிப்புகளும் இருக்கின்றன. அவைகள் எப்படி பயன்பாடு இருக்கும் போன்ற விஷயங்களை நினைப்பது இல்லை.

நுட்பம் - 1

.ம் - B.C.A படித்த ஒருவன் மென்பொருள் துறையில் நுழைவதாக வைத்துக் கொள்வோம். மேலும் அந்த நிறுவனத்தில் 10 வருடம் அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கொள்வோம். இக்கால கட்டங்களில் அவனுக்கு அந்த நிறுவனத்தில் அனைத்து விஷயங்களும் தெரிந்து விடும்.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு Master Degree படித்த ஒருவன் அங்கு வரும்போது வரும் நபருக்கு அவன் அடிப்படை விஷயங்களை எதுவும் சொல்லித் தரமாட்டான். (எவனாக இருப்பினும் சொல்லித் தரமாட்டான் என்பது வேறு கதை.) இது matter of survival  என்பதை முன்வைத்தது.

நுட்பம் – 2

நிறுவனத்தில் மேல் மட்டக் குழு விரிவாக்கம் பற்றி பேச கூடும்.
நம்ம நிறுவனத்தினை எப்படி விரிவுபடுத்தலாம். நல்ல idea குடுத்தா உங்களுக்கு promotion.
சார், நான் என்ன சொல்ல வரேன்னா, நம்ம Mr.X இருக்கானே, அவன் குடுக்ற வேலையை மட்டும் செய்யறான். அவன கழட்டி விட்டா 12 லட்சம் மிச்ச மாகும். அவனுக்கு பதிலா 2 லட்சத்தில 4 பேர வேலைக்கு எடுத்துக்கலாம். நம்ம Mr.Y க்கு புரொமோஷன்னு சொல்லி அவனுக்கு 3 லட்சம் கொடுத்தா 11 லட்சத்தில எல்லாம் முடிச்சிடும் சார்.

நுட்பம் – 3

தற்போதைய காலங்கட்டங்களில் (பொதுவாக) 32 - 35 வயது என்பது மனிதர்கள் வாழத்துவங்கும் காலம். எல்லா நிறுவனங்களுக்கும் இது தெரியும். எல்லோரும் அங்குதான் கை வைக்கிறார்கள். ‘புடிச்சா வேலை பாருங்க, புடிக்கலைன்னா, பேப்பர் போட்டுட்டு போக வேண்டியது தானே’ இவ்வாறு மன அழுத்தம் உண்டாக்கி வெளியே தள்ளப்படும் வகைகளும் உண்டு..

நுட்பம் – 4

இருக்கும் இடங்களில் மிகச் சிறந்த நட்புக்கள் (வேறு என்ன சொல்ல) உண்டாவது உண்டு.
எனக்கு ஏதாவது புமோஷனுக்கு ஏற்பாடு செய்ய மாட்டீங்களா?
கவலைய விடு டியர், நம்ம Mr. X இருக்கான்ல, அவனை ‘வேலையே செய்யாதவன்’னு சொல்லி அடுத்த மாசம் தூக்றோம். அப்புறம் நீ தான் Team Leader.
அவர் 10 வருஷமா இங்க இருக்காறே?
நீ ஏன் அதப் பத்தி கவலைப்பட்ற. இப்ப ஏதாவது Treat  உண்டா?

நுட்பம் – 5

ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவரை வெளியே தள்ள பல காரணங்களைத் தேடுவார்கள்
·      Proper in time (out time பற்றி கவலை இல்லை). சத்தியமாகச் சொல்கிறேன்.
·      வேலைகளை குறித்த காலத்தில் முடித்துக் கொடுக்கும் திறமை
·      வேலை விடுப்பு எடுத்த நாட்கள்
·      எதிர் பால் மக்களுடன் கொஞ்சம் முன்னுக்கு பின்னாக இருத்தல்
·      மற்றவர்களும் பழகும் தன்மை

மேற் கூறியவைகள் எவையும் இல்லை எனில் 10 வருடங்களுக்கு பிறகு 'வேலையே செய்யவில்லை' என்று உண்மையை கண்டறிதல்.

நுட்பம் – 6

மச்சான்(பாசக்கார பய புள்ளங்க), அவன எப்டி வேலை விட்டு விரட்டுரதுன்னு தெரியலடா?

டேய், நம்ம கிட்ட 6 மாசத்துக்கு எல்லாருக்கும் work load details இருக்கு. DB ல work load hours ஐ குறைச்சி போடு. 2 வாரத்து milestone ஐ 1 வார milestone ஆ போடு. இத தவிர daily milestone தினமும் 2 போடு. ஓடியே போய்டுவான். 


சூப்பர் ஐடியா மச்சான். வா ஒரு பீர் சாப்டு இன்னும் பேசுவோம்.

இங்கு பிரதானமாக இருப்பது 'வேலை செய்யவில்லை' என்பதை கண்டுபிடிப்பது தான்.

அடுத்த பதிவு :பொருளாதார சீர்திருத்தம்/முன்னேற்றம்  முன்வைத்து

தொடரும்...

புகைபடம் : Karthik Pasupathy